கெர்போட்ட நிவர்த்தி என்றால் என்ன?

Kerpotta Nivarthi Meaning in Tamil

கெர்போட்ட நிவர்த்தி – Kerpotta Nivarthi Meaning in Tamil

தோழர்கள்.. மற்றும் தோழிகளுக்கு பொதுநலம்.காம்-யின் வணக்கம்.. பொதுவாக தினசரி காலண்டரில் கெர்போட்ட நிவர்த்தி என்று இருக்கும் தெரியுமா? அது ஏன் எதற்கு காலண்டரில் குறிப்பிடப்படுகிறது என்று தெரியுமா? பலர் இதனை எதும் விசேஷ தினமோ அல்லது மார்கழி மாத கோவில் திருநாளோஎன்று கூட நினைக்கலாம். உண்மையில் இது, தமிழர்களின் அடுத்த வருட மழைக் கணிப்பு முறை ஆகும். சரி இந்த கெர்போட்ட நிவர்த்தி என்றால் என்ன இந்த பதிவில் நாம் படித்தறியலாம் வாங்க.

கெர்போட்ட நிவர்த்தி என்றால் என்ன?

kerpotta nivarthi meaning in tamil – கெர்போட்ட நிவர்த்தி என்பது தமிழர்கள் அடுத்த வருட மழை கணிப்பு முறை. அதாவது “கரு ஓட்டம்” என்பதே, கர்ப்ப ஓட்டம் என்று மாறி பின்னர் கர்ப்போட்டம் என்றாகி, இன்று காலண்டர்களில் கெர்ப்போட்டம் என்று குறிப்பிடப்படுகிறது. நம்முடைய தமிழகத்தில், சூரியனின் சுழற்சியை மையமாக வைத்து சூரிய வழி மாதங்கள் பின்பற்றப்படுகிறது.

இது தவிர, வானியல் நட்சத்திரங்களை 27 மண்டலங்களாகவும், 12 ராசி மண்டலங்களாகவும் பிரித்துள்ளனர். அந்த வகையில், தனூர் மாதம் எனப்படும் மார்கழியில், சூரியன் தனூர் ராசி மண்டலத்தை கடக்கும் போது, பூராட நட்சித்திரத்தை கடக்க 14 நாட்களை எடுத்து கொள்கிறது. இந்நாட்களில், கருமேகங்கள் தெற்கு நோக்கி நகருவதை கண்டுகொள்ளலாம். இந்த 14 நாட்களும் கர்ப்போட்ட நாட்கள் ஆகும்.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

அதாவது இதனை மழை கருக்கொள்ளும் நாள் அல்லது மேகம் சூலாகும் நாள் என்று சொல்லப்படுகிறது. இதனை, பெண்ணின் பத்து மாத கர்ப்பகாலத்துடன் ஒப்பிடுங்கள். மார்கழியில் கர்ப்பம் தரிக்கும் பெண் ஒருவள், ஒன்பது மாதம் கழித்து புரட்டாசிக்கு பின் பிள்ளை பெறுவாள். அவ்வகையில் இந்த கர்போட்ட நாட்களில் மழை முறையாக சூல் கொண்டால், ஒன்பது மாதம் கழித்து, அடுத்த ஆண்டில் ஐப்பசி கார்த்திகையில் மழைபொழிவு அளவும் முறையாக இருக்கும். இந்த கர்போட்ட நாட்கள் தோராயமாக டிசம்பர் 28 முதல் ஐனவரி 11-ஆம் தேதி வரை அமைகிறது.

மார்கழி மாதம் அமவாசையில் இருந்து, அடுத்து வரும் 14 நாட்கள் ”கர்போட்ட நாட்கள்” என்று நினைவில் வைத்து கொள்வார்கள். இந்நாட்களில், லேசான தூறல் மெல்லிய சாரல் போன்ற மழை இருந்தால், மேகம் சரியாக கரு கட்டி இருக்கிறது என்று பொருள். எனவே வரும் அடுத்த ஆண்டு, நல்ல மழையை எதிர்பார்க்கலாம் என்றும்.

மாறாக கர்ப்போட்ட(கெர்போட்ட) நாட்களில், கனமழை பெய்து சூறைக்காற்று வீசினாலோ அல்லது கடும்வெயில் இருந்தாலோ மேகத்தின் கருக்கலைந்து விட்டது என்று பொருள். எனவே மார்கழியில் கன மழை பெய்தால், அடுத்த ஆண்டு பருவமழை பொய்க்கும் என அர்த்தம். இன்றய வாழ்க்கையின் மாறுபட்ட சூழலியல் கேடுகளும், பருவநிலை மாற்றமும் மேகத்தின் கருக்கலைக்கும் வில்லன்களாக உருவெடுப்பதால் தான், ஒவ்வொரு வருடமும் மழையளவு குறைகிறது. சரி தினசரி காலண்டரில் கெர்போட்ட நிவர்த்தி என ஏன் குறிப்பிடப்படுகிறது என்று தங்களுக்கு இப்பொழுது தங்களுக்கு தெளிவாக தெரிந்திருக்கும் என்று நம்புகின்றோம். இந்த பதிவை பொறுமையாக படித்ததற்கு நன்றி.

இன்றைய வானிலை செய்திகள்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –>Today Useful Information in tamil