வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கேரட் என்பதன் தமிழ் பெயர் இது தானா..?

Updated On: April 4, 2024 12:19 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Carrot Tamil Peyar 

பொதுநலம் பதிவின் வாசகர்களுக்கு வணக்கம்..! இன்று நம் பதிவின் வாயிலாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவலை பற்றி தான் பார்க்கபோகின்றோம். பொதுவாக இவ்வுலகில் பேசுவதற்கு எத்தனையோ மொழிகள் இருந்தாலும், நம் தாய் மொழியான தமிழுக்கு ஈடாகாது. நம் தமிழ் மொழியின் புகழை சொல்லிக்கொண்டே போகலாம். அந்த அளவிற்கு நம் தாய் மொழியானது உலகெங்கிலும் நிலைத்து நிற்கிறது.

என்ன தான் நாம் தமிழ் நாட்டில் தமிழர்களாக இருந்தால், மற்ற மொழிகள் பேசாமல் தமிழ் மட்டுமே பேசும் நபர்கள் என்று யாருமே இருக்க முடியாது. காரணம் நாம் பேசும் வார்த்தைகளில் சில வார்த்தைகள் ஆங்கிலத்திலும் இருக்கிறது. அப்படி நாம் தமிழ் என்று நினைத்து பேசும் ஆங்கில வார்த்தைகளில் ஓன்று தான் கேரட். எனவே நாம் கேரட் என்பதன் தமிழ் பெயர் என்னவென்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.

கேரட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

கேரட் என்பதன் தமிழ் பெயர் என்ன..? 

கேரட் என்பதன் தமிழ் பெயர் என்ன

பொதுவாக கேரட் பற்றி நம் அனைவருக்குமே தெரியும். கேரட் சாப்பிடுவது நம் உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. மேலும் கேரட்டில் இருக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ள நினைத்தால் கீழ் இருக்கும் லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

கேரட் என்பது ஒரு வேர் காய்கறியாகும். இந்த கேரட்டானது பெர்சியாவில் தோன்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் அது முதலில் ஆப்கானிசுத்தானின் பகுதிகளில் பயிரிடப்பட்டது என்றும் பிறகு நடுத்தரைக்கடல் பகுதிகளில் பயிரிடப்பட்டது என்றும் கூறுகிறார்கள்.

கேரட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

மேலும் கேரட் முதன் முதலில் அதன் இலைகள் மற்றும் விதைகளுக்காக தான் பயிரிடப்பட்டது. கேரட் என்பது அப்பியேசியே என்ற அம்பெல்லிஃபர் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இருபத்தாண்டுத் தாவரமாகும்.

இவ்வளவு சிறப்புகள் மற்றும் பயன்கள் உள்ள கேரட்டின் தமிழ் பெயர் மஞ்சள் முள்ளங்கி ஆகும். கேரட் முள்ளங்கி இனத்தை சேர்ந்த கிழக்கு வகையாகும்.

இந்த மஞ்சள் முள்ளங்கியில் பீட்டாக் கரோட்டீன் எனப்படும் சத்து அதிகமாக உள்ளது. இது உடலில் Vitamin A -வாக மாற்றப்படுகிறது. அதன் சாறு ஒரு உடல்நல மருந்தாக  பயன்படுத்தப்படுகிறது. மஞ்சள் முள்ளங்கி உட்கொள்ளுதல் கண்பார்வையை மேம்படுத்துகிறது.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now