கொய்த வீ இலக்கண குறிப்பு தருக..!
வணக்கம் தோழர்களே மற்றும் தோழிகளே.. பொதுநலம்.காம் பதிவில் இலக்கணம் குறிப்பு பற்றி பதிவு செய்து வருகிறோம். இலக்கணத்தில் கொய்த வீ என்ற சொல்லுக்கு என்ன இலக்கணம் குறிப்பு வரும் என்று குழப்பம் வரும் மாணவ மனைகளுக்கு இந்த பதவி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது இந்த பதிவில் கொய்த வீ என்பதற்கான இலக்கண குறிப்பு என்ன என்பதை பற்றி படித்து தெரிந்துகொண்டு பெயன்பெறுங்கள் நண்பர்களே.
கொய்த வீ இலக்கண குறிப்பு தருக..!
விடை: பெயரெச்சம் என்பதே கொய்த வீ ன் இலக்கண குறிப்பு ஆகும்.
பெயரெச்சம் என்றால் என்ன?
முற்றுப் பெறாத ஒரு வினைச்சொல் ஒரு பெயரைக்கொண்டு முடிந்தால் அது பெயரெச்சம் எனப்படும். இது “அ” என்ற விகுதியைக் கொண்டு முடியும். அதாவது ஓர் எச்ச வினை, பெயரைக் கொண்டு முடிவது பெயரெச்சம் ஆகும். இந்த பெயரெச்சம் 3 காலங்களிலும் வரும்.
அதற்கான எடுத்துக்காட்டு:-
- இறந்தகால பெயரெச்சம் – வந்த மாணவன்
- நிகழ்கால பெயரெச்சம் – வருகின்ற மாணவன்
- எதிர்கால பெயரெச்சம் – வரும் மாணவன்
பெயரெச்சம் உதாரணம்:
படித்த மாணவன் (படித்த = த்+அ)
படித்த – எச்ச வினை (முற்றுப்பெறாத வினைச்சொல்)
மாணவன் – பெயர்ச்சொல்
த – அ விகுதி
- நடந்த கிழவன்
- வாழ்ந்த மன்னன்
- வந்த தலைவர்
- ஓடிய குழந்தை
- செய்த மாணவன்
பெயரெச்சம் வகைகள்
- தெரிநிலை பெயரெச்சம்
- குறிப்பு பெயரெச்சம்
தெரிநிலை பெயரெச்சம்:
செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய 6 யும் உணர்த்தி பெயர்ச்சொல்லை கொண்டு முடிந்தால் அது தெரிநிலை பெயரெச்சம் எனப்படும்.
“அ, உம்” ஆகிய இரண்டு விகுதிகள் தெரிநிலை பெயரெச்சத்தில் காணப்படும்.
தெரிநிலை பெயரெச்சம் எடுத்துக்காட்டு:
- படித்த மாணவன்
- படிக்கின்ற மாணவன்
- படிக்கும் மாணவன்
குறிப்பு பெயரெச்சம்
காலம், செயலை உணர்த்தாமல் பண்பின் அடிப்படையில் பொருள் உணர்த்தி பெயர்ச்சொல்லை கொண்டு முடியும் எச்சம் குறிப்பு பெயரெச்சம் ஆகும்.
குறிப்பு பெயரெச்சம் “அ” என்ற விகுதியை பெற்று வரும்.
குறிப்பு பெயரெச்சம் எடுத்துக்காட்டு:
- நல்ல பையன்
- அழகிய மலர்
- பெரிய வீடு
- கரிய யானை
எதிர்மறை பெயரெச்சம்:
பெயரெச்சம் எதிர்மறையான பொருள் தருமாயின் அது எதிர்மறை பெயரெச்சம் எனப்படும்.
எடுத்துக்காட்டு:
- ஓடாத வண்டி
- படிக்காத பையன்
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஈற்று எழுத்து கெட்டு வரும் எதிர்மறை பெயரெச்சம் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் எனப்படும்.
“ஆ” விகுதியில் முடிவு பெறும்.
எடுத்துக்காட்டு:
- வாடாத மலர்
- எண்ணிலா உயிர்கள்
- தேரா மன்னன்
- செல்லா இடத்து
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |