சந்திர கிரகணம் நிகழும் போது கர்ப்பிணிகள் வெளியே வரலாமா..?

blood moon

சந்திர கிரகணம் கர்ப்பிணி பெண்கள்

வணக்கம் நண்பர்களே.. பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் சந்திர கிரகணம் மற்றும் சூரியகிரகம் என்று இரண்டு கிரகங்களும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. கிரகணம் என்பது மங்களகரமானதாக கருதப்படுவதில்லை என்பதால், இந்த நேரத்தில் சில வேலைகளைச் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த சந்திர கிரகணம் நிகழும்போது கர்ப்பிணி பெண்கள் வெளியே வரலாமா.. அதேபோல் வேறு என்னென்ன செயல்களை செய்யக்கூடாது போன்ற தகவல்களை இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கி மதியம் 12:20 மணிக்கு முடிவடையும். இந்த சந்திர கிரகணம் வட தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் தெரியும். இருப்பினும், இந்த கிரகணம் இந்தியாவில் காணப்படாது. கிரகணத்தின் போது கர்ப்பிணி பெண்கள், இதயம் பலவீனமாக இருப்பவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியில் செல்வதைத் தவிர்ப்பது நல்லது.

ஏனெனில், அப்படி வெளியே வரும் போது, கிரகணத்தின் போது ஏற்படும், கதிர் வீச்சுகள் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கும். இதனால், பிறக்ககூடிய குழந்தைகளுக்கு சில மாறுதல்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறதாம்.

கிரகத்தின் போது கர்ப்பிணிகள் என்ன செய்ய கூடாது:

கிரகணத்தின் போது கர்ப்பிணி பெண்கள் உணவு அருந்துதல் மற்றும் நீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக. கர்ப்பிணி பெண்கள் கிரகணத்தின் போது வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

இந்த நேரத்தில் கர்ப்பிணி பெண்கள் தையல், வெட்டுதல், சுத்தம் செய்தல் போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.

கிரகத்தின் போது கர்ப்பிணிகள் என்ன செய்ய வேண்டும்:

கிரணகத்துக்கு முன்பு முன்பும், பின்பும் வீட்டை கழுவிவிட்டு நாமும் குளிக்க வேண்டும். இந்த நேரத்தில், பல்வேறு செரிமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். கிரகணத்திற்கு முன்பு சமைக்கப்படும் எந்த உணவையும் உண்பது கூடாது.

சந்திர கிரகண நேரத்தில் இறைவனை வழிபடுதல் சிறந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. கிரகத்தில் இருந்து விடுபட சுப்ரபாதம், விநாயகர் ஸ்லோகம் ஆகியவை பாடலாம். புண்ணிய நதிகளில் ஸ்தானம் செய்யலாம். தானங்கள் வழங்கலாம். எனவே, கர்ப்பிணிகள் உங்கள் வீட்டில் இருந்தால், மேற்சொன்ன வழிமுறைகள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

கிரகணம் தொடங்கும் முன் சுமார் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே சாப்பிட்டு முடித்துவிடுவது நல்லது. அப்போது தான் உணவு செரிமானம் முடிந்து வயிறு தன் சமநிலையை அடைந்திருக்கும்.

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil