அரசு அலுவலகத்தில் சான்றிதழ்கள் அப்ளை பண்ண தேவைப்படும் ஆவணங்கள்..!

சான்றிதழ் தேவையான ஆவணங்கள் 

Application Documents For Government Offices in Tamil: வணக்கம் பொதுநலம் வாசகர்களே..! இன்று நீங்கள் படித்து தெரிந்துகொள்ள போகும் பதிவானது அனைவருக்கும் மிகவும் பயனுள்ள தகவல் தான். அப்படி என்ன பயனுள்ள தகவல் என்று கேட்கிறீர்களா? உங்களுக்கு உடனடியாக சாதி சான்றிதழ் ஏதோ ஒரு விண்ணப்பத்தில் இணைக்க தேவைப்படுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். சாதி சான்றிதழ் பெற தேவைப்படும் ஆவணங்கள் என்னென்ன வேண்டும் என்று உங்களுக்கு தெரியாமல் இருந்துருக்கும். அதற்கு உங்கள் வீட்டில் அருகில் உள்ளவர்களிடம், அரசு அலுவலகத்தில், உங்களுக்கு தெரிந்த நபர்களிடம் கேட்டறிந்து அப்ளை செய்ய செல்வீர்கள். இப்போதெல்லாம் படித்தவர்களுக்கே முக்கியமான சான்றிதழை அப்ளை செய்ய தேவைப்படும் ஆவணங்கள் எது சரியானது என்று தெரியவில்லை என்பது தான் 100% உண்மை. மற்றவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்வதைவிட இது போன்ற சிறிய விஷயங்களை நாம் கட்டாயம் தெரிந்துகொண்டிருக்க வேண்டும். அரசு அலுவலகங்களில் அப்ளை செய்யும் சான்றிதழ்கள் அனைத்திற்கும் தேவைப்படும் ஆவணங்கள் என்னென்ன உள்ளது என்பதை பற்றி விரிவாக படித்து பயன் பெறுங்கள். 

இருப்பிட சான்றிதழ் பெற தேவையான ஆவணங்கள்:

 1. விண்ணப்பதாரரின் புகைப்படம் 
 2. ஆதார் அட்டை 
 3. குடும்ப அட்டை 
 4. பிறப்பு சான்றிதழ் 
 5. பள்ளி படிப்பு சான்றிதழ் 
newஆன்லைனில் இருப்பிடச் சான்று அப்ளை செய்து பெறுவது எப்படி?

சாதி சான்றிதழ் பெற தேவையான ஆவணங்கள்:

 1. விண்ணப்பதாரரின் புகைப்படம் 
 2. ஆதார் அட்டை 
 3. தந்தையின் சாதி சான்றிதழ் (அ) உடன் பிறந்தோர் சாதிச்சான்று 
 4. குடும்ப அட்டை 
newசாதி சான்றிதழ் ஆன்லைனில் விண்ணப்பித்து பெறுவது எப்படி?

வருமான சான்றிதழ் பெற தேவையான ஆவணங்கள்:

 1. விண்ணப்பதாரரின் புகைப்படம் 
 2. ஆதார் அட்டை 
 3. குடும்ப அட்டை 
 4. சம்பளம் வாங்குபவர்கள் என்றால் அதனுடைய Salary Slip 
 5. For Tax Payers Pan Card Income Tax Receipt 
newவருமான சான்றிதழ் ஆன்லைனில் விண்ணப்பித்து பெறுவது எப்படி?

வாரிசு சான்றிதழ் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள்:

 1. விண்ணப்பதாரரின் புகைப்படம் 
 2. விண்ணப்பதாரரின் ஆதார் அட்டை 
 3. அனைத்து வாரிசுகளின் ஆதார் அட்டை 
 4. இறந்தவர் பெயருள்ள குடும்ப அட்டை ID Card (Aadhar, Voter ID, DL anyone)
 5. இறப்பு சான்றிதழ் 
newஆன்லைனில் வாரிசு சான்றிதழ் அப்ளை செய்வது எப்படி?

முதல் பட்டதாரி சான்றிதழ் பெற தேவையான ஆவணங்கள் (first graduate certificate eligibility in tamil):

 1. விண்ணப்பதாரரின் புகைப்படம் 
 2. ஆதார் அட்டை 
 3. பிறப்பு சான்றிதழ் 
 4. பள்ளி மாற்று சான்றிதழ் (TC)
 5. SSLC, HSC Mark Sheet 
 6. உடன்பிறந்தோர் மற்ற பெற்றோர் கல்வி சான்றிதழ் 
newமுதல் பட்டதாரி சான்றிதழ் ஆன்லைனில் அப்ளை செய்து பெறுவது எப்படி?

OBC சான்றிதழ் பெற தேவையான ஆவணங்கள்:

 1. விண்ணப்பதாரரின் புகைப்படம் 
 2. ஆதார் அட்டை 
 3. சாதி சான்றிதழ் 
 4. பெற்றோர் வருமான சான்றிதழ் (8 Lakhs Per Annum)
newரூ.60/- இருந்தால் போதும்..! ஆன்லைனில் சுலபமாக OBC சான்றிதழ் பெறலாம்..!

முழுப்புலம் பட்டா மாற்ற தேவையான ஆவணங்கள்:

 1. கிரைய பத்திரம் 
 2. மூல பத்திரம் 
 3. கணினி சிட்டா 
 4. EC 

உட்பிரிவு பட்டா மாற்ற தேவையான ஆவணங்கள்:

 1. கிரைய பத்திரம் 
 2. மூல பத்திரம் 
 3. கணினி சிட்டா 
 4. EC 
 5. மனை வரைபடம் 

முதியோர் உதவித்தொகை பெற தேவையான ஆவணங்கள்:

உணவுக்கு வழியில்லாமல் மிகவும் சிரமப்படும் ஆதரவற்ற முதியவர்களுக்கு தமிழக அரசு கொண்டு வந்துள்ள திட்டம் தான் இந்த முதியோர் உதவித்தொகை திட்டம். முதியோர் உதவித்தொகை பெற தேவையான ஆவணங்கள் என்னென்ன உள்ளது என்பதை பற்றி கீழே பட்டியலிட்டுள்ளோம். அவற்றை படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

 1. விண்ணப்பதாரரின் புகைப்படம் 
 2. ஆதார் அட்டை 
 3. குடும்ப அட்டை 
 4. வங்கி கணக்கு (Bank Passbook)
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil