சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு..!

Salai Pathukappu Vilipunarvu

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு..! Salai Pathukappu Slogan

சாலைகளில் நிகழும் விபத்துக்களால் அதிகளவான உயிரிழப்புக்கள் ஏற்படுவதனால் மனிதர்களின் இயல்பான போக்குவரத்து சுதந்திரம் பாதிக்கப்படுகிறது. நமது சமூகம் பாதுகாப்பாக பயணிக்கவும் விபத்துக்களில் இருந்து தப்பித்து கொள்ளவும் சாலைப் பாதுகாப்பு மிகவும் அவசியமாக உள்ளது.

அந்த வகையில் இந்த பதிவில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை மக்களுக்கு தெரியப்படுத்த பொதுநலம்.காம் கருதி சில தகல்வளை இந்த பகிர்த்துள்ளோம் சாலையில் நடந்து செல்பவர்கள் அவற்றை படித்து சாலையில் செல்லும் போது பின்பற்றுங்கள் நன்றி..

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு – Salai Pathukappu Vilipunarvu:

சாலை பாதுகாப்பு விதிகளின் முக்கிய நோக்கமே பாதையில் நடந்துசெல்பவர்களுக்கு ஏற்படும் காயங்கள் மற்றும் உயிரிழப்புகளை தடுப்பதாகும். வாகனங்களால் ஏற்படும் விபத்துகளை சாலைவிதிகளை சரியாக கடைப்பிடிப்பதன் மூலம் தவிர்க்க இயலும்.

சாலையில் நடக்கும்போது வலது பக்கமாக நடந்து செல்ல வேண்டும்.

நடந்து செல்பவர்கள் சாலையை கடக்கும்போது நேராக கடக்க வேண்டும்.

பகலில் வெளிச்சம் குறைவாக இருந்தால், பிரகாசமான நிறங்களில் உடை அணிய வேண்டும். இரவு நேரங்களில் ஒளியை பிரதிபலிக்கும் வகையில் உடைகளை அணிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு அணிந்து செல்லும் பொழுது வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தின் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் எளிதாக தெரிந்து கொள்ளலாம்.

சிறு குழந்தைகள் நடைபாதைகளில் தனியே செல்ல அனுமதிக்கக் கூடாது. பெற்றோர்கள் நடைப்பாதையில் குழந்தைகளை அழைத்து செல்லும் பொழுது, சாலையில் செல்லும் வாகனத்திற்கும் குழந்தைகளுக்கும் நடுவில் செல்ல வேண்டும்.

சாலை பாதுகாப்பு கட்டுரை

 

நடைபாதைகள் பாதசாரிகளுக்கு என ஒதுக்கப்பட்டது. அதனை பாதசாரிகள் பயன்படுத்த வேண்டும். நடைபாதைகள் இல்லாத சாலைகளில் எதிரே வரும் வாகனங்களுக்கு தெரியும் வகையில் சாலையின் இடது புறத்தில் பாதசாரிகள் செல்ல வேண்டும்.

ஆபத்துக் காலத்தை தவிர பிறசமயங்களில் வாகனங்கள் பயன்படுத்தும் சாலையில் பாதசாரிகள் செல்லக்கூடாது.

மரணம் விளைவிக்கக்கூடிய செயல் என்பதால் சாலை நடுவே செல்லக்கூடாது.

சாலையில் செல்லும் பொழுது செய்தித்தாள்களை படித்துக் கொண்டோ விளம்பரங்களை பார்த்துக்கொண்டோ செல்லக்கூடாது.

சாலையை கடக்கும்பொழுது நண்பர்கள் எதிர்பாராமல் பார்த்தவுடன் நலம் விசாரிக்ககூடாது. நடைபாதைக்கு சென்ற பிறகு உங்களின் நல விசாரிப்புகளை தொடரலாம்.

பேருந்துக்காக காத்திருக்கும் வேளையில் சாலையின் ஓரத்தில் பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்க வேண்டும். பேருந்தை நிறுத்த வேண்டும் என்பதற்காக சாலை நடுவே செல்ல கூடாது.

சாலை தடுப்புகள் உள்ள சாலையில், கடப்பதற்கென்று ஒதுக்கப்பட்ட இடங்களில் சாலையை கடந்து செல்லுங்கள்.

ஓடும் பேருந்தை துரத்திக் கொண்டு ஓடக்கூடாது. விபத்தில்லா நீண்டகால வாழ்க்கைக்கு சாலை விதிகளை கடைபிடியுங்கள்.

ஓடும் வாகனத்திலிருந்து இறங்கவோ, ஏறவோ கூடாது.

குடிபோதையில் சாலையில் நடந்து செல்லக்கூடாது.

இரவு நேரத்தில் கறுப்பான, மங்கலான ஆடைகள் அணிந்து சாலையில் செல்லக்கூடாது. அவ்வாறு செல்லும் பொழுது பிரதிபலிக்கும் வண்ணமுடைய உடைகளோ அல்லது காலணிகளோ அணிந்து செல்லுதல் வேண்டும் சாலையை கடப்பதற்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள கறுப்பு வெள்ளை வர்ணமிடப்பட்ட சாலையை கடக்குமிடத்தில் கூட சாலையின் இருபுறமும் வாகனம் ஏதும் வருகிறதா என கவனித்து செல்ல வேண்டும்.

நடந்து செல்பவர்கள் சிக்னல் விளக்கு பொறுத்திய சாலையை கடக்கும்போது சிகப்பு விளக்கு எரிந்தால் நிற்கவும். மஞ்சள் விளக்கு எரிந்தால் சாலையைக் கடக்கத் தயாராக இருக்கவும். பச்சை விளக்கு எரிந்தபின் சாலையை கடக்கவும்.

பிரதான சாலைகளில் சாலையை கடக்க சுரங்க பாதை அமைத்து இருந்தால், அந்த சாலையை நடந்து செல்பவர்கள் பயன்படுத்திக் கொள்வது நல்லது.

பொது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நெரிசலான சாலையின் நடுவிலோ அல்லது ஓரத்திலோ அதிக நேரம் நின்று வேடிக்கை பார்த்தல், வெட்டிப்பேச்சில் ஈடுபடுதல் ஆகியவற்றை தவிர்க்கவும். இதனால் மற்ற போக்குவரத்து பாதிக்கிறது என்பதை உணர்ந்து பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்.

சாலையின் குறுக்கே கடக்கும் போது ஓடாதீர்கள். முன்வைத்த காலை திடீரென்று பின்வைக்க வேண்டாம். இதனால் வாகனம் ஓட்டுபவர்கள் சுதாரிக்க முடியாமல் விபத்து ஏற்படும்.

சாலையை கடக்கும் முன்பு வாகனம் ஏதேனும் வருகிறதா என்று இருபுறமும் பார்த்து உறுதி செய்துவிட்டு சாலையை கடந்து செல்லவும். நடந்து செல்பவர்கள் நின்று கொண்டிருக்கும் வாகனத்திற்கு முன் பக்கத்தில் இருந்தோ அல்லது வாகனத்தின் பின்புறத்தில் இருந்தோ சாலையை கடந்து செல்லக் கூடாது.

சாலையில் வரும் வாகனங்கள் ஒலி எழுப்பும்போது நடந்து செல்பவர்கள் பொறுமையாக கவனித்து செல்லவும்.

சாலையில் நடந்து செல்பவர்கள் சாலையில் பணிபுரிந்து கொண்டிருக்கும் போக்குவரத்து காவலரின் சிக்னலுக்கு கட்டுபட்டு நடந்து செல்ல வேண்டும்.

நடந்து செல்பவர்கள் முக்கிய சாலை சந்திப்புகள் வரும்போது போக்குவரத்து காவலர் சிக்னல் கொடுத்தப்பின் சாலையை கடந்து செல்ல வேண்டும்.

சாலையை கடக்கும் இடங்கள் மற்றும் முக்கிய சாலைகள் மற்றும் திருப்பங்களில் நின்று கொண்டு பேசுவதை தவிர்க்க வேண்டும்.

சாலையில் நடந்து செல்லும்போது ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கைகோர்த்து அணியாக செல்வதோ அல்லது அணியாக சாலையை கடக்கவோ முயற்சி செய்ய கூடாது.

சாலையை வேகமாக ஓடி கடந்து செல்ல முயற்சிக்க கூடாது.

சாலையை கடக்கும்முன் இருபக்கமும் வாகனம் வரவில்லை என்று உறுதி செய்தபின் சாலையை கடக்க வேண்டும்.

வாகன ஓட்டிகள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்

 

இது போன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil