உங்களுடைய மூளையை யோசிக்க வைக்கும் அற்புதமான விடுகதைகள்

vidukathai in tamil with answer

சிறந்த விடுகதைகள்

வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில்  சில அற்புதமான விடுகதைகளை பற்றித்தான் தெரிந்துகொள்ளப் போகின்றோம்.  பொதுவாக விடுகதைகள் என்றாலே எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்றாகும், இதில் கேள்விகள் கேட்பது மிகவும் சுலபம், ஆனால் பதில் அளிப்பது தான் மிகவும் கடினமான ஒன்றாகும். பொதுவாக நமக்கு ஒரு விடுகதைகள் தெரிந்தாலே, அதை நாம் மற்றவர்களிடம் கேட்கும் பொழுது, அவர்களுக்கு பதில் தெரியவில்லை என்றால் நமக்கு சந்தோசமாக இருக்கும், அவர்களை யோசிக்கவைத்து வெறுப்பேத்துவோம் அல்லவா, அந்த வகையில் இன்றைய பதிவில் உங்களுடைய  மூளையை யோசிக்க வைக்கும் அளவிற்கு சில அற்புதமான விடுகதைகளை பற்றித் தான் தெரிந்துகொள்ளப் போகின்றோம்.  இதை நீங்கள் தெரிந்து கொண்டு, மற்றவர்களிடம் இந்த விடுகதைகளை நீங்களும் கேளுங்கள்.

மூளையை குழப்பும் புதிர் விடுகதைகள்

 

விடுகதைகள் மற்றும் விடைகள்

                    விடுகதைகள் விடைகள்
1. உடம்பு இல்லாத எனக்கு தலையுடன், பூ உண்டு நான் யார்.?                 நாணயம் 
2. அண்ணன் தம்பி இரண்டு பேர், அவர்களைத் தொடுவது பன்னிரண்டு பேர் அவன் யார்.?  கடிகாரம் 
3. சின்ன  சிறு வீட்டில் சிப்பாய்கள் பல பேர் அவன் யார்.?  தீக்குச்சி 
4. உரசினால் போதும் உயிர் முடிந்து போகும் அது என்ன.?  தீக்குச்சி 
5. கண் இல்லாத நான் பார்வையிழந்தவர்களுக்குப் பாதை காட்டுவேன் நான் யார்.?                    கைத்தடி 
6. முற்றத்தில் நடப்பால்  மூலையிள்  கிடப்பாள் அவள் யார்.?  துடைப்பம் 
7.காலால் தண்ணீர் குடித்து தலையால் முட்டையிடுவான் அவன் யார்.?           தென்னை மரம் 
8. உயிர் இல்லாத பறவை ஊர் விட்டு ஊர் செல்லும் அது என்ன.?  கடிதம் 
9. தாய் இனிப்பாள், மகள் புலிப்பாள், பேத்தி மனப்பாள், அவள் யார்.?  பால், மோர், நெய் 
10. தம்பிக்கும் எட்டும்  அண்ணனுக்கு எட்டாது அது என்ன.?  உதடு 
11. கால் நான்கும் நடக்காது கண் ஆயிரம் இமைக்காது அது என்ன.? நார்க்கட்டில் 
12. பறிக்க பறிக்க பெரிதாகும் அது என்ன.?  குழி 
13. தொட்டால் மணக்கும் குடித்தால் புளிக்கும் அவன் யார்.?  எலுமிச்சை பழம் 
14.  அண்ணன் வீட்டில் தம்பி போகலாம், ஆனால் தம்பி வீட்டில் அண்ணன் போக முடியாது அது என்ன.?  படி ஆழாக்கு 
15. ஏழை படுக்கும் பாய் எடுத்துச் சுருட்ட ஆள் இல்லை அது என்ன.?  பூமி 

இதையும் படியுங்கள் 👇

தமிழ் விடுகதைகள் 400 With Answer
கடினமான விடுகதைகள்
மூளையை குழப்பும் புதிர் விடுகதைகள்
நகைச்சுவை விடுகதைகள்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil