சிறுசேமிப்பு வாசகங்கள் | Siru Semippu Vasagam

Siru Semippu Vasagam

சிறுசேமிப்பு வாசகங்கள்..!

சிறு துளி பெருவெள்ளம் என்பது பொருள் பொதிந்த பழமொழிகளுள் ஒன்று. சிறு துளியாகப் பெய்யும் மழை ஆறாகப் பெருக்கெடுத்து ஓடி நாட்டுக்கு நல்ல பலன் செய்கிறது. அது போலவே சிறிது சிறிதாகச் சேமிக்கும் பொருள் எதிர்காலத்தில் வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்ல பலன் விளைவிக்கும். பொருள் இலார்க்கு இவ்வுலகம் இல்லை அல்லவா? திடீரென்று நமக்கு நோய் வந்து விடுகிறது. படுக்கையில் கிடக்கிறோம். வேலைக்குச் செல்ல இயலாது. அப்போது பொருள் வேண்டும் அல்லவா? குழந்தைகளுக்குக் கல்வி, திருமணம் என்றால் பணம் உடனே கிடைத்து விடுமா? பணம் மரத்திலா காய்க்கிறது. உடனே எடுத்துக் கொள்ள? இதற்குக் கை கொடுப்பதே சிறுசேமிப்பு ஆகும். சரி இந்த பதிவில் சிறுசேமிப்பை இன்றிலிருந்து செய்ய துவங்க சிறு சேமிப்பு பற்றி சில வாசகங்களை பதிவு செய்துள்ளோம் அவகற்றை படித்தறியலாம் வாங்க.

Siru Semippu Vasagam:

சிக்கனமும் சேமிப்பும்
வாழ்க்கை தரத்தை உயர்த்தும்
இரு கருவிகள்

இளமையில் உன் சேமிப்பு மட்டுமே,
முதுமையில் உனக்கு கை கொடுக்கும்.

அடுத்தவர்களை நம்பி வாழும் வழக்கை
நரகம் போன்றது

சிக்கனம் என்பது கஞ்சத்தனம் அல்ல.
செலவு செய்யும் விதம்.

சிக்கனமாக இருந்தால் யாரும்
வறியவராக முடியாது.

சிறுசேமிப்பு வாசகங்கள்:

சிறிய செலவுகளில் கவனம் கொள்ளுங்கள்
ஒரு சிறிய கசிவு
மிக பெரிய கப்பலையே மூழ்கடிக்கும்

நல்ல குடும்பம் என்பது வரவுக்கு மீறிய
செலவு செய்யாமல் இருப்பதாகும்

செல்வதுடன் இருக்க வேண்டுமென்றால்
சம்பாதிப்பதை போல்
சேமிப்பிலும் கவனம் வேண்டும்

சிக்கனம் நமது வாழ்க்கையை
அழித்து விட கூடியதாக இருக்க கூடாது
மாறாக சிக்கனம் நம் வாழ்க்கைக்கு
உயிர் கொடுப்பதாக இருக்க வேண்டும்.

Siru Semippu Vasagam:

சிக்கனமும் சேமிப்பும்
செல்வம் பெருக்க உதவும்.

பணம் உங்களை வந்தடையும் முன்
அதை ஒருபோதும் செலவிட வேண்டாம்

ஒவ்வொரு முறையும் நீங்கள் கடன் வாங்கும் போது
எதிர்கால சுயத்தை கொள்ளையடிக்கிறீர்கள்.

பேராசைக்கு கொண்ட மனிதனுக்கு
உலகத்தையே கையில் கொடுத்தாலும்
திருப்தி உண்டாக்குவதில்லை

ஏழையாக இருப்பதில்லை
என்று உறுதியாக முடிவு செய்யுங்கள்.

சிறுசேமிப்பு வாசகங்கள்:

நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட வாழ்க்கைக்கு
சேமிப்பு மிக அவசியம்,

நேரத்தையும் பாதத்தையும் வீணாக்காதீர்கள்.
இரண்டையும் சிறப்பாக பயன்படுத்துங்கள்

சேமிப்பு செழித்து வளர சிறந்த வழி சிக்கனம்

செலவழித்த பின் எஞ்சியதை சேமிக்க வேண்டாம்
சேமித்த பின் எஞ்சியதை செலவிடுங்கள்.

என்றும் நினைவில் வைத்திருங்கள்
சேமிப்பு என்பது முதலீட்டின் முன்நிபந்தனை.

Siru Semippu Vasagam:

வீண் செலவுகளை தவிர்த்து சேமியுங்கள்
அது உங்களை காப்பாற்றும்

பணக்காரன் ஆக வேண்டுமா?
அதற்கு பணத்தை குவிக்க வேண்டும் இல்லை.
தேவைகளை குறைத்துக் கொள்ளுங்கள்.

சம்பாதிப்பதை விட சேமிப்பவனே சிறந்தவன்.

சேமிப்பவரை உதாசீனம் செய்வது
தன வாழ்வில் ஒருநாளும்
செழிமையை கொண்டுவர முடியாது

சிக்கனமாக வாழும் ஏழை
சீக்கிரம் செல்வந்தன் ஆவான்
சிக்கனமே செல்வம்.

சிறுசேமிப்பு வாசகங்கள்:

தகுதிக்கு மேல் வாழ்வதே தரித்திரம்
என்பதை மனதில் வைத்திருக்க வேண்டும்.

சேமித்த பணம் வறுமையில் பயன் அளிக்கும்.

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com