சுத்தம் சுகாதாரம் பற்றிய வாசகங்கள்..!

Suththam Sugatharam Vasagam

சுத்தம் சுகாதாரம் பற்றிய வாசகங்கள்..! Suththam Sugatharam Vasagam

வணக்கம் நண்பர்களே..! “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்று நம் முன்னோர்கள் கூறியுள்ள பழமொழிக்கு நாம் அனைவரும் இருக்கின்றோமா..? என்று கேட்டல் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். மனித வாழ்க்கை என்பது நிலையற்ற நீர்க்குமிழி போன்றது. வாழ்க்கையில் நாம் வாழும் நாளில் ஆரோக்கியமாக நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும் என்றால் சுத்தமாகவும் சுகாதார வழி முறைகளை பின் பற்றி சுத்தமான உணவு தூய குடிநீர் பாதுகாப்பான தங்குமிடம் சிறந்த நலச்சேவைகள் போன்றவற்றை ஒரு மனிதன் பெற்று கொள்கின்ற போது தான் ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ முடியும்.

ஒரு மனிதன் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும் செல்வந்தராய் இருந்தாலும் அவர் நோய்வாய்ப்பட்டவராயின் அனைத்தும் வீணாகும். சரி இந்த பதிவில் நாம் ஒவ்வொரு நாளும் சுத்தமாக இருக்க சுத்தம் சார்ந்த விழிப்புணர்வு வசனங்களை பதிவு செய்துள்ளோம் அவற்றை ஒவ்வொன்றாக படித்தறியலாம் வாங்க.

சுத்தம் பற்றிய வாசகங்கள் – Sutham Sugatharam Kavithaigal in Tamil:

கறை நீங்கி
செயல் செய்து
பிணியற்று இருக்க
துணையாவது சுத்தம்..

கழிவு நீரும் தேங்காமல் பார்ப்போம்
தூசு ஒட்டடை சேராமல் தடுப்போம்
வசிக்கும் இடத்தை சுத்தமாய் வைப்போம்
வியாதியில்லாமல் நன்றே வாழ்வோம்..!

நோயற்ற வாழ்விற்கு ஆதாரம் -நாம்
போற்றி பேணும் சுகாதாரம் !
ஆரோக்கியமாக நாமும் வாழ
சுற்றுபுற சூழலைக் காத்திடுவோம்..!

சிறுசேமிப்பு வாசகங்கள்

சுத்தம் சுகாதாரம் பற்றிய வாசகங்கள்:

 • சுத்தம் சுகம் தரும்.
 • நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்.
 • கந்தையானாலும் கசக்கிக் கட்டு.
 • தினமும் காலை, மாலை இருவேளைகளும் குளிப்போம்.
 • தினமும் இருமுறை பல் துலக்குவோம்.
 • தினமும் இருமுறை மலம் கழிப்போம்.
 • உடல் கழிவை அடக்கி வைக்க மாட்டோம்.
 • பசித்த பின் உண்போம்.
 • தாகம் வந்து தண்ணீர் குடிப்போம்.
 • அளவுக்கு அதிகமாக உண்ண மாட்டோம்.
 • உணவை நன்கு மென்று எச்சில் கலந்து உண்போம்.
 • இரவில் நீண்ட நேரம் கண் விழிக்க மாட்டோம்.
 • அதிகாலையில் எழுவோம்.
 • உணவே மருந்து. நாக்கு தான் மருத்துவர்.
 • அறுசுவை உணவு உண்போம்.
 • காற்றில் உள்ள உயிர்வளியைப் பயன்படுத்துவோம்.
 • உடலினை உறுதி செய்வோம்.
 • எண்ணமே வாழ்க்கை.
 • மனத்தைச் செம்மைப்படுத்துவோம்.
 • நல்லதையே நினைப்போம்.
 • நம்மால் இயன்ற நல்லதை பிறருக்குச் செய்வோம்.
 • நாம் கெடுதல் என எண்ணுவதைப் பிறருக்குச் செய்ய மாட்டோம்.
 • மனத்தைச் சீர் செய்வோம்.
 • உடலுக்கு ஏற்ற உழைப்பு தேவை.
 • உடல்நலம், மனநலம் பேணுவோம்.
 • உணவையும், நீரையும் முறைப்படுத்துவோம்.
 • மனதுக்குப் பிடித்த நன்மை தருவனவற்றை மட்டுமே செய்வோம்.
 • அளவுக்கு மிஞ்சினால் எதுவும் நஞ்சே!
 • தினமும் இரவில் குறைந்தது 6 மணி நேரம் தூங்குவோம்.
 • உண்ணும் உணவை உமிழ்நீரோடு கலந்து உண்போம்.
 • கண்ட இடங்களில் எச்சில் துப்ப மாட்டோம்.
 • காதுகளைக் குடைய மாட்டோம்.
 • நகங்களை வெட்டி சுத்தமாக இருப்போம்.
 • பல்லில் குச்சி வைத்துக் குத்த மாட்டோம்.
 • வயிறு புடைக்க உண்ண மாட்டோம்.
 • வெற்றுத் தரையில் தூங்க மாட்டோம்.
 • தன்சுத்தம் பேணுவோம்.
 • சுத்தம் சோறு போடும்.
 • சுகாதாரம் வீட்டைக் காக்கும்.
 • கழிவறையைப் பயன்படுத்துவோம்.
 • திறந்த வெளியில் மலம், சிறுநீர் கழிக்க மாட்டோம்.
 • வீட்டை, தெருவை, ஊரை சுத்தமாக வைத்துக் கொள்வோம்.
 • குப்பையைக் குப்பைத் தொட்டியில் போடுவோம்.
 • தேவையில்லாமல் காகிதங்களைக் கிழித்துக் கீழே போட மாட்டோம்.
 • கழிவறையில் தேவையான அளவு நீர் ஊற்றுவோம்.
தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வு வாசகங்கள்
மரம் பற்றிய வாசகங்கள்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil