ஜனவரி 26 குடியரசு தின பேச்சு போட்டி 2025

Advertisement

January 26 Speech in Tamil

இந்தியாவில் 76-வது குடியரசு தினம் வரும் ஜனவரி 26-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. 1950-ம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டு அமலுக்கு வந்த தினமான ஜனவரி 26-ம் தேதியை நாம் குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம். ஒவ்வொரு வருடமும் இந்த தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லியில் சிறப்பு ஏற்பாடுகளுடன் இந்தியாவின் வலிமையை காட்சிப்படுத்தும் விதமாக நிகழ்ச்சிகள், வாகன ஊர்வலங்கள் நடைபெறும். குடியரசு தினத்தின் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெறும்.

அதுமட்டுமில்லாமல் பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் குடியரசு தினத்தை சிறப்பாக கொண்டாடுவார்கள். மாணவர்களுக்கு கட்டுரை போட்டி, பேச்சு போட்டி போன்றவை நடைபெறும். இதற்கு தங்களை தயார் படுத்திக்கொள்வதற்கு மொபைலில் தான் சர்ச் செய்வார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதவில் குடியரசு தின பேச்சு போட்டி கட்டுரையை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

ஜனவரி 26 குடியரசு தினம்:

ஜனவரி 26 குடியரசு தினம்

அம்பேத்கர் தலைமையில் டிசம்பர் 12, 1946-ம் ஆண்டு நிரந்தர அரசியலை அமைப்பை உருவாக்க ஒரு குழுவாய் அமைத்தார். நவம்பர் 4 1947 இல் அரசியலமைப்பு ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் பின் எழுதி முடிக்கப்பட்டது. கடைசியாக  ஜனவரி 24 1950-ல் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்று ஜனவரி 26-ம் தேதி  1950-ல் அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இதை அன்றிலிருந்து இன்று வரை குடியரசு நாளாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஜனவரி 26 குடியரசு தின பேச்சு போட்டி:

இங்கு அமர்ந்திருக்கும் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்களை கூறி என்னுடைய  முதற்கண் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். நாம் இந்த ஆண்டு 76-வது குடியரசு தினத்தை கொண்டாடுகிறோம். இந்த நாளானது இந்திய தேசத்திலும், வாழ்நாளிலும் முக்கிய நாளாக விளங்குகிறது. மேலும் நாட்டின் குடியரசு தினத்திற்காக போராடிய வீரர்களை நினைவு கூறும் நாளாக கொண்டாடப்படுகிறது.

ஆங்கிலேயர்களின் கொடுங்கோல் ஆட்சியில் இருந்து இந்தியா முழுவதும் விடுபட்டு 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் சுதந்திரம் பெற்றது. அதற்காக பல தலைவர்கள் வீரர்கள் உயிர் ஆனது இந்த மண்ணில் போனது. இருப்பினும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் மன உறுதியினாலும் அர்ப்பணிப்பு நாளும் நமக்கு சுதந்திரம் கிடைத்தது. தொடர்ந்து இந்திய அரசியலமைப்பு சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றி மக்களாட்சி தத்துவத்தை ஏற்றுக்கொண்ட ஒரு நாடாக அமைந்ததாக கொண்டாடும் நாள் தான் இந்த குடியரசு தினம்.

குடியரசு என்பது மக்களாட்சி என்று பொருள்படுகிறது. அதாவது மக்களால் மக்களுக்காக மக்களே தேர்ந்தெடுக்கும் ஆட்சி தான் மக்களாட்சி என்கிறோம். இந்தியா ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்ற பிறகு இந்திய அரசியல் அரசியல் நிர்ணய சபை தலைவராக டாக்டர் ராஜேந்திர பிரசாத் நியமிக்கப்பட்டார். இவரை இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரும் ஆவார்.

டாக்டர் அம்பேத்கர் அவர்கள் தலைமையில் இந்திய அரசியலமைப்பு சாசனம் எழுதப்பட்டது. இது மக்களாட்சி குறிக்கோளாக கொண்டு நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு  1950ஆம் ஆண்டு முதல் இந்திய குடியரசு தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. 1929 ஆம் ஆண்டு லாகூரில் அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் அனைத்து தலைவர்காளும் பூரண சுயராஜ்யம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் பின் காந்தியால் இந்தியத் தன்னாட்சிக்கான உருவாக்கபட்டதன் அடைப்படையில் முதற்கட்டமாக சுகந்திர நாளாக கொண்டாடப்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் ஜனவரி 26 ஆம் நாள் குடியரசு தினமாக கொண்டாடப்பட்டது.

எல்லாருக்கும் குடியரசு தின வாழ்த்துக்களை கூறி எனது உரையை முடித்து கொள்கிறேன்.

ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்!

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil

 

Advertisement