ஜிடிபி விரிவாக்கம் | GDP Meaning in Tamil

GDP Meaning in Tamil

ஜிடிபி என்றால் என்ன | GDP Full Form Tamil

வணக்கம் நண்பர்களே இன்று தமிழ் பதில் ஜிடிபி என்றால் என்ன என்பதை பற்றி பார்க்க போகிறோம். பொதுவாக முக்கியமான ஒரு வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் இருப்போம். அதற்காகத்தான் பொதுநலம்.காம் பதிவில் இது மாதிரியான அர்த்தங்கள் பதிவிட்டு வருகிறோம் அதனை படித்து பயன்பெற்று கொள்ளுங்கள். அந்த வகையில் ஜிடிபி என்றல் என்ன அதன் விரிவாக்கம், அதனை பற்றிய விவரங்களை தெரிந்துகொள்வோம்.

Ecs என்றால் என்ன?

GDP Full Form Tamil:

GDP = Gross Domestic Product, மொத்த உள்நாட்டு உற்பத்தி.

ஜிடிபி என்றால் என்ன?

  • ஜிடிபி என்பது  ஒரு நாட்டின் எல்லைக்கு உள்பட்ட பகுதியில் உள்ள மக்கள், நிறுவனம், அந்நாட்டை ஆட்சி செய்யக்கூடிய அரசாங்கம் போன்ற அமைப்பின்  உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களின் மதிப்பு தான் ஜிடிபி ஆகும். உற்பத்தி செய்யகூடிய பொருட்களை மூன்று வகைகளாக பிரிகிறார்கள் விலை பொருள், செய்பொருள், சேவை இதன் ஒட்டுமொத்த மதிப்பாக இருக்கக்கூடியது தான் ஜிடிபி ஆகும்.

ஜிடிபி கணக்கிடும் முறை:

ஜிடிபியை கணக்கிடுவதற்கு மூன்று முறைகள் உள்ளது.

  • Expenditure Method இது ஒரு நாட்டினுடைய செலவுகளிருந்து கணக்கிடுவது.
  • Income Method அதாவது ஒரு நாட்டிற்கு வரக்கூடிய வருமானத்திலிருந்து கணக்கிடுவது.
  • Production Method என்பது ஒரு நாட்டின் உற்பத்தியை அடிப்படியாக கொண்டு கணக்கிடுபடுவது. உலகத்தில் உள்ள நாடுகளில் இந்த மூன்று முறைகளில் தான் எதோ ஒரு முறையில் தான் ஜிடிபியை கணக்கிடுவார்கள். அதனை எந்த முறையில் கணக்கிடுவது என்பதை அந்நாடே முடிவு செய்துகொள்ளவும்.
  • உலகில் பல நாடுகள் Expenditure Method என்று சொல்லக்கூடிய செலவுகளை அடிப்படியாக கொண்டு ஜிடிபியை கணக்கிடப்படும் முறையை பின்பற்றி வருகிறார்கள். அதனை அமெரிக்காவும், இந்தியாவும் பின்பற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இது போன்ற ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழ் அர்த்தம் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் –>  அர்த்தம்