ஞானபீட விருது பெற்றவர்கள் | Gnana Peedam Award List in Tamil

Gnana Peedam Award List in Tamil

ஞானபீட விருது பெற்ற தமிழர்கள் | Gnana Peeda Virudhu 

சாதனையாளர்கள் என்றாலே அவர்களுக்கு கட்டாயம் விருதுகள் வழங்கி கவுரப்படுத்துவார்கள். விருதுகளில் தேசிய விருது, பாரத ரத்னா விருது, ஆஸ்கார் விருது, போன்ற பல விருது வகைகள் இருக்கிறது. விருதுகளில் ஞானபீட விருது என்பது இலக்கியத்திற்காக வழங்கப்படும் ஒரு உயரிய விருதாகும். இந்த விருதினை வழங்கக்கூடியவர்கள் பாரதிய ஞானபீடம் என்ற பண்பாட்டு இலக்கிய கழகமாகும். இந்த விருதானது ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட 15 மொழிகளுள் சிறந்த எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது. இந்த விருது, இந்திய ரூபாய் 5 இலட்சத்திற்கான காசோலை, தங்கமும் செம்பும் கலந்த பட்டயமும், பாராட்டுப் பத்திரம் மற்றும் பித்தளையால் ஆன கலைமகள் (வாக்தேவி) சிலையை உள்ளடக்கியது. இந்த ஞானபீட விருதானது ஓர் எழுத்தாளரின் படைப்பினை பாராட்டி அவர்களுக்கு வழங்கும் உயர்ந்த விருது இந்த ஞானபீட விருதாகும். வாங்க இந்த பதிவில் ஞானபீட விருது பெற்றவர்களின் பெயர்களையும், வாங்கிய வருடத்தையும் தெரிந்துக்கொள்ளலாம்..

சாகித்திய அகாதமி விருது பட்டியல்

Jnanpith Award Winners in Tamil:

விருது வாங்கியவர்கள்  படைப்புகள்  மொழி  ஆண்டு 
ஜி சங்கர குருப்  ஓடக்குழல்  மலையாளம்  1965
தாராசங்கர் பந்தோபாத்தியாய் கணதேவ்தா வங்காள மொழி 1966
குவெம்பு (முனைவர் கே.வி. புட்டப்பா) ஸ்ரீ இராமயண தரிசனம் கன்னடம் 1967
உமா ஷங்கர் ஜோஷி நிஷிதா குஜராத்தி 1967
சுமித்ரானந்தன் பந்த் சிதம்பரா ஹிந்தி 1968
பிராக் கோரக்புரி குல்-இ-நக்மா உருது 1969
விஸ்வநாத சத்யநாராயணா இராமயண கல்பவ்ரிக்ஷமு தெலுங்கு 1970
விஷ்ணு டே ஸ்ம்ருதி சட்டா பவிஷ்யத் வங்காள மொழி 1971
இராம்தாரி சிங் தினகர் ஊர்வஷி ஹிந்தி 1972
தத்தாத்ரேய ராமச்சந்திரன் பிந்த்ரே நகுதந்தி கன்னடம் 1973

 

கோபிநாத் மொஹந்தி மட்டிமடல் ஒரியா 1973
விஷ்ணு சகரம் காண்டேகர் யயாதி மராத்தி 1974
அகிலன் சித்திரப்பாவை தமிழ் 1975
ஆஷாபூர்ணா தேவி ப்ரதம் ப்ரதிஸ்ருதி வங்காள மொழி 1976
க. சிவராம் கரந்த் (ஆயாவின் கனவுகள்) கன்னடம் 1977
ச.ஹ.வ. அஜ்னேயா கித்னி நாவோம் மே கித்னி பார் (எத்தனை முறை எத்தனை படகுகள் ஹிந்தி 1978
பிரேந்த்ர குமார் பட்டாச்சார்யா ம்ருத்யுஞ்சய் (சாகாவரம்) அஸ்ஸாமி 1979
ச.க.பொட்டிக்கட் ஒரு தேசத்திண்டே கதா (ஒரு நாட்டின் கதை) மலையாளம் 1980
அம்ரிதா பிரீதம் காகஜ் தே கான்வாஸ் பஞ்சாபி மொழி 1981
மஹாதேவி வர்மா ஹிந்தி 1982

 

இந்தியாவின் உயரிய விருது
மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் சிக்கவீர ராஜேந்திரா கன்னடம் 1983
தகழி சிவசங்கரப் பிள்ளை மலையாளம் 1984
பன்னாலால் படேல் குஜராத்தி 1985
சச்சிதானந்த் ரௌத் ராய் ஒரியா 1986
விஷ்ணு வாமன் ஷிர்வாத்கர் மராத்தி 1987
முனைவர். சி. நாராயண ரெட்டி தெலுங்கு 1988
குர்ராடுலென் ஹைதர் உருது 1989
வி. கே. கோகாக் பாரத சிந்து ரஷ்மி கன்னடம் 1990
சுபாஷ் முகோபாத்யாய் வங்காள மொழி 1991
நரேஷ் மேத்தா ஹிந்தி 1992

 

சீதாகாந்த் மஹாபாத்ரா ஒரியா 1993
உ. இரா. அனந்தமூர்த்தி கன்னடம் 1994
எம். டி. வாசுதேவன் நாயர் மலையாளம் 1995
மகாசுவேதா தேவி வங்காள மொழி 1996
அலி சர்தார் ஜாஃப்ரி உருது 1997
கிரிஷ் கர்னாட் கன்னடம் 1998
நிர்மல் வர்மா ஹிந்தி 1999
குர்தியால் சிங் பஞ்சாபி 1999
இந்திரா கோஸ்வாமி அஸ்ஸாமி 2000
ராஜேந்திர கேஷவ்லால் ஷா குஜராத்தி 2001

 

இசை துறையின் உயரிய விருது என்ன?

 

ஜெயகாந்தன் தமிழ் 2002
விந்தா கரண்டிகர் மராத்தி மொழி 2003
ரகுமான் ராகி சுப்துக் சோடா, கலாமி ராகி மற்றும் சியா ரோட் ஜாரேன் மான்சு – காசுமீரம் 2004
கன்வர் நாராயண் இந்தி மொழி 2005
ரவீந்திர கேல்கர் கொங்கணி 2006
சத்திய விரத் சாஸ்திரி சமசுகிருதம் 2006
ஓ. என். வி. குரூப் மலையாளம் 2007
அமர் காந்த் & ஸ்ரீ லால் சுக்லா இந்தி 2009
சந்திர சேகர கம்பரா கன்னடம் 2010
பிரதிபா ரே யஜனசெனி ஒரியா 2011

 

ரவுரி பாரத்வாச பாகுடுரல்லு தெலுங்கு 2012
கேதார்நாத் சிங் இந்தி 2013
பாலச்சந்திர நெமதே மராத்தி 2014
ரகுவீர் சவுத்ரி குஜராத்தி 2015
ஷாங்கா கோஷு வங்காள மொழி 2016
கிருஷ்ணா சோப்தி   இந்தி 2017
அமிதவ் கோசு   ஆங்கிலம் 2018
அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி   மலையாளம் 2019
நில்மணி பூக்கன்   அசாம் 2020
தாமோதர் மௌசேம்   கோவா 2021

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil