Thani Thoguthi Meaning in Tamil
வணக்கம் நண்பர்களே. இப்பதிவில் நாம் தனி தொகுதி என்றால் என்ன.? என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க. அரசியலில் பல தொகுதிகள் உள்ளது. ஆனால், அவற்றை நம்மில் பலபேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, அந்த வகையில் இப்பதிவில் தனி தொகுதி என்றால் என்ன.? என்பதை இப்பதிவின் வாயிலாக தெரிந்துகொள்ளலாம் வாங்க.
பெரும்பாலும், அரசியல் பற்றிய விவரங்கள் பற்றி நம்மில் பலருக்கும் தெரியாது. ஆனால், அதனை தெரிந்து கொள்வது நம் ஒவ்வொருடைய கடமை ஆகும். தனி தொகுதி பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
தனி தொகுதி என்றால் என்ன.?
தனித்தொகுதி என்பது சட்டமன்றத்துக்கோ, நாடாளுமன்றத்துக்கோ அல்லது உள்ளாட்சி அமைப்புகளுக்கோ நடக்கும் தேர்தல்களில், சில குறிப்பிட்ட தொகுதிகள் மட்டும் தாழ்த்தபட்ட மக்களுக்கோ அல்லது பழங்குடியின மக்களுக்கோ ஒதுக்கப்படும். அப்படி ஒதுக்கப்படும் தொகுதியில் அவர்கள் மட்டுமே போட்டியிட ஒதுக்கப்பட்ட தொகுதிகளே தனித்தொகுதிகள் எனப்படும்.
தனித் தொகுதிகள் அறிமுகம்:
1909 ஆம் ஆண்டு பிரித்தானியர்களால் முஸ்லிம்களுக்காக தனித் தொகுதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன் பிறகு, இத்தொகுதிகள் 1919 ஆம் ஆண்டில் விரிவாக்கப்பட்டது. முஸ்லிம்கள் நியமிக்கப்பட்ட தொகுதிகளில் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
இந்தியாவில் தற்போது உள்ள தனித்தொகுதிகள் எத்தனை.?
2016 ஆம் ஆண்டு நிலவரப்படி இந்திய மக்களவையில் மொத்தம் 543 இடங்கள் உள்ளது. இவற்றில் தனித் தொகுதிகள் மட்டும் 131 ஆகும்.
தமிழ்நாட்டில் தற்போது உள்ள தனித்தொகுதிகள்:
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 235 இடங்கள் உள்ளது. இவற்றில் தனித் தொகுதிகள் மட்டும் 46 ஆகும். இந்த தனித்தொகுதிகளில் பட்டியலில் இனத்தவருக்கு 44 இடங்களும் பழங்குடியினருக்கு 2 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள மொத்தம் 39 மக்களவைத் தொகுதிகளில் 7 தொகுதிகள் தனித் தொகுதிகள் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய பதிவுகள் |
தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகள் |
லோக்சபாவில் உள்ள மொத்த இடங்களின் எண்ணிக்கை விவரம். |
தமிழ்நாடு கட்சிகளின் சின்னம் |
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |