தமிழ் எழுத்துக்கள் அட்டவணை PDF | Tamil Words List | Tamil Eluthukkal List

Tamil Eluthukkal

தமிழ் எழுத்துக்கள் அட்டவணை | Tamil Eluthukkal List

Tamil Eluthukkal List – செம்மொழியான தமிழ் மொழியானது மிகவும் பழமை வாய்ந்த மொழியாகும். கிட்டத்தட்ட 2000 ஆண்டுகள் மிகவும் பழமைவாய்ந்த மொழியாகும். தமிழ் மொழியில் திருக்குறள், தொல்காப்பியம், அகநாநூறு, புறநாநூறு போன்று பலவகையான படைப்புகள் தமிழ் மொழியில் தான் உருவாக்கப்பட்டது. அவை பிற வெளிநாட்டவர்களால் மொழி பெயர்க்கபட்டு வாசிக்கப்படுகிறது. இப்போதேல்லாம் வெளிநாட்டார்கள் கூட தமிழ் மொழியை பயில மிகவும் ஆர்வமாக இருக்கின்றன. தமிழ் மொழியை அனைவருமே மிக எளிதாக கற்றுக்கொள்ள முடியும். தமிழ் எழுத்துக்களில் (tamil ezhuthukkal) உயிர் எழுத்துக்கள் 12, மெய்யெழுத்துக்கள் 18, உயிர்மெய் எழுத்துக்கள் 216, ஆயுத எழுத்து 1 என தமிழ் மொழியில் மொத்தம் 247 எழுத்துக்கள் இருக்கின்றன. அதனை பற்றி இந்த பதிவில் ஒவ்வொன்றாக படித்தறியலாம் வாங்க மேலும் இந்த பதிவின் கிழே  தமிழ் எழுத்துக்கள் PDF டவுன்லோட்  செய்துகொள்ளலாம்.

தமிழ் எழுத்துக்கள் பட்டியல் – Tamil Ezhuthukal

உயிர் எழுத்துக்கள் என்றால் என்ன?

அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ 

இந்த உயிர் எழுத்துக்களில் குறில் நெடில் என இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது.

குறில் எழுத்துக்கள்: அ, இ, உ, எ, ஒ இந்த ஐந்து எழுத்துக்களும் குறில் எழுத்துக்கள்  ஆகும்.

நெடில் எழுத்துக்கள்: ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ இந்த ஏழு எழுத்துக்கள் நெடில் எழுத்துக்கள் ஆகும்.

இதையும் படியுங்கள்–> ஆத்திசூடி விளக்கம்

ஆயுத எழுத்துக்கள் என்றால் என்ன?

நமது தாய் மொழியான தமிழ் மொழியில் ஒரே ஒரு ஆயுத எழுத்து தான் உள்ளது. அந்த எழுத்தை அக்கு (ஃ) என்று அழைக்க வேண்டும். இந்த ஆயுத எழுத்தினை தனி நிலை எழுத்துக்கள் என்று அழைப்பார்கள்.

தமிழ் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?

மெய்யெழுத்துக்கள் என்றால் என்ன?

நமது தமிழ் மொழியில் மொத்தம் 18 எழுத்துக்கள் இருக்கின்றன. இந்த மெய் எழுத்துக்களிலும் மூன்று வகைகள் பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது வல்லினம், மெல்லினம், இடையினம் என்று மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

க்ங்ச்ஞ்ட்ண்த்ந்ப்ம்ய்ர்ல்வ்ழ்ள்ற்ன்

 

இதையும் படியுங்கள்–> பத்துப்பாட்டு நூல்கள் மற்றும் ஆசிரியர்கள்

வல்லினம், மெல்லினம், இடையினம் என்றால் என்ன?

வல்லின எழுத்துக்கள் என்றால் என்ன?

வல்லினம் எழுத்துக்கள் நமது மார்பினை இடமாக கொண்டு பிறக்கின்றன. அவை க,ச,ட,த,ப,ற என்ற இந்த 6 எழுத்துக்கள் ஆகும். வல்லின எழுத்துக்களை நாம் உச்சரிக்கும் போது இந்த எழுத்துக்கள் எல்லாம் நமது மார்பக பகுதியில் இருந்து எழும்.

மெல்லினம் எழுத்துக்கள் என்றால் என்ன?

மெல்லினம் எழுத்துக்கள் நமது மூக்கினை இடமாக கொண்டு பிறக்கின்றன. அவை ங,ஞ,ண,ந,ம,ன என்ற இந்த 6 எழுத்துக்கள் ஆகும். இந்த மெல்லினம் எழுத்துக்களை உச்சரிக்கும் பொழுது இந்த எழுத்துக்கள் எல்லாம் நமது மூக்கு பகுதியில் இருந்து எழும்.

இடையினம் எழுத்துக்கள் என்றால் என்ன?

இடையினம் எழுத்துக்கள் நமது கழுத்தை இடமாக கொண்டு பிறக்கின்றன. அவை ய, ர, ல, வ, ழ, ள என்ற இந்த 6 எழுத்துக்கள் ஆகும். இந்த இடையினம் எழுத்துக்களை உச்சரிக்கும் பொழுது இந்த எழுத்துக்கள் எல்லாம் நமது கழுத்து பகுதியில் இருந்து எழும்.

இதையும் படியுங்கள்–> தமிழ் எழுத்தாளர்கள் பட்டியல்

உயிர் மெய் எழுத்துக்கள் என்றால் என்ன?

ஒரு மெய் எழுத்துடன் ஓர் உயிர் எழுத்து சேர்ந்து பிறக்கக்கூடிய எழுத்து உயிர்மெய் எழுத்து ஆகும்.

எடுத்துக்காட்டு:

‘க்’ என்னும் மெய்யும் ‘அ’ என்னும் உயிரும் சேர்வதால் ‘க’ என்னும் உயிர்மெய் பிறக்கின்றது. இவ்வாறு பன்னிரண்டு உயிர் எழுத்துக்களும் பதினெட்டு மெய் எழுத்துக்களுடன் சேர்வதால் (18 X 12) 216 உயிர் மெய் எழுத்துக்கள் பிறக்கின்றன.

கீழே உள்ள படத்தில் அனைத்து உயிர் மெய் எழுத்துக்கள் எப்படி பிறக்கின்றது என்பதை பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது.

உயிர்மெய் எழுத்துக்கள் வரிசை

ஃ 
க்காகிகீகுகூகெகேகைகொகோகௌ
ங்ஙாஙிஙீஙுஙூஙெஙேஙைஙொஙோஙௌ
ச்சாசிசீசுசூசெசேசைசொசோசௌ
ஞ்ஞாஞிஞீஞுஞூஞெஞேஞைஞொஞோஞௌ
ட்டாடிடீடுடூடெடேடைடொடோடௌ
ண்ணாணிணீணுணூணெணேணைணொணோணௌ
த்தாதிதீதுதூதெதேதைதொதோதௌ
ந்நாநிநீநுநூநெநேநைநொநோநௌ
ப்பாபிபீபுபூபெபேபைபொபோபௌ
ம்மாமிமீமுமூமெமேமைமொமோமௌ
ய்யாயியீயுயூயெயேயையொயோயௌ
ர்ராரிரீருரூரெரேரைரொரோரௌ
ல்லாலிலீலுலூலெலேலைலொலோலௌ
வ்வாவிவீவுவூவெவேவைவொவோவௌ
ழ்ழாழிழீழுழூழெழேழைழொழோழௌ
ள்ளாளிளீளுளூளெளேளைளொளோளௌ
ற்றாறிறீறுறூறெறேறைறொறோறௌ
ன்னானினீனுனூனெனேனைனொனோனௌ

 

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil