தமிழ் மொழியின் சிறப்பு | Tamil Moliyin Sirappu

Tamil Moliyin Sirappu

தமிழ் மொழி சிறப்பு | Tamil Mozhi Sirappu Katturai in Tamil

Tamil Moliyin Sirappu in Tamil: காலங்கள் மாற்றம் அடைந்தாலும், உலகின் கண்டங்கள் பல அழிந்து இருந்தாலும் என்றென்றும் அழியாத செல்வமாய் விளங்குவது தமிழ் மொழியே. தமிழ் மொழியானது தமிழ் பேசும் அனைவருக்கும் தாய்மொழியாக சிறந்து விளங்குகிறது. தமிழ் மொழியானது 2500 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபினை கொண்டுள்ள நூல் என்று சொல்லப்படுகிறது. தமிழ் என்னும் சொல்லின் பொருளுக்கு இனிமை, எளிமை, நீர்மை என்று பொருளாகும். தமிழ் மொழியானது இந்தியாவில் மட்டுமல்லாமல் இலங்கை, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் ஆட்சிமொழியாகவும், பேசப்படும் சிறந்த மொழியாக உள்ளது தமிழ் மொழி. அத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ் மொழியின் சிறப்புகளை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க..!

தமிழ் மொழி பற்றிய கவிதை

தமிழின் மொழிக்குடும்பம்:

திராவிட மொழி குடும்பத்தை சேர்ந்தது தான் இந்த தமிழ் மொழி. இந்த மொழி குடும்பத்தில் இருளா, கைக்காடி, பெட்டக் குறும்பா, சோலகா மற்றும் யெருகுலா  எனும் பல மொழிகள் அடங்கும்.

தாய்நாடான தமிழ்நாட்டினை எல்லையாகக் கொண்டுள்ள, கேரள மாநிலத்தில் உள்ள மக்களால் பேசப்படும் மலையாளம், சொற்கள், வசன அமைப்பு ஆகிய அம்சங்களில் தமிழ் மொழியை நெருக்கமாக ஒத்துள்ள ஒரு மொழியாகும். ஏறத்தாழ ஒன்பதாம் நூற்றாண்டு வரைதமிழ் மொழியும், மலையாள மொழியும் ஒரே மொழியின் இரு வட்டார வழக்குகளாகவே இருந்தன. இரு பகுதியினருமே இம்மொழியினைத் தமிழ் மொழியாகவே வழங்கி வந்துள்ளனர்.

தமிழ் மொழி எங்கெல்லாம் பேசப்படுகிறது:

தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் தமிழ் மொழி சிறந்து விளங்கக்கூடிய மொழியாக உள்ளது. 19-ம் நூற்றாண்டு மற்றும் 20-ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் தமிழ்நாட்டு மக்கள் ஒப்பந்தக் கூலிகளாகவும், கீழ்நிலை அரசப் பணியாளர்களாகவும் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்து பிரித்தானியப் பேரரசின் பல பகுதிகளுக்கும்அனுப்பிவைக்க பட்டனர். அவர்கள் சென்ற இடமெல்லாம் தமிழ் மொழி சிறந்து ஓங்கியது.

இவர்களின் வழி வந்தவர்கள் இன்று சிங்கப்பூர், மலேசியா, மொரீசியசு போன்ற நாடுகளில் சிறப்புமிக்க மொழியான தமிழ் மொழி பேசப்படுகிறது. தென்னாப்பிரிக்கா, கயானா, பிசி, சுரினாம், திரினிடாடு, உடொபாகோ போன்ற நாடுகளிலும் சிலர் தமிழர் இனத்தினை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அந்த நாடுகளில் இன்றும் தமிழ்மொழியை பேசுவது இல்லை.

தமிழ் சிறப்பு:

தமிழில் உள்ள எழுத்துகளின் ஒலிகள் இயற்கை நடையிலும் மிக எளிமை முறையிலும் அமைந்திருப்பதால் எந்த சிக்கலின்றி தமிழ் ஒலிகளை ஒலிக்கமுடிகிறது. தமிழ் மொழியை நாம் வாயில் உச்சரித்து பேசும்போது குறைந்தளவு காற்றே நமது உடலிலிருந்து வெளியாகிறது.

இதற்கு உதாரணத்திற்காக சமஸ்கிருத மொழியை நாவில் உச்சரித்து பேசும் போது நம்முடைய உடல் பகுதியில் இருந்து அதிக ஆக்சிஜன் வெளியாகுவதால் உடல் உறுப்புகளுக்கு அதிக தேய்மானம் உண்டாகுவதாக மொழியியலர் கூறுகிறார். இதைச் சோதனையாக சமஸ்கிருத மொழியை கற்கும்போது அனுபவித்து உணர்ந்தவர் மறைமலையடிகள் ஆவார்.

தமிழ் மொழியை சிறப்பித்தவர்கள்:

  1.    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவது எங்கும் காணோம்” என்று தமிழ் மொழியை சிறப்பித்தவர்            பாரதியார்.

2. “தமிழுக்கும் அமுதென்று பேர்- அந்தத்
தமிழ் இன்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்று தமிழை சிறப்புமிக்க உணர்த்தியவர் பாரதிதாசன்.

3. தமிழ் மொழியை நன்கு கற்றுத்தேர்ந்து அதனுடைய சிறப்பினை உணர்ந்தவர் தான் மேலை நாட்டு அறிஞர் ஜி.யு.போப். இவர் இறக்கும் முன் தன்னுடைய கல்லறையில் “ஒரு தமிழ் மாணவன்” என்று எழுத செய்துள்ளார்.

இது போன்று தமிழ் மொழியின் சிறப்புகளை பலரும் புகழ்ந்து கூறியுள்ளனர்.

தமிழ் மூலம் இந்தி கற்றுக்கொள்வது எப்படி?

தமிழன் வளமைகள்:

உலக இலக்கியங்களில் சங்க இலக்கியத்தில் முதன்மை பெற்றுள்ள நூலாக பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கிழ்கணக்கு போன்ற நூல்கள் இன்றும் தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்து கொடுக்கின்றன. தமிழ் மொழியில் உள்ள வளத்தை போன்று உலகில் உள்ள வேறு எந்த மொழியிலும் இல்லை. தமிழ் மொழியில் மிக பழமையான நூல் தொல்காப்பியம் ஆகும். தொல்காப்பியம் இலக்கணமானது எழுத்து, சொல், பொருள் போன்ற மூன்று இலக்கணத்தினையும் கூறுவதால் தமிழ் மொழியில் தொல்காப்பியம் சிறந்து விளங்கக்கூடிய நூலாக இருக்கிறது.

இந்திய நாட்டில் செம்மொழி அடைந்த அங்கீகாரம்:

இந்திய மற்றும் வெளி நாடுகளில் உள்ள பல தமிழ் அமைப்புகள் மற்றும் அறிஞர்களின் பல நாட்களின் முயற்சியை தொடர்ந்து தமிழ் மொழியானது ஒரு செம்மொழியாக இந்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டத்தின் போது, அப்போதைய இந்திய குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் 2004 சூன் 6 ஆம் நாள் தமிழை செம்மொழியாக அறிவித்தார்.

உலகில் மற்ற மொழிகளெல்லாம் வாயினால் பேசப்பெற்றுச் செவிக்குக் கருத்தை உணர்த்த வல்லவை; ஆனால் சிறப்புமிக்க தமிழ் மொழியானது இதயத்தால் பேசப்பெற்று இதயத்தால் உணரவைக்கும் மொழியாகும். தமிழ் மொழியானது தனித்து இயங்கக்கூடிய மொழியாகும். காலத்தால் என்றென்றும் அழியாத செழுமை வாய்ந்த மொழித்தான் தமிழ் மொழியாகும். இத்தகைய வளமை பொருந்திய நமது தாய் மொழியான தமிழ்மொழிக்கு இன்னும் பல இலக்கிய அணிகலன்களை சூட்டி அழகு சேர்ப்போம். நன்றி வணக்கம்..!

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil