Thaimai Thirukkural in Tamil
வாசகர்களுக்கு வணக்கம்..! திருக்குறள் பற்றி அறியாதவர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள். நாம் அனைவருமே திருக்குறள் படித்திருப்போம். தெய்வப்புலவர் என்று போற்றப்படும் திருவள்ளுவரால் இயற்றப்பட்ட நூல் தான் திருக்குறள். இதில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. ஒரு அதிகாரத்திற்கு பத்து குறள் வீதம் மொத்தம் 1330 திருக்குறளை கொண்டுள்ளது. பொதுவாக இவை அனைத்தும் நம் அனைவருக்குமே தெரிந்த ஓன்று தான். ஆனால் வரும் மே மாதம் 12 ஆம் தேதி அன்று அன்னையர் தினம் வருகிறது. ஆகவே அன்னையை போற்றும் திருக்குறள் பற்றி இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
தாயை போற்றும் திருக்குறள்:
பொதுவாக அம்மா இல்லையென்றால், இவ்வுலகமே இயங்காது. அம்மா என்ற வார்த்தை எவ்வளவு புனிதமானது என்று நம் அனைவருக்குமே தெரியும். இவ்வுலகில் அனைவருக்கும் இருக்கும் ஆறுதலான வார்த்தை என்றால் அது அம்மா தான். அம்மா என்ற வார்த்தைக்கு ஈடாக எதுவுமே இருக்க முடியாது.
அம்மா என்றாலே ஆனந்தம் தான். நாம் ஒவ்வொருவரும் இவ்வுலகில் உண்மையான அன்பை காணவேண்டும் என்றால், அது தாயின் கண்களில் மட்டுமே காண முடியும். வாழ்க்கையில் எது மாறினாலும், தாயின் அன்பு மட்டும் மாறாத ஒன்றாக இருக்கிறது. அம்மாவின் அன்பு தூய்மையானது. தாயின் அன்பிற்கு நிகரான உண்மையான பாசம் இந்த உலகில் வேற எதுவும் இல்லை.
இப்படி தாயின் பெருமைகளை நாம் சொல்லிக்கொண்டே போகலாம். அதேபோல திருவள்ளுவரும் தாயை போற்றி திருக்குறளும் எழுதியுள்ளார். அந்த திருக்குறளையும், அதன் பொருளையும் தற்போது காண்போம்.
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
மு.வ விளக்க உரை:
தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
தம் மகனைக் கல்வி ஒழுக்கங்களால் நிறைந்தவன் என்று அறிவுடையோர் கூற அதைக் கேட்ட தாய், அவனைப் பெற்ற பொழுதைக் காட்டிலும் மிகுதியாக மகிழ்வாள்.
கலைஞர் விளக்க உரை:
நல்ல மகனைப் பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியை அந்தத் தாய் அடைவாள்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |