தாலி உருக்கள் வகைகள்

Advertisement

தாலி உருக்கள் பெயர்கள் 

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் தாலி உருக்கள் வகைகள் / பெயர்கள் பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க. ஒவ்வொரு பெண்ணுக்கும் தாலி என்பது எவ்வளவு முக்கியம் என்று தெரியும். ஒரு பெண் திருமணம் ஆனவள் என்பதை உணர்த்தும் விதமாக திருமணத்தின் போது மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டும் வழக்கம் அக்காலம் முதல் இக்காலம் முதல் பாரம்பரியமாக இருந்து வருகிறது.

தாலியில் பல வகைகள் உள்ளது. அதேபோல், தாலியில் கோர்க்கும் உருக்களும் பல்வேறு வகைகளில் உள்ளது. ஒவ்வொரு குலத்திற்கும் ஏற்றவாறு தாலியின் அமைப்பு வேறுபடும். எனவே, இப்பதிவின் வாயிலாக தாலியில் கோர்க்கப்படும் உருக்களின் வகைகள் மற்றும் பெயர்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

தாலியின் வகைகள்:

  • கருந்தாலி
  • மஞ்சள்தாலி
  • தங்கத்தாலி
  • பெருந்தாலி
  • சிறுதாலி
  • தொங்குதாலி
  • பொட்டுத்தாலி
  • சங்கத்தாலி
  • மண்டத்தாலி
  • ரசத்தாலி
  • தொப்புத்தாலி
  • உருண்டைத்தாலி
  • இருதாலி

ஒவ்வொரு குலத்திற்கும் ஏற்றவாறு தாலியின் அமைப்பு மாறுபடும். பெரும்பாலும் தாலி வகைகளில் அதிகமாக பயன்படுத்தப்படுவது கருந்தாலி மற்றும் மஞ்சள் தாலி தான்.

  • கருந்தாலி – கருந்தாலி என்பது, கழுத்தை சுற்றி நெருக்கமாக இருக்கும்.
  • மஞ்சள் தாலி – மஞ்சள் தாலி என்பது, மஞ்சள் கயிற்றில் உள்ள நீளமான தாலி ஆகும்.
  • தங்கத்தாலி – தங்கத்தாலி என்பது, தங்க ஜெயினுடன் சேர்க்கப்பட்டு அணிந்திருப்பது ஆகும்.

தாலி செயின் எத்தனை பவுனில் போடுவது நல்லது.?

தாலி உருக்கள் வகைகள்

  • காசு மணி 
  • அரை காசு மணி 
  • வாழை சீப்பு 
  • மங்கை 
  • பவளம் 
  • கருகமணி 

தாலி உருக்கள் எண்ணிக்கை:

தாலியில் காசு மணி, அரை காசு மணி, வாழை சீப்பு, மங்கை, பவளம் மற்றும் கருகமணி என எத்தனை உருக்கள் வேண்டுமானாலும், கோர்த்து கொள்ளலாம். ஆனால், ஒற்றைப்படையில்  மட்டுமே போட வேண்டும். அதாவது, 3,5,7,9,11,13,15 என ஒற்றைப்படை வரிசையில் மட்டுமே போட வேண்டும்.

திருமாங்கல்யத்தில் முதலில், மூன்று உருக்கள் மட்டுமே இருக்கும். அவை, திருமாங்கல்யம் மற்றும் இரண்டு உருக்கள்  ஆகும். அதாவது, புதிதாக கல்யாணம் செய்பவர்கள் மூன்று உருக்கள் மட்டுமே கோர்த்து போடுவார்கள்.

எத்தனை முறை தாலியை பிரித்து கோர்க்க வேண்டும்.?

வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை தாலி பிரித்து கோர்த்து போட வேண்டும்.

தாலி கயிறு மாற்ற உகந்த மாதம் மற்றும் நாள் 2024

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil

 

 

Advertisement