திரிசங்கு நிலை
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் திரிசங்கு நிலை என்றால் என்ன.? என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். திரிசங்கு அல்லது திரிசங்கு நிலை பற்றி நாம் அனைவருமே கேட்டு இருப்போம். ஆனால், திரிசங்கு நிலை பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவில் திரிசங்கு நிலை பற்றிய விவரங்களை பின்வருமாறு கொடுத்துள்ளோம்.
திரிசங்கு நிலை பற்றி தெரிந்துகொள்வதற்கு முன், முதலில் திரிசங்கு என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்வோம். திரிசங்கு என்பது ஒருவருடைய பெயர். ஏன் அவருக்கு இந்த பெயர் வந்தது. அவர் இயற்பெயர் என்ன என்பதை பின்வருமாறு படித்து தெரிந்துகொள்வோம்.
திரிசங்கு என்றால் என்ன.?
அயோத்தியை தலைநகரமாக கொண்ட சூரிய வம்சத்து மன்னர் திரியருனியின் மகன் தான் திரிசங்கு. இவரின் இயற்பெயர் சத்தியவிரதன். சத்தியவிரதன் தருமநெறிப்படி வாழாததால் கோபம் கொண்ட மன்னர் திரியருனி , ஏழு புகழ்பெற்ற சப்தரிசிகளுள் ஒருவரான வசிட்டரின் ஆணைப்படி சத்தியவிரதனை நாடு கடத்தினார். அதனால், சத்திய விரதம் காட்டில் வாழ்ந்து வந்தான்.
சில ஆண்டுகளுக்கு பிறகு, மன்னர் திரியருனி வன வாழ்வு மேற்கொள்ள காட்டிற்கு சென்றபோது, நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடியது. அப்போது விசுவாமித்திரர் முனிவர், குடும்பத்தை காட்டில் விட்டு விட்டு கடற்கரையில் கடும் தவம் புரிந்துகொண்டிருந்தார். இதனால், விசுவாமித்திரர் குடும்பம் பட்டினியில் வாடியது. அதனை அறிந்த சத்தியவிரதன் அவர்களுக்கு உணவு அளித்து அடைக்கலம் கொடுத்தான்.
அப்போது சத்தியவிரதன், தன்னை நாடு கடத்த காரணமாக இருந்த வசிட்டரின் பசுவை வேட்டையாடி கொன்று அதன் இறைச்சியை உணவு இல்லாமல் கஷ்டப்பட்ட விசுவாமித்திரர் குடும்பத்திற்கு கொடுத்து சமைக்க சொல்லி அவர்களுடன் சேர்த்து இவனும் சாப்பிட்டான்.
இதனை அறிந்த வசிட்டர் கோபம் அடைந்து, தகப்பனின் கோபதிற்கு ஆளானது, பசுவைக் கொன்றது மற்றும் பசு இறைச்சியை உண்டது என மூன்று பாவங்களுக்காக திரிசங்கு என்ற பெயருடன் சண்டாளனாக விளங்குவாய் என சாபமிட்டார்.
அதன் பிறகு, தவத்தினை முடித்துவிட்டு வந்த விசுவாமித்திரர் கஷ்டகாலத்தில் தன் மனைவி மக்களுக்கு உட்னவு அளித்து பாதுகாத்த சத்தியவிரதனுக்கு மனித உடலுடனேயே சொர்க்கம் செய்ய அருளினார். ஆனால், இந்திரனோ திரிசங்குவை தடுத்து நிறுத்தினான். இதனால், விசுவாமித்திரர் பூமிக்கும் சொர்க்கத்திற்கும் நடுவில் திரிசங்குவிற்குத் தனி சொர்க்கம் அமைத்து கொடுத்தார். அதாவது பூமியும் இல்லை, சொர்க்கமும் இல்லை. இதுதான் இரண்டும் கேட்டான் நிலை. இதனை தான் திரிசங்கு நிலை என்று கூறுவார்கள். அதாவது இரண்டும் கெட்டான் மனநிலையில் இருப்பவர்களை திரிசங்கு நிலையில் உள்ளவர்கள் என்று அழைப்பார்கள்.
திரிசங்கு நிலை என்றால் என்ன.?
- இரண்டுக்கு இடையில் மாட்டிக்கொண்டு, இரண்டு பக்கமும் இருக்கும் வாய்ப்புக்களை இழந்து நிற்கும் திண்டாட்ட நிலை திரிசங்கு நிலை ஆகும். அப்படியும் இல்லாமல் இப்படியும் இல்லாமல் அந்தரத்தில் நிற்கும் நிலை திரிசங்கு நிலை.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |