தூய தமிழ் வார்த்தைகள்: நாம் தமிழர்கள் என்பதால் ஒருபோதும் தூய தமிழில் பேச கூச்சம் படக்கூடாது. அன்றாட வாழ்க்கையில் ஆங்கிலமும், தமிழும் கலந்து தான் பேசிக்கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் பிறந்துவிட்டு தூய தமிழில் பேச அனைவரும் தயங்கிக்கொண்டிருக்கிறோம். தூய தமிழ் சொற்களை தினமும் பேச்சு நடைமுறையில் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் தூய தமிழ் சொற்களானது சரளமாகி விடும். இந்த பதிவில் அனைவருக்கும் பயனுள்ள வகையில் நம் அன்றாட பேச்சில் கலந்துள்ள ஆங்கில வார்த்தைக்கு தூய தமிழ் (thooya tamil varthaigal) அர்த்தங்களை படித்து தெரிந்துக்கொள்ளுவோம்.