தேசிய சின்னம் |
சாரநாத் அசோகத் தூணின் உச்சியில் அமைந்திருக்கும் நான்முகச் சிங்கம் இந்தியாவின் தேசிய இலச்சினையாக ஜனவரி 26, 1950-யில் ஏற்றுக் கொள்ளப்பட்டது |
தேசிய கொடி |
கடும் காவி, கடும் பச்சை, மத்தியில் தூய வெண்மை ஆகிய மூன்று நிறங்களும் அடங்கிய மூவர்ணக் கொடியே இந்தியாவின் தேசியக் கொடி. வெண்பட்டையின் நடுவே கடல் நீல வண்ணம் கொண்ட 24 அரும்புக் கால்களை உடைய அசோக சக்கரம் ஒன்று உள்ளது. |
தேசிய கீதம் |
இந்திய அரசியமைப்பு குழு 1950 ஜனவரி 24 ல் ”ஜன கண மன” பாடலை நாட்டின் தேசிய கீதமாக அங்கிகரித்தது |
தேசிய பாடல் |
வங்க எழுத்தாளர் பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய வந்தே மாதரம் பாடலின் முதல் பத்தி விடுதலை போராட்டத்தில் முக்கியப் பங்களித்தது, இதன் காரணமாக, தேசிய கீதத்துக்கு இணையான தேசியப் பாடல் என்ற சிறப்பு இப்பாடலுக்கு அளிக்கப்படுகிறது. |
தேசிய நாட்காட்டி |
சக வருட நாட்காட்டி 1957 ஆண்டு மார்ச் 22 முதல் தேசிய நாட்காட்டியாக அங்கீகரிக்கப்பட்டது. |
தேசிய விலங்கு |
புலி இந்தியாவின் தேசிய விலங்காக 1973-ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. |
தேசிய நீர் விலங்கு |
இந்திய நாட்டின் தேசிய நீர் விலங்கு நன்னீரில் வாழும் ஓங்கில் (டால்பின்) ஆகும். |
தேசிய பறவை |
மயில் இந்தியாவின் தேசிய பறவையாக 1963-ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. |
தேசிய மொழி |
அரசியல் சட்டத்தின் எட்டாம் அட்டவணைப் படி தற்போது இந்தி, தமிழ், மலையாளம், வங்காளி, அசாமி, தெலுங்கு,மராத்தி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், சிந்தி, குஜராத்தி, காஷ்மீரி, உருது, கன்னடம், கொங்கணி, மணிப்புரி, நேப்பாளி, தோஹ்ரி, போடோ, சந்தாலி, மைதிலி என்னும் 22 மொழிகள் இடம்பெற்றுள்ளன. |
தேசிய மரம் |
இந்தியாவின் தேசிய மரம் ஆலமரமாக கருதப்படுகிறது. இந்த மரத்தில் பல மருத்துவ குணம் உள்ளது. |
தேசிய நதி |
இந்தியாவின் தேசிய நதியாக 2008 ஆம் ஆண்டு கங்கை நதியை அறிவிக்கப்பட்டது. |
தேசிய மலர் |
இந்தியாவின் தேசிய மலராக தாமரை மலரை 1950-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. |
தேசிய கனி |
மாம்பழம் இந்தியாவின் தேசிய பழமாக 1950-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. |
தேசிய விளையாட்டு |
ஹாக்கி இந்தியாவின் தேசிய விளையாட்டாகும். |