தேடிச் சோறு நிதம் தின்று
நாம் சிறு வயதிலேயே பள்ளிப்படிப்பு படிக்கும் போது மகாகவி பாரதியார் பற்றி கேள்வி பட்டிருப்போம். அந்த வகையில் இவரது பாடல்கள் மற்றும் கவிதைகள் அனைவரையும் கவரும் விதமாகவே இருந்தது. இப்படிப்பட்ட புகழினை கொண்ட பாரதியார் 1882-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ஆம் தேதி அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரம் என்னும் ஊரில் சின்னசாமி ஐயர் மற்றும் இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு மகனாய் பிறந்தார். இவரது இயற்பெயர் சுப்பிரமணியம் என்பது ஆகும். இவருக்கு 7 வயது இருக்கும் போதே கவிதைகள் எழுதும் திறமை கொண்ட ஒருவராக திகழ ஆரம்பித்தார்.
அதோடு மட்டும் இதற்கான ஒரு வெற்றியாக 11-வது வயதில் கவிபாடும் ஆற்றலை கொண்டவர் பாரதியார் என்னும் படத்தினையும் இவர் பெற்றார். இவரது நூல்கள் அனைத்தும் பெண்களின் விடுதலை பற்றியும், சமூகத்தில் அவர்களுக்கான பங்களிப்பும் பற்றியதுமாகவே மட்டும் இருந்தது. மேலும் சுதந்திர போராட்டத்திற்காக போராடிய தலைவர்களுள் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. எனவே இன்றைய பதிவில் தேடிச் சோறு நிதம் தின்று என்ற பாரதியாரின் பாடலுக்கான முழு விளக்கத்தினையும் பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
தேடிச் சோறுநிதந் தின்று விளக்கம்:
தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம்வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பலசெயல்கள் செய்து
நரைகூடிக் கிழப்பருவ மெய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பலவேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்றுநினைத் தாயோ..?
இந்த பாடலின் ஆசிரியர் மகாகவி பாரதியார் ஆவார். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகம் ஆனது ஒரு கனவு தோற்றம். அத்தகைய கனவு தோற்றத்தில் தான் ஒரு சிறிய கனவாக இருப்பதுதான் மனிதனின் வாழ்க்கை ஆகும்.
இப்படிப்பட்ட கனவினை நிஜம் என்று நினைத்து உணவு, தூக்கம் மற்றும் வீடு என இவற்றை மட்டுமே நினைத்து வாழும் மனிதர்களின் வாழ்க்கை நெருப்பை பார்த்து கனி என்று தவறுதலாக எண்ணி நெருப்பில் வீழ்ந்து உயிரை மாய்த்து கொள்ளும் பூச்சிகளுக்கு ஈடானவர் என்பதே பாரதியின் கருத்து ஆகும்.
மேலும் எனக்க்கு தெரிந்து நன்மைகளை ஊருக்கு கூறினேன், ஊரில் வாழ்பவர்களுக்கு உபதேசம் கூறினேன், பிறருக்கு அறிவுரை கூறுதல் என இதுபோன்ற உபதேசங்களை செய்தும் கூட எந்த விதமான பயனும் இல்லை கிடைப்பது இல்லை.
ஏனென்றால் இதுபோன்ற வாழ்க்கை யாருக்கும் அமைந்து விடக்கூடாது என்று எண்ணி தேடிச் சோறு நிதம் தின்று என்னும் பாடல் வழியாக இறைவனால் படிக்கப்பட மனிதனின் வாழ்க்கை ஆனது திரை மூட, நரை கூட மற்றும் பிணி சேரக் காலனுக்கு என இவற்றோடு மட்டுமே இருந்து விடக்கூடாது என்பது அர்த்தம் ஆகும்.
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் இறைவனால் படைக்கப்பட்ட இந்த வாழ்க்கை அதுவும் 1 முறை தான் கிடைக்கும் எனும் போது அதனை பொறுப்பாக வாழாமல் வாழ்க்கையினை வீணடித்து கொண்டிருக்கும் மனிதர்களை கண்டு வெறுப்பும், மனவேதனை மற்றும் ஏளனம் என இவற்றை எல்லாம் தானாகவே வருகிறது. இவர்கள் எல்லாம் திருந்தி வாழவே மாட்டார்களா..? என்பதை தேடிச் சோறுநிதந் தின்று பாடலின் விளக்கமாக இருக்கிறது.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |