Therthal Nadathai Vithigal 2024
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்..! இன்று நாம் இந்த பதிவின் வாயிலாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக நாம் அனைவருமே வாக்களிக்கும் முன் தேர்தல் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் நம் பதிவின் வாயிலாக தேர்தல் பற்றிய தகவல்களை ஒவ்வொன்றாக கூறி வருகின்றோம். அந்த வகையில் இன்று தேர்தல் நடத்தை விதிமுறைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
தேர்தல் மற்றும் வாக்குரிமை பற்றிய முழக்கங்கள்..
தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்ன..?
பொதுவாக தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதுடன் தேர்தல் விதிகளை அரசியல் கட்சிகள் சரியாக பின் பற்றி வருகின்றதா என்பதை கண்காணிக்கும் பொறுப்பு இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சவாலான பணியாக இருக்கிறது.
அதுபோல தலைமைத் தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிகளுக்கு கட்டுப்பட வேண்டிய கட்டாயத்திற்கு அரசியல் கட்சிகள் ஆளாகி இருக்கின்றன. மேலும் ஏதேனும் விதி மீறல்கள் நடந்தால் அதற்குரிய தண்டனையை எதிர்கொள்ளவும் நேரிடுகிறது.
அதனை தொடர்ந்து நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ம் தேதி வெள்ளிக் கிழமை அன்று நடைபெறவுள்ளது. ஆகவே இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகளை தற்போது காணலாம்.
வாக்குரிமை முக்கியத்துவம் என்ன தெரியுமா
தேர்தல் கட்டுபாடுகள் என்ன..?
- தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு, தேர்தல் முடியும் வரை, ஆட்சியில் உள்ள அரசு புதிய நலத் திட்டங்களை அறிவிக்கக் கூடாது.
- அரசு ஊழியர்களையோ, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகளையோ பணியிட மாற்றம் செய்யக் கூடாது.
- பதவி உயர்வும் அளிக்கக் கூடாது. வேறு வழியில்லை என்றால், தேர்தல் ஆணைய ஒப்புதல் பெற்ற பிறகு இடமாற்றமோ, பதவி உயர்வோ வழங்கலாம்.
- அரசு விழாக்களில் அமைச்சர்கள் வாக்கு சேகரிக்கும் முயற்சியில் ஈடுபடக் கூடாது.
- அரசு ஊழியர்களையோ, அரசு வாகனங்களையோ பரப்புரைக்கு பயன்படுத்தக் கூடாது.
- பொது மைதானங்கள், ஹெலிபேட் போன்றவற்றைப் பயன்படுத்த அனுமதிப்பதில் கட்சி பேதம் பார்க்கக் கூடாது.
- வாக்குச்சாவடிக்கோ, வாக்கு எண்ணும் இடத்திற்கோ அமைச்சர்கள் செல்ல அனுமதியில்லை.
- வேட்பாளராகவோ, வாக்காளராகவோ அல்லது கட்சியின் அதிகாரப்பூர்வ ஏஜெண்டாகவோ இருந்தால் மட்டுமே குறிப்பிட்ட அந்த இடங்களுக்கு அமைச்சர்கள் செல்லலாம்.
- சாதி, மத, மொழி மற்றும் இன ரீதியாக வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பரப்புரையில் ஈடுபடக் கூடாது.
- கோவில், மசூதி, தேவாலயம் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் தேர்தல் பரப்புரை செய்யக்கூடாது.
- மற்ற கட்சிகளை கொள்கை, செயல் திட்டங்கள், கடந்த கால செயல்பாடுகள் அடிப்படையில் விமர்சிக்கலாமே தவிர, தனி நபர்களின் சொந்த வாழ்க்கை குறித்த விமர்சனம் கூடாது.
- மற்ற கட்சிகளின் பரப்புரைக் கூட்டங்களில் குழப்பம் விளைவிக்கக் கூடாது.
- அனுமதி பெறாமல் தனியார் இடங்களைப் பரப்புரைக்கு பயன்படுத்தக் கூடாது.
- தொலைக்காட்சி, கேபிள் நெட்வொர்க், ரேடியோ போன்றவற்றில் பரப்புரை விளம்பரங்களை வெளியிட, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 3 நாட்களுக்கு முன்னதாகவே தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்.
- வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது, வாக்குச்சாவடிக்குச் செல்ல போக்குவரத்து வசதி செய்து தருவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது.
வாக்காளர், ஒரு வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சிக்கோங்க
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |