Devadasi Meaning in Tamil
பொதுவாக நாம் அனைவரும் கோவில்களுக்கு செல்வோம். அங்கு நிறைய ஐயர் மற்றும் பூசாரிகள் இருப்பார்கள். ஆனால் இந்த கோவில்களில் நிறைய ஆண்கள் மட்டுமே இருப்பார்கள். அங்கு அதிகமாக பெண்கள் யாரும் இருந்து நாம் பார்த்திருக்க மாட்டோம். ஆனால் அந்த காலத்தில் ஆண்களை விட பெண்களும் இருந்திருக்கிறார்கள். அதாவது அவர்களை தேவதாசிகள் என்பார்கள். அது என்ன தேவதாசிகள் என்று கேட்பீர்கள். ஆனால் இப்படி கூட அந்த காலத்தில் கோவில்களில் இருந்திருக்கிறார்கள். அது யார் இவர்களை என்ன என்று அழைப்பார்கள். அதனை பற்றி தெளிவாக பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
தேவதாசி என்றால் என்ன:
தேவதாசி என்பவர் கோவில்களில் திருப்பணிக்காகவும் சேவைக்காகவும் சிறுவயதில் நேர்ந்து விடப்பட்ட பெண்கள் ஆவர். இவர்களை இறைவனுக்கு சேவை செய்பவர்கள் என்பார்கள். இவர்கள் அனைவருமே கடவுளுக்கு திருமணம் செய்யப்பட்டவர்கள் என்பார்கள். அதேபோல் இவர்களை நித்திய சுமங்கலியாகவும் கருதப்படுவார்கள்.
இவர்கள் கோவில் ஆடல் பாடல் நடன கலைஞர்களாக இருப்பார்கள். இசை, போன்றவற்றில் திறமை அற்றவர்கள், ஆர்வம் இல்லாதவர்கள் கோயிலை தூய்மை செய்தல், நீர் இறைத்தல், பூ கட்டுதல், மடப்பள்ளிக்கு உதவுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டனர்.
தஞ்சை பெரிய கோயிலைக் கட்டியபோது கோயிலுக்கு 400 தளிச்சேரி பெண்டிரை நியமித்து அவர்களுக்கு குடியிருப்புகளை இராஜராஜ சோழன் அமைத்தான் என்று கல்வெட்டுகள் குறிக்கின்றன. சோழர் காலத்தில் தளிச்சேரி பெண்டிர் சமூக மதிப்பு கொண்டவர்களாகவும், தான் விரும்பியவரை மணம் புரிந்து கொள்ள உரிமை கொண்டவர்களாக இருந்தனர்.
இவர்கள் போல் இப்போது யாரும் இருப்பது இல்லை. இதுபோல் யாரும் இருக்கக்கூடாது என்று தேவதாசி ஒழிப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த ஒழிப்பு சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள நினைத்தால் இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தமிழ் மொழி பற்றிய சுவாரசியமான தகவல்கள்
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |