தொல்காப்பியம் வரலாறு | Tholkappiyam Varalaru

tholkappiyam

தொல்காப்பியம் சிறப்புகள் | Tholkappiyam in Tamil

ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான தொல்காப்பியம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். இன்று உள்ள பல நூல்களில் மிகவும் பழமையான இலக்கண நூல்களில் ஒன்று தொல்காப்பியம் ஆகும். இது தமிழுக்கு கிடைத்த முதல் இலக்கண நூலாகும். நம் தமிழ்மொழியின் பெருமைகள் மற்றும் சிறப்புகளை எடுத்துறைப்பதற்கு உருவான பல நூல்களில் இதுவும் ஒன்றாகும். தொல்காப்பியம் என்பதறகான பெயர் காரணம் தொன்மை + காப்பியம் = தொல்காப்பியம். மிகவும் தொன்மையான காப்பியம் என்பதனால் இப்பெயர் பெற்றுள்ளது. தொல்காப்பியத்தின் இன்னும் பல சுவாரசியமான தகவல்களை பற்றி பார்க்கலாம் வாங்க.

தொல்காப்பியம் ஆசிரியர்:

tholkappiyam tamil

 • இந்நூலை எழுதியவர் தொல்காப்பியர் ஆவார். அகத்தியரின் பன்னிரண்டு மாணவர்களில் ஒருவர் தொல்காப்பியர். காப்பிய குடி என்னும் ஊரில் இவர் பிறந்ததால் இவர் இப்பெயரை பெற்றுள்ளார் என இறையனார் களவுரை காலத்தில் சொல்லப்படுகிறது.
 • இவருடைய இயற்பெயர் திரணதூமாக்கினி என்றும், தந்தை பெயர் சமதக்கினி என்றும், சகோதரர் பரசுமார் என்றும் நச்சினார்க்கினியர் கூறப்பட்ட ஒரு கருத்தும் உள்ளது. தமிழ் உரைகளில் பல புலவர்களின் வரலாறு இன்னும் சரியாக கிடைக்காதது போல் தொல்காப்பியரின் வரலாறும் இதுவரை சரியாக கிடைக்க பெறவில்லை.

சிறப்புப் பாயிரம்- Tholkappiyam Payiram

தொல்காப்பியம் 1610 சூத்திரங்களை கொண்டுள்ளது. இந்த நூலிற்கு சிறப்பு பாயிரம் எழுதியவர் பனம்பாரனார். இந்நூல் நிலந்தரு திருவிற் பாண்டியன் அரசவையில் அதங்கோட்டு ஆசான் அவர்களது முன்னிலையில் வெளியிடப்பட்டது என பனம்பாரனார் கூறுகிறார். இதற்கு முன் தோன்றிய பல நூல்களில் உள்ள செய்யுள் நடை மற்றும் சொல் வழக்கு ஆகியவற்றை ஆராய்ந்து நூல்களை இயற்றியுள்ளார். ஐந்திரம் எனும் வடமொழி நூலில் பயிற்சி பெற்றவராகவும் உள்ளார்.

தொல்காப்பியர் வரலாறு:

என்ப, என்மனார் புலவர், யாப்பறி புலவர், தொன்மொழிப் புலவர், குறியறிந்தோர் போன்ற பல ஆசிரியர்கள் தொல்காப்பியரின் காலத்திலும் அவரின் முந்தைய காலத்திலும் வாழ்ந்தார்கள் என இந்நூலை வைத்து கூறப்படுகிறது. ஆனால் அவர்களின் நூல்கள் அழிந்து விட்டன. இடை சங்கம் மற்றும் கடைச்சங்கத்தில் வாழ்ந்தவர்களுக்கும் தொல்காப்பியம் இலக்கணமாக இருந்தது என்கிறார் இறையனார் களவியல் ஆசிரியர்.

தொல்காப்பியரின் காலம்:

 • தொல்காப்பியரின் வரலாறு எவ்வாறு கிடைக்க பெறவில்லையே அதே போன்று அவருடைய காலமும் ஆய்வுக்குரியதே ஆகும். ஒவ்வொரு அறிஞரும் பல கருத்துக்களை எடுத்துரைக்கின்றனர். அதை நம்பவும் முடியாது, நம்பாமல் இருக்கவும் முடியாது.
 • ஒரு சில அறிவியல் அறிஞர்கள் கி.மு. 5 அல்லது 3 ஆம் நூற்றாண்டுக்குரியவர் என்றும், ச.வையாபுரிப்பிள்ளை அவர்கள் கி.பி.5 ஆம் நூற்றாண்டினர் என்றும் கூறுகிறார்கள்.
 • பொருளதிகாரத்தில் உள்ள சில இயல்கள் தொல்காப்பியர் எழுதாமல் வேறு சில புலவர்கள் இயற்றி இருக்கலாம் என்ற கருத்தும் நிலவி கொண்டிருக்கிறது.
 • சங்க இலக்கியங்களில் தொல்காப்பியத்தின் மாறான கருத்துக்கள் உள்ளன என்பதால் இந்த நூல் சங்க இலக்கியங்கள் தோன்றுவதற்கு முன்னராகவே தோன்றிய நூல் என்று சொல்லப்படுகிறது.

Tholkappiyam Athikaram Ethanai:

தொல்காப்பியம் மூன்று அதிகாரங்களை கொண்டுள்ளது.

 1. எழுத்ததிகாரம்
 2. சொல்லதிகாரம்
 3. பொருளதிகாரம்

தொல்காப்பியத்தில் எத்தனை இயல்கள் உள்ளது:

 • ஒவ்வொரு அதிகாரங்களும் 9 இயல்களை கொண்டுள்ளது.
எழுத்ததிகாரம்சொல்லதிகாரம்பொருளதிகாரம் 
நூல் மரபுகிளவியாக்கம்அகத்திணையியல்
மொழி மரபுவேற்றுமையியல்புறத்திணையியல்
பிறப்பியல்வேற்றுமை மயங்கியல்களவியல்
புணரியல்விளி மரபுகற்பியல்
தொகை மரபுபெயரியல்பொருளியல் 
உருபியல்வினையியல்மெய்ப்பாட்டியல்
உயிர் மயங்கியல்இடையியல்உவமை இயல் 
புள்ளி மயங்கியல்உரியியல்செய்யுளியல்
குற்றியலுகரப் புணரியல்எச்சவியல்மரபியல்

எழுத்ததிகாரம்:

 • தமிழின் 30 உயிர்மெய் எழுத்துக்களும், குறில், நெடில், வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகிய இலக்கணங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் இதில் சொல்லின் முதலும் முடிவும் என்ன என்பதும் விளக்கப்பட்டுள்ளது.
 • தமிழின் ஒளி வடிவத்தையும், வரி வடிவத்தையும் இந்நூலில் எடுத்துரைத்துள்ளார். குற்றியலுகரம், ஒகரம், எகரம் போன்றவை புள்ளி பெரும் என்கிறார்.
 • சொல்லின் நிலை மொழி, வருமொழியில் வரும் புணர்ச்சிகளை எடுத்துரைக்கிறார். புணர்ச்சிகளை,
 1. வேற்றுமைப் புணர்ச்சி
 2. வேற்றுமை அல்லாத புணர்ச்சி
 3. இயல்புப் புணர்ச்சி
 4. விகாரப்புணர்ச்சி என வகைப்படுத்தி விளக்கியுள்ளார்.
 • எழுத்ததிகாரத்தில் தொல்காப்பியர் பண்டைய தமிழ்நாட்டில் வழங்கிய இசை இலக்கணத்தைக் குறிக்கிறார். அதற்கு நரம்பின் மறை என்று பெயர்.
 • நம் வழக்கில் இருக்கும் தமிழ் மாதங்களின் பெயர்கள் இகர ஈற்றிலும், ஐகார ஈற்றிலும் எழுதப்பட்டுள்ளது மற்றும் பேசப்பட்டுள்ளது.
ஐம்பெரும் காப்பியங்கள் பற்றி கட்டுரை

சொல்லதிகாரம்:

 • பெயர்கள் உயர்திணை, அஃறிணை அடிப்படையில் உருவாக்கின என்பதை விளக்கி, இரு திணைக்கும் உள்ள ஐந்து பால் மற்றும் பெயர்களையும் விளக்கினார்.
 • இந்த அதிகாரத்தில் சொல் இலக்கணம், வேற்றுமை உருபுகள், வேற்றுமை மயக்கம், விளியேற்கும் மரபு, விளியை ஏற்காத பெயர்கள் போன்றவற்றையும் தெளிவுபடுத்தியுள்ளார்.
 • பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், வினைமுற்று, வினை எச்சம், தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று, பெயரெச்சம், வியங்கோள், எதிர்மறை முற்று போன்ற முற்றுகளும், வேற்றுமைத் தொகை, உவமை தொகை, வினைத்தொகை போன்ற தொகைகளும், இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் போன்ற நால்வகை சொற்களும் அதன் தன்மைகளும் விளக்கப்பட்டுள்ளன.
 • வடசொல் கிளவி வடவெழுத்து ஒரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும். நம்முடைய மொழியின் ஒலிக்காக பிறமொழிகளிடமிருந்து ஒலியை கடன் பெறக்கூடாது அவ்வாறு கடன் வாங்கிய திராவிட மொழிகள் தமிழ் மொழியிலிருந்து வேறுபட்டுவிட்டது என்ற காரணத்திற்காக ஒலியை கடன் வாங்க கூடாது என்று கூறுகிறார்.

பொருளதிகாரம்- Tholkappiyam Porulathikaram:

 • இந்த அதிகாரம் ஒரு இலக்கியத்தை உருவாக்குவதற்கான வழிமுறைகளை பற்றி கூறுகிறது. அகம், புறம் என்ற கூறுகள் உள்ளது. இது தமிழின் கவிதை நடையாகும். அரிஸ்டாட்டிலின் கவிதையோடு இதனை ஒப்பிடலாம்.
 • அகத்திணை இலக்கியத்திற்கு பரிபாடலும் கலியும் யாப்பாக இருந்தன. ஏழு அகத்திணைகள் இருந்தன. பின் அகத்திற்கு புறமாக புறத்திணை உருவானது. அதன் பிறகு அகத்திணை மற்றும் புறத்திணை என இரண்டாக பிரிக்கப்பட்டது. அகத்திணை ஏழு, புறத்திணை பன்னிரண்டு.
 • புறத்திணை என்பது வீரர்களின் போர் முறையை எடுத்துரைக்கிறது. அதனை தொல்காப்பியர் வெட்சித் திணையில் கூறியூள்ளார். அகத்திணை என்பது தலைவன் தலைவியின் களவு மற்றும் கற்பு ஆகியவற்றை எடுத்துரைக்கும்.
 • ஒரு கவிதையை அழகாக வெளிப்படுத்துவதற்கு அணியிலக்கண நூல்களை பிற்காலத்தில் உருவாக்கின. வினை, பயன், மெய், உரு என்ற உவமையும் உருவாக்கினார்.
 • மனிதனின் உணர்ச்சிகளான இன்பம், துன்பத்தை சொல்லில் வெளிப்படுத்துவதற்காக நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம் வெகுளி, உவகை ஆகிய எட்டு மெய்ப்பாடுகளையும் உருவாக்கினார். இது  இயற்றமிழுக்கும், நாடகத் தமிழுக்கும் பொதுவானதாகும்.
 • வெண்பா, அகவல், வஞ்சி, கலி என்று நான்கு வகையான யாப்பு மற்றும் 26 அகவுறுப்பு, அம்மை, அழகு, தொன்மை, தோல் முதலான எட்டு வகைப் புற உறுப்புகளையும் கூறி சொல்லிற்கு செய்யுள் இயல் மற்றும் மரபியல் ஆகியவற்றை கூறி பழந்தமிழரின் பெருமைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன.
 • 6 அடி வரைகளான பிசி, அங்கதம், மந்திரம், முதுமொழி, வாயுறை வாழ்த்து, செவியறிவுறூஉ போன்ற செய்யுள் வகை முன்பு வளர்ச்சியில் இருந்ததாக கூறப்படுகிறது.
 • மரம், புல், மனிதன், விலங்கு அனைத்தையும் வேறுபடுத்தி மற்றும் அதன் மரபுகளையும் கூறி ஒரு இலக்கியத்தை உருவாக்குவதற்கு தேவையான 32 உத்திகளையும் பயன்படுத்தி உள்ளார்.
 • ஒரே நூலில் அனைத்து வகையான பேரிலக்கணத்தை எடுத்து கூறி தமிழ்மொழி உயர்தனிச் செம்மொழி என்ற பெருமைக்கு வித்திட்டவர்.
இலக்கணம் என்றால் என்ன?
தமிழ் இலக்கிய நூல்கள் பெயர்கள்

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil