நகைச்சுவை பழமொழிகள்

Advertisement

நகைச்சுவை பழமொழிகள்

வணக்கம் நண்பர்களே. இப்பதிவில் நகைச்சுவை பழமொழிகள் பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க. பழமொழி என்பது வாழ்க்கை நடப்பை எடுத்துரைப்பது ஆகும். நம் முன்னோர்கள் வாழ்க்கை முறையை பழமொழி மூலம் நமக்கு விட்டு சென்றுள்ளார்கள். ஆனால், இக்காலத்தில் எல்லாம் பெரும்பாலான பழமொழிகளை நாம் தவறான அர்த்தத்தில் புரிந்து கொண்டு இருக்கிறோம்.

பழமொழிகளில் நகைசுவை பழமொழிகளும் அடங்கும். அக்காலத்தில் உள்ளவர்கள் அனைவரும் நகைச்சுவை உணர்வு மிக்கவர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு ஏற்றவாறு நகைச்சுவையான பழமொழிகளையும் கூறி வாழ்ந்தார்கள். அதனை பற்றி இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். வாருங்கள் நகைச்சுவை பழமொழிகள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

10 ஈஸியான பழமொழிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்..!

தமிழ் நக்கல் பழமொழிகள்:

  1. அரசன் ஆட்சிக்கு ஆகாசவாணியே சாட்சி.
  2. கைகண்ட மாத்திரை வைகுண்ட யாத்திரை.
  3. காத வழி போய் அறியாதவன் மாதமெல்லாம் நடந்தானாம்.
  4. காரணமடா கல்லுக் கொத்தா, சாகிற கிழவி பிள்ளை பெத்தா.
  5. காவேட்டி ரங்கனுக்கு மேல் வேட்டி இரண்டாம்.
  6. ஆட்டாளுக்கு ஒரு மோட்டாள், அடைப்பக்கட்டைக்கு ஒரு துடைப்பக்கட்டை.
  7. ஆடாதது எல்லாம் ஆடி அவரைக்காயும் பறித்தாச்சு.
  8. அறிந்தும் கெட்டேன், தெரிந்தும் கெட்டேன் முடிவில் சொறிந்து கெட்ட இடம் புண் ஆனதுதான் மிச்சம்.
  9. அறுத்தவள் (தாலியறுத்தவள் -விதவை) ஆண்பிள்ளை பெற்றாளாம்.
  10. அரிசியும் கறியும் உண்டானால் ஆக்கித்திங்க அக்கா வீடு எதற்கு?
  11. காடும் கழனியும் இல்லாத ஊரில் கழுதை முள்ளியே கற்பக விருட்சமாம்.
  12. காமனுக்கு கண் இல்லை, மாமனுக்கோ பெண் இல்லை.
  13. கிடந்த கிடைக்கு நடந்த நடை மேல்.
  14. கிராக்கி மொச்சைக்கொட்டை வராகனுக்கு ரெண்டு கொட்டை.
  15. குங்குமக் கோதைக்கும் அஞ்சு பணம், குருட்டுக் கண்ணிக்கும் அஞ்சு பணமா?
  16. குசு கும்பிடப்போக தெய்வம் திடுக்கிட்டு நின்றதாம்.
  17. குட்டங்கோனி தட்டான் குறைக்கும் வரி வைத்தான்.
  18. கை துப்பை கொண்டு காரியமில்லையாம் வாய் துப்பை கொண்டு வாழ வந்தாளாம்.
  19. சாக்கோ, நாக்கோ இதுக்கு பெயர்தான் அம்மையார் வாக்கோ?
  20. செட்டி முறை எட்டு முறை எட்டு முறையும் கெட்ட முறை.
  21. செட்டியார் வாழ்வு செத்தால் தெரியும்.
  22. எளியவன் பொண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி.
  23. ஆசைக்கு அக்காவை கட்டினானாம், கொஞ்சுவதற்கு கொழுந்தியாளை கட்டினானாம்.
  24. மகள் வாழ்கிற வாழ்க்கைக்கு மாசம் பத்து கட்டு விளக்குமாறு.
  25. தலைப்பிள்ளை ஆண், தப்பினால் பெண்.
  26. மரக்கட்டை சாமிக்கு சப்பாத்திக்கட்டைதான் காணிக்கை.
  27. ரெண்டு பொண்டாட்டிக்காரனுக்கு கொண்டை இருந்தால் என்றுமே திண்டாட்டம்தான். >
  28. ஐயர் வரும்வரை அமாவாசை காத்திருக்குமா?
  29. எண்சாண் உடம்பு இருக்க கோவணத்தில் போய் விழுந்ததாம் இடி.(செத்தாண்டா சேகரு).
  30. நித்திய கண்டம் பூரண ஆயுசு.
  31. கையை பிடித்து கள்ளை வார்த்து, பின் மயிரை பிடித்து பணத்தை வாங்குவது போல.
  32. ஓட்டை கப்பலுக்கு ஒன்பது மாலுமி.
  33. கூரை ஏறி கோழிபிடிக்க தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போவேன் என்றானாம்.
  34. காட்டை வெட்டி சாய்த்தவனுக்கு கம்பு பிடுங்க பயமா?
  35. கூறுகெட்ட மாடு ஏழு கட்டு புல் திங்குதாம்.
  36. படப்போட திங்குற மாட்டுக்கு புடுங்கிபோட்டா காணுமா?
  37. கம்முன்னு கிடக்குமாம் நாய், அதை நோண்டி கெடுக்குமாம் பேய்.
  38. சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி.
  39. இந்த கூழுக்கா இருபத்தெட்டு நாமம்.
  40. பணக்காரன் பின்னும் பைத்தியக்காரன் பின்னும் பத்துபேர்.
  41. இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?.
  42. விடிய விடிய ராமாயணம் கேட்டானாம் .. விடிஞ்சப்புறம் கேட்டா சீதைக்கு ராமன் சித்தப்பா என்றானாம்.

பசி பற்றிய பழமொழிகள்..! 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement