நடுகல் என்றால் என்ன

Advertisement

நடுகல் என்றால் என்ன

பல மொழிகள் இருந்தாலும் நம் நாட்டில் அதிகமாக பேச கூடிய மொழியாக தமிழ் மொழி இருக்கிறது. தமிழ் மொழியில் சரளமாக பேசினால் மற்றும் எழுதினால் மட்டும் போதாது. நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு சொல்லிற்கான அர்த்தம் மற்றும் வேறு சொற்களை அறிந்திருக்க வேண்டும். இதனை தெரிந்து கொள்வதால் அரசு பொது தேர்வுகள் தயார் ஆகுகிறவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். சில வார்த்தைகள் நாம் புத்தகத்தில் படித்ததோடு சரி அதற்கான அர்த்தத்தை அறிந்திருக்க மாட்டோம். இன்னொன்று நம்முடைய முன்னோர்களின் காலத்தில் பயன்படுத்திய வார்த்தைகளுக்கான அர்த்தத்தையும் அறிந்திருக்க மாட்டோம். அந்த வகையில் இன்றைய பதிவில் நடுகல் என்றால் என்ன அதனின் வேறு பி[பெயர்கள் பற்றி அறிந்து கொள்வோம்.

நடுகல் என்றால் என்ன.?

நடுகல் இறந்தவர்களின் நினைவாக எடுக்கப்படும் நினைவுக் கல் ஆகும். இவற்றை “வீரக் கற்கள்” என்றும் கூறுவர். உலகின் பல பகுதிகளிலும் பெருங்கற்காலம் முதலே இவ்வழக்கம் இருந்து வந்துள்ளது. இந்தியாவிலும் வடக்கு, தெற்கு என்ற பேதமின்றி நெடுங்காலமாகவே நடுகற்கள் எடுக்கப்பட்டு வந்துள்ளன. இறந்தவர் அனைவர்க்கும் நடுகற்கள் எடுக்கப்படவில்லை. வீரச்சாவு அடைந்தவர்களுடைய நடுகற்களுக்கே பெருமதிப்பு கொடுக்கப்பட்டு வந்தது. வீரர்களுக்காக எடுக்கப்படும் நினைவுக் கற்களை மக்கள் வணங்கி வந்தமை பற்றியும் பண்டைக்கால இலக்கியங்களில் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளன.

நடுகற்கள் காலம்:

நடுகல் வகைகள்

தமிழ்நாட்டில் நடுகற்கள் எடுக்கும் வழக்கமானது பழங்காலம் முதலே இருக்கிறது. இவை சங்க கால பாடல்கள் மற்றும் எழுதப்பட்ட நூல்களில் நடுகற்கள் பற்றிய தகவல்கள் வந்துள்ளது . செங்கம், தருமபுரி, தேன்கனிக்கோட்டை போன்ற பகுதிகளில் ஆட்சி செய்த அதியமான் போன்ற அரசர்கள் காலத்திலிருந்தே நடுகற்கள் எழுதப்பட்டுள்ளது.

பஞ்சமி நிலம் என்றால் என்ன.. அதன் விதிமுறைகள்

நடுகற்களின் வேறு பெயர்கள்:

நடுகற்களானது வட மேற்காடு, சேலம், தென்னாற்காடு, தர்மபுரி போன்ற மாவட்டங்களில் வேடியப்பன் கல் என்று அழைக்கிறார்கள். மேலும் இதனை வேடியப்பன், கிருஷ்ணராயப்பன், மீனரப்பான், சன்யாசிப்பன் என்ற பெயர்களால் அழைப்பார்கள். சில இடங்களில் ஆஞ்சேநேயர் கல் என்று அழைக்கிறார்கள்.

நடுகற்கள் வகைகள்:

நடுகற்களின் உருவங்கள், அமைப்புகள், கருவிகள் போன்றவற்றை வைத்து வகைப்படுத்தலாம். அவற்றை பற்றி காண்போம்.

  • நினைவு கற்கள்
  • வீரக் கற்கள்
  • நவ கண்டம்
  • அறி கண்டம்
  • சதி கல்
  • புலிக்குத்திப்பட்டான் கல்
  • யானைக்குத்திப்பட்டான் கல்
  • காட்டுப்பன்றிக் குத்திப்பட்டான் கல்
  • கோழிக்கற்கள்
  • ஏறுதழுவல் வீரக் கல்
  • மான்குத்திப்பட்டான் கல்
  • பாம்பு பட்டான் கல்
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement