Nansei Land in Tamil
பொதுவாக நாம் அனைவரும் இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் நிலத்தினை பற்றியும் அதில் விளையும் பயிர்கள் பற்றியும் அவ்வளவாக தெரிந்துக்கொள்வது இல்லை. அதில் ஒரு சிலருக்கு தெரிந்து இருப்பது நன்செய் நிலம் மற்றும் புன்செய் நிலம் என்று தான். ஆனால் அந்த நிலங்கள் பற்றி முழுவிவரங்களும் யாருக்கும் அவ்வளவாக தெரிவதில்லை. அதனால் இன்றைய பதவி நன்செய் நிலம் என்றால் என்ன மற்றும் அந்த நிலத்தில் எந்த மாதிரியான பயிர்கள் பயிரிடாமல் இது போன்ற நிறைய பயனுள்ள தகவல்கள் பற்றி தெரிந்துக்கொண்டு பயன்பெறலாம் வாங்க..!
இதையும் கிளிக் செய்து பாருங்கள் ⇒ அனாதீனம் நிலம் என்றால் என்ன..?
நன்செய் நிலம் என்றால் என்ன..?
நன்செய் நிலம் என்பது ஏரி, வாய்க்கால், குளம் மற்றும் ஆற்று நீர் பாசனம் ஆகியவற்றை சார்ந்து நிலத்தில் பயிரிடும் முறையில் உள்ள நிலங்கள் அனைத்தும் நன்செய் நிலம் என்று அழைக்கப்படுகிறது.
இத்தகைய நன்செய் நிலங்கள் புன்செய் நிலங்களை விட நன்கு பக்குவம் அடைந்த நிலங்கள் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த நன்செய் நிலத்தில் ஒரு ஆண்டுக்கு மூன்று முறை பயிர்கள் பயிரிடப்படுகிறது. அதுபோல நன்செய் நிலம் அதிக அளவிலான நீர்ப் பாய்ச்சும் வேளாண்மையாக இருக்கிறது.
நன்செய் நிலத்தில் பொதுவாக கரும்பு, நெல், பருத்தி மற்றும் வாழை போன்ற பயிர்கள் மட்டும் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்படுகிறது.
நன்செய் மற்றும் புன்செய் இந்த இரண்டு நிலங்களிலும் கரிசலாங்கண்ணி, கொத்தமல்லி, கீரை வகைகள் மற்றும் புதினா போன்றவை பயிரிடப்படுகிறது.
நிலத்தில் நிறைய வகைகள் இருந்தாலும் இதில் நன்செயில் மட்டும் தான் அனைவரும் சாப்பிட்டிற்கு பயன்படுத்த கூடிய நெல் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்படுகிறது.
நன்செய் நிலத்தில் விளையும் பயிர்கள் அனைத்தும் பணப்பயிர்கள் என்று அழைக்கப்படுகிறது.
ஆனால் நன்செய் நிலத்தை ஒருபோதும் புன்செய் நிலமாக மாற்ற முடியாது. ஏனென்றால் இந்த நன்செய் நிலங்கள் அனைத்தும் நன்கு சமப்படுத்தப்பட்டு நிலங்களாக இருக்கும். ஒருவேளை நீங்கள் புன்செய் நிலத்தில் உள்ள பயிர்களை நீங்கள் நன்செய் நிலத்தில் பயிரிட்டாலும் அது நஷ்டத்தில் தான் முடிவடையும்.
இதையும் படியுங்கள்=> புறம்போக்கு நிலம் என்றால் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |