நாட்டு கோழி வகைகள் | Nattu Koli Vagaigal
நாம் நாட்டு கோழி பற்றி கேள்விப்பட்டிருப்போம், சாப்பிட்டிருப்போம். ஆனால் நாட்டு கோழிகளில் உள்ள வகைகள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நாட்டு கோழி உடம்புக்கு மிகவும் நல்லது. உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும், உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுப்பதற்கும் நாட்டு கோழியை தவிர வேறு எதிலும் அந்த அளவிற்கு ஊட்டசத்து கிடைக்காது. பல நன்மைகளை கொண்ட நாட்டு கோழியில் சில வகைகள் உள்ளது, நாம் இந்த தொகுப்பில் நாட்டு கோழியில் என்ன மாதிரியான வகைகள் உள்ளது என்று தெரிந்துகொள்வோம் வாங்க.
நாட்டு கோழி வகைகள்:
இவை மொத்தம் ஏழு வகைப்படும் அவை
- அசீல் – பெருவிடை கோழி
- சிறுவிடை கோழிகள்
- சிட்டகாங்
- கடக்நாத்
- பர்சா
- நிக்கோபரி
- மொட்டை கழுத்து கோழி
அசீல் – பெருவிடை கோழி:
- இந்த கோழிக்கு பெருவிடை கோழி என்ற மற்றொரு பெயரும் உண்டு. அசில் கொங்குமண்டலத்தை தாயகமாக கொண்டது. இதன் அலகு குட்டையாகவும், வளைந்தும் காணப்படும். முகம் நீளமாகவும், கழுத்து நீண்டும், வால் சிறியதாகவும், தொங்கி கொண்டு காணப்படும். கால்கள் உயரமானவை மற்றும் உறுதியானவை.
- சேவல் உடல் எடை: 3 – 4 கிலோ
- பெட்டை கோழி எடை: 2 – 3 கிலோ
- ஆண்டு முட்டை உற்பத்தி: 90 – 100
- கருவுறும் திறன்: 67%
- குஞ்சு பொரிக்கும் திறன்: 64%
சிறுவிடை கோழிகள்:
- இந்த கோழிகள் தமிழகத்தை தாயகமாக கொண்டது. இது அதிக அளவு முட்டையிடும் திறன் கொண்டது.
- சேவல் உடல் எடை : 1 to 1.5 கிலோ
- பெட்டை கோழி எடை : 1 to 1.2 கிலோ
- ஆண்டு முட்டை உற்பத்தி : 120
- கருவுறும் திறன் : 75%
- குஞ்சு பொரிக்கும் திறன் :68%
நமக்கேற்ற நாட்டு கோழி வளர்ப்பு..! அதிக லாபம் தரும் சிறு தொழில் |
சிட்டகாங்:
- இந்த கோழி மேகாலயா மற்றும் திரிபுரா தாயகமாக கொண்டது. உடலமைப்பு மிகப்பெரியதாகவும், வால் தொங்கும் அமைப்பு கொண்டதாகவும் இருக்கும். இது குறைந்த அளவு முட்டையிடும்.
- சேவல் உடல் எடை : 3.5 – 4.5 கிலோ
- பெட்டை கோழி எடை : 3 – 4 கிலோ
கடக்நாத்:
- இந்த கோழியின் சதை கருப்பு நிறத்தில் காணப்படும். இதை கருங்கால் கோழி என்றும் அழைப்பார்கள். வெப்பம் மற்றும் குளிரை அதிக அளவு தாங்ககூடியது. நீலம் மற்றும் கருப்பு நிறத்துடன் கோழி குஞ்சுகள் காணப்படும், வளர்ந்த பிறகு இறகுகள் கரு நீல நிறத்தில் காணப்படும்.
- சேவல் உடல் எடை : 1.5 – 2 கிலோ
- பெட்டை கோழி எடை : 1 – 1.5 கிலோ
- ஆண்டு முட்டை உற்பத்தி : 105
- கருவுறும் திறன் : 55%
- குஞ்சு பொரிக்கும் திறன் : 52%
பர்சா:
- இதனுடைய உடலமைப்பு மீடியமாக இருக்கும். இது லேசான எடையையும், குறைந்த அளவு முட்டையிடும் திறனும் கொண்டவை. இந்த கோழி எப்போதும் கவனத்துடன் இருக்கும்.
- சேவல் உடல் எடை : 0.8 – 1.25 கிலோ
- பெட்டை கோழி எடை : 0.8 – 0.98 கிலோ
- ஆண்டு முட்டை உற்பத்தி : 40 – 50
நிக்கோபரி:
- இது அந்தமான் தீவை சேர்ந்தது. இதனுடைய உடலமைப்பு சிறியதாகவும், கால் மற்றும் கழுத்து குட்டையாகவும் இருக்கும். நிக்கொபரி பழுப்பு, கருப்பு மற்றும் வெள்ளை போன்ற நிறங்களில் காணப்படும். இந்த கோழி அதிக அளவு முட்டை உறப்பத்தியை கொடுக்கும்.
- சேவல் உடல் எடை : 0.9 – 1 கிலோ
- பெட்டை கோழி எடை : 0.8 – 0.5 கிலோ
- ஆண்டு முட்டை உற்பத்தி : 140 – 160
மொட்டை கழுத்து கோழி:
- இந்த கோழியின் கழுத்து பகுதியில் இறகுகள் இல்லாமல் இருப்பதால் இதற்கு மொட்டை கழுத்து கோழி என்று பெயர். குஞ்சுகளாக இருக்கும்போது இதன் கழுத்து பகுதியில் இறகுகள் இருக்கும், வளர்ந்த பின் தோல் சிவப்பு நிறத்திற்கு மாறிவிடுகிறது.
- 20-வது வாரத்தில் உடல் எடை : 1 கிலோ
- பருவ வயது :201 நாட்கள்
- கருவுறும் திறன் : 55%
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |