What is Fine Art in Tamil | நுண்கலை என்றால் என்ன.?
வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம் பதிவில் தினமும் பல பயனுள்ள பதிவுகளை அறிந்து வருகிறோம். அந்த வகையில், இன்றைய பதிவில் நுண்கலை என்றால் என்ன.? என்பதை தெரிந்துகொள்வோம் வாங்க. நுண்கலை பற்றி நாம் அனைவருமே அறிந்து இருப்போம். அதனை பற்றி நமக்கு தெரியாது. ஆகையால், நுண்கலை பற்றிய விவரங்களை இப்பதிவின் வாயிலாக தெரிந்துகொள்ளலாம் வாங்க.
நுண்கலை என்றால் என்ன.?
நுண்கலை என்பது ஒரு கலை வடிவம் ஆகும். அதாவது, நுண்கலை என்பது அழகின் வெளிப்பாடாக அமைந்த ஒரு கலை வடிவம் ஆகும். நுண்கலை பயன்பாட்டைக் குறித்துக் கவனம் கொள்ளாத ஓர் அறிவார்ந்த தூண்டலாகவும் அழகின் வெளிப்பாடாகவும் அமைந்த கலை வடிவமாகும்.
நுண்கலைகளுள் இசை மற்றும் இலக்கியம் போன்றவையும் அடங்கும். அதுமட்டுமில்லாமல் நடனம், இலக்கியம், நாடகக் கலை போன்றவையும் நுண்கலைகளுள் ஒன்றாக இருக்கிறது.
நுண்கலையின் முக்கியத்துவம்:
கலாச்சாரம் மற்றும் வரலாற்றில் நுண்கலை குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளது. இது ஒரு குறிப்பிட்ட சகாப்தம், கலாச்சாரம் அல்லது தனிநபரின் சாரத்தை படம்பிடித்து, சமூகத்திற்கு ஒரு கண்ணாடியாக செயல்படுகிறது.
ஒருவருடைய ஆளுமை பண்புகளை சிறந்த முறையில் வடிவமைத்து கொள்ள நுண்கலையானது துணை புரிகின்றது. முக்கியமாக எதிர்காலத்தை கணிக்கும் கலைகளின் திறனை பிரதிபலிக்க கூடியதாக காணப்படும். மேலும் கருத்தியல் தாக்கத்தை ஏற்படுத்த கூடியதாகவும் காணப்படும்.
நுண்கலை வகைகள்:
நுண்கலைகளில் பல வகைகள் உள்ளது. அவை பின்வருமாறு:
- விஷுவல் ஆர்ட்ஸ்
- ஓவியம்
- சிற்பம்
- வரைதல்
- பிரிண்ட்மேக்கிங்
- கலை நிகழ்ச்சிகள்
- திரையரங்கம்
- நடனம்
- இசை
- திரைப்படம் மற்றும் சினிமா
- இலக்கியக் கலைகள்
- அலங்கார கலைகள்
- நகை வடிவமைப்பு
- மட்பாண்டங்கள்
- டிஜிட்டல் கலை
கட்டிடக்கலை:
கட்டிடக்கலையானது ஒரு நினைவு சின்ன கலை வடிவமாகும். வரலாற்று நாகரீகங்கள் பெரும்பாலும் கட்டிடக்கலை சாதனைகளின் ஊடாகவே அடையாளமாகவே உள்ளது. முக்கியமாக இந்த கட்டிடக்கலையானது கலாச்சார சின்னங்கள் மற்றும் கலைப் படைப்புக்களை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது.
சிற்பம்:
கலைகளில் சிறந்த கலையாக இருப்பது சிற்ப கலையாகும். சிற்பம் ஆனது, ஒரு கடினமான அல்லது நெகிழ்வு தன்மை உள்ள பொருளுக்கு உருவம் கொடுப்பதன் மூலம் உருவாக்கப்படுகின்றது.
அழிந்துவரும் நாட்டுப்புற கலைகள் ஒரு பார்வை…
ஓவியம்:
ஓவியக்கலை பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. அந்த அளவிற்கு ஓவியம் என்பது பிரபலம் ஆன ஒன்று. ஓவியம் என்பது வரைதல் போன்ற அழகியல் சார்ந்த செயற்பாடுகளை உள்ளடக்கியதாக இருக்கிறது.
நடனக்கலை:
நுண்கலைகளில் அனைவராலும் விரும்பப்படும் கலைகளில் நடன கலையும் ஒன்று. நடனமானது இசையோடு தொடர்புபட்ட ஓன்றாகவே உள்ளது. இது இசையின் மூலம் உருவாகிறது.
இலக்கியம்:
இலக்கியமானது இன்று பல்வேறு சமூக நிகழ்வுகளை உள்ளடக்கியதாக வளர்ந்து வருகின்றது. சமுதாய மக்களின் வாழ்க்கை முறை மற்றும் அவர்களின் இலட்சியம் இலக்கு போன்றவற்றை இலக்கியமானது படம்பிடித்து காட்டுகின்றது.
இசை:
நுண்கலை வடிவங்களில் இசையும் ஒன்று. இசை என்பது ஒழுங்கு செய்யப்பட்ட அழகு ஒலி முறையே இசையாகும். செவிக்கு இன்பம் தரும் ஒலிகளை கொண்ட ஒரு கலை என்றும் கூறலாம். இன்று அனைவரும் இசையை தான் விரும்பி கேட்டுக்கொண்டிருக்கிறோம்.
எனவே, நுண்கலை என்பது பல வடிவங்களில் காணப்படுகிறது என்பதை நாம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |