நெகிழிப் பொருட்கள் தீமைகள் | Plastic Theemaigal in Tamil

பிளாஸ்டிக் தீமைகள்

பிளாஸ்டிக் தீமைகள்..! Plastic Theemaigal in Tamil..!

நெகிழி எனப்படும் பிளாஸ்டிக் பொருட்களை நாம் அதிகம் பயன்படுத்துவதினால் சுற்றுசூழலுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுகிறது. ஆகவே நாம் அன்றாட வாழ்க்கையில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதேபோல் இந்த சமுதாயத்தில் உள்ள அனைத்து மக்களுக்கு இதன் தீமைகளை பற்றி எடுத்துரைத்து மக்களிடேயே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சரி வாங்க இந்த பதிவில் பிளாஸ்டிக் தீமைகள் பற்றி படித்தறியலாம்.

பிளாஸ்டிக் எரிப்பதால் மற்றும் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள்:

நாம் ஒரு நாளும் பயன்படுத்திவிட்டு தூக்கி எரியும் பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்துமே மண்ணை மலடாக்குகின்றன.

நதிகளின் அழகை கெடுக்கின்றன. அதேபோல் அந்த நதியின் கீழ் வாழ்கின்ற உயிரினங்களுக்கும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

இன்றைக்கு நாம் வாழும் சூழலில் எண்ணிலடங்காத மாசடைவுகளுக்கு நெகிழி ஒரு முக்கியமான காரணமாகும்.

இந்தியாவின் கங்கை நதியில் நெகிழி மாசடைவுகளால் ஆக்சிஜன் அளவு நதியில் குறைந்து அங்கு நீர்வாழ் உயிரிகள் பல அழிந்துள்ளன. மேலும் இந்தியாவில் பல நீர்நிலைகள் பிளாஸ்டிக் பொருட்களினால் நிறைந்துள்ளன. இதற்கு சிறந்த உதாரணமாக சென்னை கூவம் ஆற்றை சொல்லலாம்.

நாம் தினந்தோறும் அதிகம் பயன்படுத்தி கொண்டிருக்கும் பொலித்தீன் தாள் மண்ணில் சேர்வதால் அது பல ஆயிரம் ஆண்டுகள் மக்காமல் மண்ணுக்குள் அப்படியே இருக்கிறது. மற்றும் நீரை மண்ணுக்கு ஊடுபுக விடாது இதனால் வரட்சி போன்ற நிலைகளும் உருவாகின்றது.

பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதினால் ஓசோன் மண்டலத்தில் ஓட்டை விழுகின்றது.

இது போன்று நாம் அதிகம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களினால் இந்த உலகிற்கு பெரும் பாதிப்புகள் ஏற்படுகிறது. ஆகவே இனியாவது பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்ப்போம்.. மற்றவர்களுக்கும் இதனை பற்றி எடுத்துரைப்போம்.

நெகிழிப் பயன்பாட்டினை தவிர்க்க என்ன செய்யலாம்?

மாணவர்களுக்கும்.. இளைஞர்களுக்கும் நெகிழிப் பொருட்களை பயன்படுத்துவதினால் ஏற்படும் ஆபத்துகளை பெற்றோர்கள், நண்பர்கள், உறவினர்கள், அருகில் உள்ளவர்கள் கூறலாம்.

உணவு பொருட்களை உண்ண மூங்கில், கரும்பு தாழ்களால் ஆன தட்டுக்கள், வாழை இலை போன்றவற்றை பயன்படுத்தலாம்.

பொதுமக்கள் கடைகளுக்கு செல்லும் போது மறந்துவிடாமல் துணிப்பைகளை எடுத்து செல்லுங்கள் என்று சொல்ல வேண்டும்.

நெகிழியின் தீமைகளையும் ஏற்படும் நோய்களையும் விளக்கிக் கூறவேண்டும்.

மக்கும் குப்பை பெயர்கள் | மக்காத குப்பை பெயர்கள்

நெகிழி கவிதை:

மண்ணுக்குள் மக்காது;
எரிந்தாலும் ஒக்காது;
ஓசோனை ஓட்டையாக்கும்;
மண்ணையே மலடாக்கும்;
அனைத்தையும் அழித்துவிடும்
அது மட்டும் நிலைத்திருக்கும்..
இந்த அரக்கனை அளித்திட..
எடுப்போம் புது அவதாரம்
தவிர்ப்போம் இந்த நெகிழியை..

நன்றி வணக்கம்..!

பிளாஸ்டிக் மாசு பற்றிய தமிழ் கட்டுரை

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com