நேரு பாடல்கள்
இந்தியாவின் முதல் பிரதமர் என்ற பெருமை நேருவை சாரும். குழந்தைகள் மீது அவர் கொண்ட அன்பின் காரணமாக அவரது பிறந்தநாளை அதாவது வருடந்தோறும் நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டப்படுகிறது. இவர் 1889-ம் ஆண்டு அலகாபாத்தில் பிறந்தார். இவருடைய தந்தை மோதிலால் நேரு வழக்கறிஞராக இருந்தார். இவர் கல்வியில் சிறந்து விளங்கினார். கல்விக்காக வெளிநாடு சென்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கல்வியை கற்றார். 1910-ம் ஆண்டு தனது பட்டப்படிப்பை முடித்தார். இவரை பற்றி கூறினால் கூறிக்கொண்டே போகலாம். அதனால் இந்த பதிவில் இவரை பற்றிய பாடல் வரிகளை அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
நேருவின் பாடல்:
இந்தியாவின் விடுதலைக்கு
முந்தி நின்ற வீரர்களில்
முன்னே நின்ற வீரராம்
எங்கள் நேரு மாமா…
விடுதலைக்குப் பின்
நாட்டின் முதல் பிரதமாராய்
ஆட்சி செய்த பிதாமகராம்
எங்கள் நேரு மாமா…
பார் போற்றும் காந்தியடிகளாரின்
நேர் கூற்று வாக்குப்படி
ஊர் போற்ற ஆட்சி செய்தவராம்
எங்கள் நேரு மாமா…
நம் நாட்டின் செல்வங்களை
வெள்ளையர்கள் திருடிச் சென்ற
வேதனைகளை துடைத்தவராம்
எங்கள் நேரு மாமா…
வறுமையில் சிக்கியிருந்தவர்களை
பொறுப்போடு காப்பாற்ற – புதுத்
தொழில் திட்டங்களை வகுத்தவராம்
எங்கள் நேரு மாமா…
நம்மிடம் சண்டை போடும் நாடுகளை
நட்பு கொண்ட நாடுகளாய் மாற்ற
பஞ்ச சீலக் கொள்கை வகுத்தவராம்
எங்கள் நேரு மாமா…
இந்தியாவின் இரும்புப் பெண்மணி
இந்திரா காந்தியை நமக்கு
வழங்கிட்ட வள்ளலாம்
எங்கள் நேரு மாமா…
குழந்தைகளின் நெஞ்சத்திலே
என்றும் பூத்திருக்கும்
இதயத்து ரோஜா மலராம்
எங்கள் நேரு மாமா…
குழந்தைகள் தின பேச்சு போட்டி எளிய 10 வரிகள்..!
நேருவின் பாடல்கள்:
எங்கள் மாமா நேரு…
நல்ல மாமா நேரு …..
அன்பு உள்ளம் கொண்டவராம்
அழாகாய் சிரித்து வாழ்ந்தவராம் ..
ரோஜா மலரை அணிந்தவராம் .
நேசம் கொண்டே குழந்தைகளை,
நன்றாய் வளர்த்த நல்லவராம் …
நல்ல நல்ல பண்புகளை
நாளும் வளர்த்த உத்தமராம்..
நேரு வழியை பின்பற்றி,
நாமும் நடப்போம்
என்றென்றும் ..
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |