குழந்தைகளின் தங்கம் நம்ம நேரு மாமா பாடல் வரிகள் – Nehru mama Song Lyrics in Tamil
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் என்றும், குழந்தைகளால் நேரு மாமா என்று அழைக்கப்படுகிறவர் என்றும் அனைவரும் அறிவோம். அதே சமயம், இந்தியாவின் ஆரம்பகால உள்கட்டமைப்புக்கு அடித்தளம் அமைத்த தலைவர் என்றும் நேரு அழைக்கப்படுகிறார். நவம்பர் 14 குழந்தைகள் தினம், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள்.. இவருடைய பிறந்த நாளைத்தான் இந்தியாவில் குழந்தைகள் தினமாக வருடம் வரும் கொண்டாடி மகிழ்கின்றன. இந்த குழந்தைகள் தினம் அன்று பள்ளிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் அந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் இணைத்து மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள். அப்பொழுது நேருவை பற்றிய பேச்சு போட்டிகள், பாடல் போட்டி என்று நிரைய போட்டிகள் நடைபெறும். அந்த வகையில் குழந்தைகள் பாட்டு போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெற இங்கு நேருவை பற்றிய பாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது அதை வாசித்து மகிழலாம் வாங்க.
நேரு மாமா பாடல் வரிகள்:
எங்கள் மாமா நேரு…
நல்ல மாமா நேரு …..
அன்பு உள்ளம் கொண்டவராம்
அழாகாய் சிரித்து வாழ்ந்தவராம் ..
ரோஜா மலரை அணிந்தவராம் .
நேசம் கொண்டே குழந்தைகளை,
நன்றாய் வளர்த்த நல்லவராம் …
நல்ல நல்ல பண்புகளை
நாளும் வளர்த்த உத்தமராம்..
நேரு வழியை பின்பற்றி,
நாமும் நடப்போம்
என்றென்றும் ….
இதையும் கிளிக் செய்து படியுங்கள்👇
குழந்தைகள் தின பேச்சு போட்டி எளிய 10 வரிகள்..!
நேரு பற்றிய பாடல்:
நேருமாமா நல்லவராம்
நேர்மை மிக்க தலைவராம்
ரோஜாப் பூவை அணிந்தவராம்
குழந்தைகள் அன்பை பெற்றவராம்
எளிமையாக வாழ்ந்தவராம்
இனிமையாக இருந்தவராம்
தியாக வாழ்க்கை வாழ்ந்தவராம்
திறமையான வல்லவராம்
குறும்புச் சிரிப்புச் சிரிப்பவராம்
குழந்தை மனது உள்ளவராம்
– ஆசிரியர் :வல்லநாடு ராமலிங்கம்:
Nehru mama Song Lyrics in Tamil
நேரு மாமா வந்தாரு..
நேர்த்தியாக நின்னாரு..
கதை சொல்லி தந்தாரு..
கவிதை பாட சொன்னாரு..
வெள்ளைப் புறா தந்தாரு..
ரோஜா பூ தந்தாரு..
பாரத நாட்டிலே..
பாசத்தோடு வாழவே..
விளையாடும் குழந்தைகளிடம்..
வேற்றுமையை நீக்கிவிட்டாரு..
ஒற்றுமையை விதைத்தாரு..
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |