பதின்ம வயது என்றால் என்ன.?

Advertisement

பதின்ம வயது Meaning | Pathinma Vayathu in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் பதின்ம வயது என்றால் என்ன என்பதை விவரித்துள்ளோம். பொதுவாக, இவ்வுலகில் நமக்கு தெரியாத பல விஷயங்கள் இருக்கும். அப்படி நமக்கு தெரியாமல் இருக்கும் விஷயங்களை நாம் அனைவருமே தெரிந்துகொள்ள விரும்புவோம். அந்த வகையில், நாம் அனைவருமே பதின்ம வயது என்ன என்பதை அறிந்து இருப்போம். ஆனால், அப்படி என்றால் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்து கொள்ளும் விதமாக இப்பதிவில் பதின்ம வயது என்றால் என்ன (பதின்ம Meaning in Tamil) என்பதை விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

பெண்களின் திருமண வயது எத்தனை தெரியுமா.?

பதின்ம வயது என்றால் என்ன.? 

 பதின்ம வயது என்பது 13 வயது முதல் 19 வயது வரை உள்ள வயது ஆகும். அதாவது, பதின்ம வயது என்பது 13 வயது முதல் 19 வயதில் இருக்கும் வரை உள்ள கால கட்டத்தை குறிக்கும்.  இதனை தான் teenage என்று கூறுவார்கள். இந்த 13 வயது முதல் 19 வயது வரையிலான காலம் மாற்றங்களும் சவால்களும் நிறைந்த காலம் ஆகும்.

பதின்ம வயது என்றால் என்ன

இந்த காலகட்டம் ஒவ்வொருவருக்கும் ஒரு முக்கியமான காலகட்டமாகும். பெற்றோர்கள் வயிற்றில் நெருப்பை கட்டி கொண்டு இருக்கக் கூடிய காலம் தான் அது. இக்காலத்தில் பிள்ளைகள் செய்யும் அனைத்து விஷயங்களும் விசித்திரமாக தோன்றும்.

இதனை பார்த்து பெற்றோர்கள் சிறிது பயப்படவும் செய்வார்கள். முக்கியமாக, இந்த காலகட்டத்தில் தான் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் சிறு சிறு வாக்குவாதங்களும் ஏற்படும். அதுமட்டுமில்லாமல், பெற்றோர்கள், எங்க காலத்தில் நாங்க இப்படி இல்லை என்று பிள்ளைகளை பார்த்து கூறுவார்கள்.

பதின்ம Meaning in English | Pathinma Meaning in Tamil

பதின்ம என்றால், ஆங்கிலத்தில் Teen என்று கூறுவார்கள்.

பதின்ம வயது in English:

பதின்ம வயது என்பதை ஆங்கிலத்தில் Teenage என்று கூறுவார்கள்.

தமிழ் நடிகர்கள் திரைக்கு அறிமுகமான வயது..!

பதின்ம வயதினர் Meaning in Tamil:

  • 13 வயது முதல் 19 வயது வரை உள்ள பெண்கள் மற்றும் ஆண்கள் தான் பதின்ம வயதினர். இந்த காலத்தில் இவர்கள், உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் மற்றும் மன ரீதியாகவும் வளர்ச்சி அடைகிறார்கள்.
  • சுதந்திரமாகவும், சுயமாக சிந்திக்கவும் முடிவெடுக்கவும் கற்றுக் கொள்கின்றனர்.
  • பெற்றோர்களிடம் இருந்து விடைபெற்று நண்பர்களுடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும் என்று நினைப்பார்கள்.
  • இந்த பருவத்தில் உள்ள காதல் போன்ற உணர்வுகள் ஏற்படும்.
  • பதின்ம வயது பருவம் பல்வேறு மாற்றங்கள் நிறைந்த பருவமாக இருக்கிறது.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement