பனை மரத்தின் பயன்கள் | Palm Tree Uses in Tamil

Palm Tree Benefits in Tamil

பனை மரத்தின் சிறப்புகள் | Palm Tree Benefits in Tamil

தமிழ்நாட்டின் மாநில மரமாக இருக்கும் பனைமரம் பலவிதமாக நம் நாட்டில் பயன்பட்டு வருகிறது. பனை மரம் குழந்தைகளுக்கு விளையாட்டு பொருளாக, பல மக்கள் தொழில் செய்து வருமானம் ஈட்டுவதற்கு என பல விதங்களிலும் இந்த மரம் பயன்படுகிறது. இதன் அறிவியல் பெயர் போராசஸ் பிளாபெல்லிபர் ஆகும். நாம் இந்த தொகுப்பில் பனை மரம் பற்றிய சில குறிப்புகளையும் அதன் நன்மைகளையும் பற்றி பார்க்கலாம் வாங்க.

பனைமரம் – Panai Marathin Payangal:

பனையில் ஆண் பனை, பெண் பனை என இரண்டு வகைகள் உள்ளன. பெண் பனையை பருவப் பனை என்றும், ஆண் பனையை அழகுப் பனை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மரம் பத்து ஆண்டுகள் கழித்து 15 மீட்டர் வளரும் தன்மை கொண்டது. பத்து ஆண்டுகளுக்கு பின்னரே தான் இது ஆண் பனையா? பெண் பனையா? என்று தெரிந்துகொள்ள முடியும். இதன் இலைகள் நீளமாகவும், பச்சை நிறத்திலும், பழுப்பு நிறத்திலும் காணப்படும்.

பனை மரத்தின் பயன்கள்:

palm tree benefits in tamil

 

 • பனை மரத்தின் பயன்கள் in Tamil: பழங்காலத்தில் உள்ள மக்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ள பயன்பட்டது. இப்பொழுது இருக்கும் மின்விசிறிக்கு பதிலாக சங்க காலத்தில் இருக்கும் மக்கள் பனை ஓலையை விசிறியாக செய்து பயன்படுத்தினர். மேலும் கூரையாகவும், தட்டிகளாகவும் பயன்படுத்தி வந்தனர்.
 • குழந்தைகள் விளையாடுவதற்கு என நொங்கு வண்டிகள், பொம்மைகள், தொப்பி போன்றவற்றை செய்து விளையாடின. கைவினை பொருட்கள் செய்து கைத்தொழில் செய்யவும் பனைமரம் பயன்படுகிறது.
 • சிலருக்கு தொழில் புரிவதற்கான வாய்ப்புகளையும் கொடுக்கிறது. பனை ஓலைகள் மூலம் விசிறி, கூடைகள் போன்றவற்றை செய்து விற்பனை செய்யலாம், அதன் மூலம் வருமானம் ஈட்டுவதற்கு வாய்ப்புகள் கிடைக்கிறது.

பனைமரத்தின் மருத்துவ குணங்கள் – Palm Tree Uses in Tamil

 • பனையில் இருந்து கிடைக்கும் நுங்கு, பதநீர், பனைவெல்லம், பனங்கிழங்கு, பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்றவை உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கின்றன.

நுங்கு – Palm Tree Benefits in Tamil

பனை மரத்தின் சிறப்புகள்

 • பனை மரத்தின் சிறப்புகள்: கோடை காலங்களில் ஏற்படும் உடல் சூடு, வியர்க்குரு போன்றவற்றை தடுப்பதற்கு நுங்கு பயன்படுகிறது. உடலுக்கு சக்தியை கொடுக்கவும் உதவுகிறது.

பனங்கற்கண்டு:

Palm Tree Uses in Tamil

 • Panai Marathin Payangal: பனை வெல்லத்தில் இருந்து கிடைக்கும் பனங்கற்கண்டு உடலுக்கு ஏராளமான நன்மைகளை கொடுக்கின்றன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும், கண் பார்வை திறன் அதிகரிக்கவும், நினைவாற்றல் அதிகரிக்கவும், கிட்னி கல் வராமல் தடுக்கவும் பயன்பட்டு வருகிறது.

பனைவெல்லம் – பனை மரத்தின் பயன்கள்

palm tree benefits in tamil

 • கருப்பட்டி, பனை வெல்லம் இவற்றில் ஏதாவது ஒன்றை தேநீர், பால் அல்லது காஃபி போன்றவற்றில் கலந்து குடித்தால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். மலச்சிக்கலை சரி செய்யவும், உடல் எடை குறைப்பதற்கும் பயன்படுகிறது.

கள்ளு – Palm Tree Uses in Tamil

palm tree benefits in tamil

 • பனை மரம் நன்மைகள்: பனங்கள்ளு ஒரு விதமான போதைப்பொருள் என்றாலும் உடலுக்கு சில விதமான நன்மைகளையும் கொடுக்கின்றன. உடலுக்கு சக்தியையும், ஆண்மை அதிகரிக்கவும், வயிற்றுப்புண்ணை சரி செய்யவும் உதவுகிறது. இதை காய்ச்சினால் கருப்பட்டி கிடைக்கும்.

பனங்கிழங்கு – Palm Tree Benefits in Tamil:

பனை மரத்தின் சிறப்புகள்

 • பனங்கிழங்கு சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள வெப்பம் நீங்கும், உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். பனங்கிழங்குடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால் இரும்பு சத்து கிடைக்கும். வாயு பிரச்சனை உள்ளவர்கள் பனங்கிழங்கை மாவாக்கி உப்பு, மிளகு, பூண்டு சேர்த்து சாப்பிடலாம். பனம்பழம் ஒரு சத்துணவாகவும் உள்ளது.

பனையோலை – பனை மரத்தின் பயன்கள்:

palm tree benefits in tamil

 • பனையோலையில் செய்த வீடு மிகவும் குளிர்ச்சி நிறைந்த வீடாக இருக்கும். இதனால் கோடை காலங்களில் நோய்வாய்ப்படுவதில் இருந்து விடுபடலாம்.

பனையேற்றம் நடைபெறும் மாதம்:

பனை மரத்தின் பயன்கள்

 • ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் ஏப்ரல் – ஆகஸ்ட் மாதம் பனையேற்றம் செய்யப்படுகிறது.
 • கன்னியாகுமரியில் ஆகஸ்ட் – மார்ச் மாதம் பனையேற்றம் செய்யப்படுகிறது.
 • சேலம், தர்மபுரி மாவட்டத்தில் ஏப்ரல் – அக்டோபர் மாதம் பனையேற்றம் செய்யப்படுகிறது
பனங்கற்கண்டு பயன்கள்
மரங்கள் மற்றும் அதன் பயன்கள்

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil