பழமொழி நானூறு குறிப்பு எழுதுக | Pazhamozhi Naanooru

Advertisement

பழமொழி நானூறு TNPSC..!

பழமொழி நானூறு என்பது சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று தான் இந்த பழமொழி நானூறு. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்டது. இது முன்றுறையர் அல்லது முன்றுறை அரையனார் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்டது. இதன் ஒவ்வொரு பாட்டிலும் ஒரு பழமொழி சார்ந்த நீதி கூறப்படுவதால் பழமொழி நானூறு என்ற பெயர் பெற்றுள்ளது. இதன் காலம் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டு ஆகும்.

இந்நூலில் 34 தலைப்புகளின் கீழ் பாடல்கள் அமைந்துள்ளன. சரி இந்த பதிவில் பழமொழி நானூறு பற்றி சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. TNPSC  போன்ற அரசு நடந்து பொது தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் படித்து பயன் பெறுங்கள் நன்றி. மேலும் இந்து போன்ற பொது அறிவு வினா விடைகளை படித்தறிய கீழ் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

பழமொழி நானூறு – உள்ளடக்கம்:

இந்நூலில் 34 தலைப்புகளின் கீழ் பாடல்கள் அமைந்துள்ளன. அத் தலைப்புகளும் அவற்றின் கீழ் வரும் பாடல்களின் எண்ணிக்கைகளும் இதோ..

  1. கல்வி (10)
  2. கல்லாதார் (6)
  3. அவையறிதல் (9)
  4. அறிவுடைமை (8)
  5. ஒழுக்கம் (9)
  6. இன்னா செய்யாமை (8)
  7. வெகுளாமை (9)
  8. பெரியாரைப் பிழையாமை (5)
  9. புகழ்தலின் கூறுபாடு (4)
  10. சான்றோர் இயல்பு (12)
  11. சான்றோர் செய்கை (9)
  12. கீழ்மக்கள் இயல்பு (7)
  13. கீழ்மக்கள் செய்கை (17)
  14. நட்பின் இயல்பு (10)
  15. நட்பில் விலக்கு (8)
  16. பிறர் இயல்பைக் குறிப்பால் அறிதல் (7)
  17. முயற்சி (13)
  18. கருமம் முடித்தல் (15)
  19. மறை பிறர் அறியாமை (6)
  20. தெரிந்து செய்தல் (13)
  21. பொருள் (9)
  22. பொருளைப் போற்றுதல் (8)
  23. நன்றியில் செல்வம் (14)
  24. ஊழ் (14)
  25. அரசியல்பு (17)
  26. அமைச்சர் (8)
  27. மன்னரைச் சேர்ந்தொழுகல் (19)
  28. பகைத்திறம் (26)
  29. படைவீரர் (16)
  30. இல்வாழ்க்கை (21)
  31. உறவினர் (9)
  32. அறம் செய்தல் (15)
  33. ஈகை (15)
  34. வீட்டு நெறி (13)

பழமொழி நானூறு TNPSC

பழமொழி நானூறு ஆசிரியர் பெயர்:

  • விடை: முன்றுறை அரையனார்

பாடலின் எண்ணிக்கை:

  • விடை: 401

இந்த நூல் எந்த பாவகையை சேர்ந்தது?

  • விடை: வெண்பா

பெயர்க்காரணம்:

ஒரு கதையோ, வரலாற்று நிகழ்வோ கட்டி உரைக்கப்பட்டு பாடலின் இறுதியில் பழமொழி நீதி சுட்டப்படுவதாலும், நானூறு பாடல்களை உடையதாலும் பழமொழி நானூறு எனப் பெயர்பெற்றது.

பழமொழி நானூறு வேறு பெயர்கள்:

  • பழமொழி நானூறு பாடலுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் பழமொழி, சொல்வழக்கு, முதுமொழி, உலக வசனம்.

ஆசிரியர் குறிப்பு:

  • முன்றுறை என்பது ஊர் பெயர் என்றும், அரையன் என்ற பட்டம் பெற்றவர் என்றும் கூறுவர் சிலர்.
  • சமையம் = சமண சமயம்

நூல் பகுப்பு முறை:

இந்நூலின் பெரும் பிரிவுகள் = 5, இயல்கள் = 34

  • பிரிவு 1 = கல்வி, ஒழுக்கம், புகழ் பற்றியது (9 இயல்கள்)
  • பிரிவு 2 = சான்றோர், நட்பின் இயல்பு பற்றியது (7 இயல்கள்)
  • பிரிவு 3 = முயற்சி, பொருள் பற்றியது (8 இயல்கள்)
  • பிரிவு 4 = அரசர், அமைச்சர், பாடல் பற்றியது (6 இயல்கள்)
  • பிரிவு 5 = இல்வாழ்க்கை, உறவினர், வீடுநெறி பற்றியது (4 இயல்கள்)

மேலும் பொதுவான குறிப்புகள்:

  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் உள்ள முப்பெரும் அறநூல்கள் = திருக்குறள், நாலடியார், பழமொழி நானூறு
  • தொல்காப்பியர் பழமொழியை “முதுமொழி” என்கிறார்.
  • பழமொழி என்ற சொல் முதன் முதலில் அகநானூறில் வருகிறது.
  • இந்நூலை பதிப்பித்தவர் = செல்வசேகர முதலியார்
  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் மிகுதியாக வரலாற்று குறிப்புகளை கூறும் நூல் இதுவே..
  • பழமொழிக்கென அமைந்த முதல் தமிழ் நூல்.

மேற்கோள்:

அணியெல்லாம் ஆடையின் பின்
கடன் கொண்டும் செய்வார் கடன்
கற்றலின் கேட்டலே நன்று
குன்றின்மேல் இட்ட விளக்கு
தனிமரம் காடாதல் இல்
திங்களை நாய்க் குரைத் தற்று
நுணலும் தன் வாயால் கெடும்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் குறிப்புகள் 
பத்துப்பாட்டு நூல்கள் மற்றும் ஆசிரியர்கள்

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement