பழைய பட்டா தொலைந்துவிட்டால் முதலில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா..! | Patta in Tamil

Advertisement

பட்டாவின் முக்கியத்துவம்

நண்பர்களே வணக்கம் இன்று முக்கியான ஒரு விஷயத்தை பற்றி தெரிந்துகொள்ள போகிறோம். இன்றைய காலகட்டத்தில் உள்ள இளைஞர்கள் வருங்காலத்தை பற்றி கவலைப்படுவதில்லை முற்காலத்தை பற்றி தெரிந்துகொள்வதும் இலலை. முற்காலம் என்றால் அப்பா, தாத்தா என்ன வேலை செய்தார்கள் மட்டும் தெரிந்துகொள்வது இல்லை. முற்காலத்தில் அவர்கள் சில விஷயங்களை பத்திரமாக  வைத்து பாதுகாத்து பிள்ளைகளிடம் கொடுப்பார்கள். அதில் ஒன்று தான் அவர்கள் சேர்த்து வைத்த சொத்துக்கள்.

சொத்துக்கள் என்றால் இது தான் உன் சொத்து என்றால் உங்களுக்கு தெரியும். ஆனால் மற்றொருவருக்கு எப்படி தெரியும். அதற்கு நீங்கள் ஆதாரமாக கொடுப்பது பட்டா சிட்டா போன்றவற்றில் ஒன்றைத்தான். ஆனால் இந்த காலத்தில் உள்ள இளைஞர்களுக்கு பட்டா என்றால் என்ன என்று கேட்க்கும் காலமாக உள்ளது. அதனால் பட்டா என்பது என்ன அதன் முக்கிய துவத்தை பற்றி தெரிந்துகொள்வோம் வாங்க.

பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன?

பழைய பட்ட தொலைந்தால் என்ன செய்ய வேண்டும்?

  • வீட்டில் இருக்கும் பட்டாவை அடிக்கடி வெளியில் எடுத்து செல்வதை தவிர்க்கவும். மிகவும் முக்கியமான வேலைக்கு மட்டும் எடுத்து செல்வது நல்லது.
  • அப்படியே எடுத்து சென்றாலும் பட்டா நகலை மட்டும் எடுத்து செல்ல வேண்டும்.
  • வீட்டில் இருக்கும் பட்டாச் சிட்டாவை எப்போதும் ஒன்று இரண்டு நகல்களை எடுத்துவைத்துக்கொள்வது நல்லது.
  • முக்கிய தேவைக்கு மட்டும் பட்டா அசலை எடுத்துச்செல்லவும்.
  • நீங்கள் அசலை தொலைத்துவிட்டால் முதலில் என்ன செய்ய வேண்டும் என்றால். பட்டா பெருவதற்கான இடத்திற்கு சென்று தாசில்தாரிடம் பட்டா தொலைந்துவிட்டது, என்று குறிப்பிட்டு வேறு பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை கடிதம் ஒன்றை  கொடுக்கவும்.
  • இந்த கோரிக்கை கடிதம் ஏன் கொடுக்க வேண்டும் என்றால் இப்போது இருப்பது கணினி உலகம் அசலை வேறு ஒருவருக்கு உரிமையை மாற்றி கொடுக்கலாம் அதனால் தான் இந்த கோரிக்கை கடிதம்.
  • உடனே பட்டா கிடைக்க உங்கள் பட்டா நகல் அல்லது பட்டா எண் என்ற முகவரிகளை அவர்களிடம் ஒப்படைத்தால் அதனை உடனே பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் சுலபம்.
பட்டா வாங்க தேவையான ஆவணங்கள்

பட்டா பெயர் மாற்றுதல்:

  • பழைய பட்டாவை உங்களின் பெயருக்கு மாற்றிக்கொள்வது நல்லது.  ஒரு நிலத்தை வேறு ஒருவரிடம் இருந்து வாங்கும் போது அவரின் பெயரில் தான் இருக்கும் அதனை அப்போதே மாறிகொள்வது நல்லது.
  • அவ்வாறு அதனை நீங்கள் மாற்றவில்லை என்றால் அந்த நிலம் பழைய உரிமையாளர் பெயரில் தான் இருக்கும். அதனை வைத்து பிற்காலத்தில் உரிமை அவர்களுடையது என்று சொல்ல முடியம். அதனால் அதனை விரைவில் அதனைஉங்கள் பெயரில் மாற்றிக்கொள்வது நல்லது.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement