பாரதியார் கல்வி பாடல்கள் | Kalvi Patri Bharathiyar Padalgal..!
நாம் அனைவரும் ஓடி விளையாடு பாப்பா என்ற பாடல் வரிகளை கேட்போம். அத்தகைய சிறப்புமிக்க பாடல் வரியின் ஆசிரியர் மகாகவி பாரதியார் ஆவர். பாரதியார் 11.12.1882-ல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரம் என்ற ஊரில் பிறந்தாரர். இவரின் தந்தை மற்றும் தாயரின் பெயர் சின்னசாமி ஐயர், இலக்குமி அம்மாள் என்பது ஆகும். மேலும் இவரின் இயற்பெயர் சுப்ரமணியன் என்பது ஆகும். பாரதியார் இளம் வயதில் இருந்து தமிழும் மீதும், நாட்டின் மீது அதிக பற்று உடையவராக திகழ்ந்தார். அதுமட்டும் இல்லாமல் பெண்களின் புரட்சி பற்றியும், அவர்களின் கல்வியினை பற்றியும் நாட்டிற்கு பல பாடல்கள், கவிதைகள் மற்றும் பேச்சுகள் என இவற்றின் மூலம் இந்த உலகத்திற்கு தெரிவித்தார். பாரதியார் அனைவராலும் மகாகவி பாரதியார் என்றும் அனைவராலும் அழைக்கப்பட்டார். எனவே இன்று இவர் எழுதிய கல்வி பாடல் வரிகளை தான் இன்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
பாரதியார் கல்வி பாடல்கள்:
அன்று நுங்கள் கொடியினை முத்திட்டே
ஆசை யென்ற விண் மீன்ஒளிர் செய்ததே;
துன்று நள்ளிருள் மலை மயக்கத்தால்
சோம்பி நீரும் வழிநடை பிந்தினீர்;
நின் றவிந்தன நுங்கள் விளக்கெலாம்;
நீங்கள் கண்ட கனாக்களெல் லாம் இசை
குன்றித் தீக்குறி தோன்றும்; இராப்புட்கள்
கூவ மாறொத் திருந்தன காண்டிரோ..?
மகாகவி பாரதியார் பாடல்கள்:
“இருளை நீக்கி ஒளியினைக் காட்டுவாய்,
இறப்பை நீக்கி, அமிர்தத்தை ஊட்டுவாய்”
அருளும் இந்த மறையொலி வந்திங்கே
ஆழ்ந்த தூக்கத்தில் வீழ்ந்திருப் பீர்தமைத்
தெருளு றுத்தவும் நீர்எழு கில்லிரோ..?
தீய நாச உறக்கத்தில் வீழ்ந்தனீர்
மருளை நீக்கி அறிதிர் அறிதிரோ..?
வான்ஒ ளிக்கு மகாஅர்இ யாம்என்றே
நாட்டு கல்வி பாடல்கள்:
இன்னு மிங்கிருள் கூடி யிருப்பினும்
ஏங்கு கின்ற நரகத் துயிர்கள்போல்
இன்னு மிங்கு வனத்திடை காற்றுத்தான்
ஓங்கும் ஓதை இருதிடும் ஆயினும்
முன்னைக் காலத்தின் நின்றெழும் பேரொலி
முறை முறைபல ஊழியின் ஊடுற்றே
பின்னை இங்குவந் தெய்திய பேரொலி
Bharathiyar Kalvi Padalgal in Tamil:
ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
குடைகள் செய்வோம் உழுபடைகள் செய்வோம்
கோணிகள் செய்வோம் இரும்பாணிகள் செய்வோம்
நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம்
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |