மூளையை குழப்பும் புதிர் விடுகதைகள் | Puthir Vidukathaigal | Riddles in Tamil

Puthir Vidukathaigal in Tamil

புதிர் விடுகதைகள் | Puthir Vidukathaigal in Tamil

சிறுவயதில் நம்மிடம் பாட்டிகள் கேட்கும் கேள்விகள் வித்தியாசமாகவும் நமது மூளைக்கு வேலை கொடுக்கும் விதமாகவும் இருக்கும். இதனால் குழந்தைகள் வளரும்போதே புத்தி கூர்மையாக இருக்கும். ஆனால் இப்போது உள்ள குழந்தைகள் மொபைலில் உள்ள கேம்களை விளையாடி கொண்டிருப்பதால் மூளைக்கு வேலை கொடுப்பதே இல்லை. உங்களின் பிள்ளைகளின் மூளைக்கு சற்று வேலை கொடுக்கும் விதமாக இந்த பதிவில் சில புதிர் விடுகதைகளை படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

விடுகதைகள் in Tamil:

  1. எழும்பு இல்லாத மனிதன் கிளை இல்லாத மரத்தில் ஏறுகிறான் அது என்ன?

பேன்

2. வெள்ளை ராஜாவுக்கு கருப்பு உடை அது என்ன?

உளுந்து

3. தொட்டுப் பார்க்கலாம் ஆனால் எட்டிப் பார்க்க முடியாது அது என்ன?

முதுகு

4. பற்கள் இருக்கும் ஆனால் கடிக்க மாட்டான் அவன் யார்?

சீப்பு

5.காற்றை குடித்து, காற்றில் பறப்பான் அவன் யார்?

பலூன்

புதிர் விடுகதைகள்:

6. கேடயமுள்ள வீரனுக்கு வாள் இல்லை அவன் யார்?

ஆமை

7. குடியிருக்க கோட்டை கட்டும் அந்த கோட்டையை உடைத்து வெளியே வரும் அது என்ன?

பட்டாம்பூச்சி

8. பாலாற்றின் நடுவே கருப்பு மீன் தெரியுது அது என்ன?

கண்

9. பேப்பர் கிடையாது வாய்ப்பாடு தெரியாது கணக்கிலோ புலி அது என்ன?

கால்குலேட்டர்

10. நாக்கு இல்லாவிட்டால் இவனுக்கு வேலையில்லை அவன் யார்?

விடை: மணி

Puthir Vidukathaigal in Tamil:

11. மூன்றெழுத்து பெயராகும், முற்றும் வெள்ளை நிறமாகவும் அது என்ன?

விடை : பஞ்சு

12. ஆயிரம் தச்சர் கூடி அழகான மண்டபம் கட்டி ஒருவன் கண்பட்டு உடைந்ததாம் மண்டபம் அது என்ன?

விடை : தேன்கூடு

13. நான் பார்த்தால் அவன் பார்ப்பான், நான் சிரித்தால் அவன் சிரிப்பான் அவன் யார்?

விடை : கண்ணாடி

14. அடிக்காமல் திட்டாமல் கண்ணீரை வரவழைப்பாள் அவள் யார்?

விடை : வெங்காயம்

15. அடர்ந்த காட்டில் ஒற்றையடி பாதை அது என்ன?

விடை: தலைவகிடு

கடினமான விடுகதைகள்

புதிர் விடுகதை வினா விடைகள்:

16. மீன் பிடிக்கத் தெரியாதாம் ஆனால் வலை பின்னுவானாம் அவன் யார்?

சிலந்தி

17. வெள்ளத்தில் போகாது, வெந்தணலில் வேகாது. கொள்ளையடிக்க முடியாது, கொடுத்தாலும் குறையாது. அது என்ன?

கல்வி

18. கல்லாலும்,மண்ணாலும் கட்டாத வீடு, காற்றிலே ஆடும் வீடு அது என்ன?

தூக்கனான் குருவி கூடு

19. ஓர் அரண்மனையில் 32 காவலர்கள் அது என்ன?

விடை : பற்கள்

20. கருப்பு சட்டைக்காரன் காவலுக்கு கெட்டிக்காரன் அது என்ன?

பூட்டு

மூளையை குழப்பும் புதிர் விடுகதைகள்:

21. வெட்டி கொள்வான் ஆனாலும் ஒட்டிக் கொள்வான் அவன் யார்?

விடை : கத்தரிக்கோல்

22. மணி அடித்தால் மலைப்பாம்பு நகரும் அது என்ன?

விடை: இரயில்

23. நாலு கால் உண்டு வீச வால் இல்லை அது என்ன?

விடை: நாற்காலி

24. இதயம் போல் துடிப்பிருக்கும், இரவு பகல் விழித்திருக்கும். அது என்ன?

கடிகாரம்

25. ஊருக்கெல்லாம் ஓய்வு, உழைப்பவர்க்கும் ஓய்வு; இவனுக்கு மட்டும் ஓய்வில்லை; இரவும் பகலும் ஓட்டந்தான். அது என்ன?

மூச்சு

புதிர் விடுகதைகள்:

26. அச்சு இல்லாத சக்கரம், அழகு காட்டும் சக்கரம். அது என்ன?

வளையல்

27. காற்று இல்லாத கண்ணாடிக் கூண்டில் மஞ்சக் கோழி மயங்கி கிடக்குது அது என்ன?

முட்டை

28. கண்ணில் தென்படுவான், கையில் பிடிபட மாட்டான். அவன் யார்?

புகை

29. அடிமேல் அடி வாங்கி அனைவரையும் சொக்க வைக்கும். அது என்ன?

மிருதங்கம்

30. பூ பூப்பது கண்ணுக்கு தெரியும், காய் காய்ப்பது கண்ணுக்குத் தெரியாது. இது என்ன?

விடை : வேர்க்கடலை

தமிழ் விடுகதைகள் 400 With Answer

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil