புத்தர் வரலாறு | Buddha History in Tamil

Puthar History in Tamil

கௌதம புத்தரின் வாழ்க்கை வரலாறு | Puthar History in Tamil

Gautama Buddha Life History in Tamil / புத்தர் வரலாறு: புத்தர் அரச குடும்பத்தில் பிறந்து அவர் எல்லா விதமான வசதிகளையும் பெற்று அனுபவித்து ராஜ வாழ்க்கையை விட்டு வெளியேறி வாழ்வின் அடிப்படை நோக்கத்தினை அறிந்து கொள்ள புத்தர் துறவு வாழ்க்கையை மேற்கொண்டார். கௌதம புத்தர் (putharin iyar peyar in tamil) இந்திய மதகுருவை சார்ந்தவர் ஆவர். நாம் அதிகமாக ஆசைப்படுவது துன்பத்திற்கு காரணம் என்று அனைவரின் மனதிலும் பதியும்படி போதித்தவர் புத்தர். இன்றைய காலத்தில் மன அழுத்தம் அதிகம் உள்ளவர்களுக்கு புத்தரின் வாழ்க்கை சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. சரி கௌதம புத்தரின் வாழ்க்கை வரலாறுகளை (puthar history in tamil) விரிவாக படித்து அறிந்துக்கொள்ளுவோம்..!

பாரதியார் வாழ்க்கை வரலாறு 

புத்தரின் தோற்றம், மறைவு:

புத்தர் இயற்பெயர் (putharin iyar peyar in tamil)சித்தார்த்த கௌதமர் 
மருவிய பெயர் புத்தர் 
புத்தர் பிறந்த ஆண்டு கி.மு. 563
புத்தரின் பெற்றோர் சுத்தோதனா கௌதமா மற்றும் மகாமாயா
புத்தர் பிறந்த இடம்லும்பினி [நேபாளம்]
புத்தர் பணி மதகுரு 
புத்தர் இறந்த ஆண்டு கி.மு 483

புத்தரின் இளம் வயது வாழ்க்கை:

புத்தரின் தந்தையிடம் ஞானி ஒருவர் எதிர்கால வாழ்க்கையில் புத்தர் மகானாக மாறுவார் என்று ஞானி கூறியதால் தந்தை சுத்தோதனா கௌதமா புத்தருக்கு எந்த கஷ்டமும் அறியாமல், உழைக்க விடாமல் அவருடைய அரண்மனையிலேயே எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து சித்தார்த்த கௌதமர் தமது இளமை வாழ்க்கையை அரண்மனையிலேயே செலவழித்தார்.

புத்தர் திருமண வாழ்க்கை:

தந்தை சுத்தோதனா கௌதமா தம் மகன் துறவியாக சென்று விடக்கூடாது என்று மனதில் நினைத்து சித்தார்த்தருக்கு 16 வயது இருக்கும் போது யசோதரா என்ற பெண்ணை புத்தருக்கு மனம் முடித்து வைத்தார். இருவருக்கும் ராகுலா என்ற ஆண் குழந்தை பிறந்தது.

துறவற வாழ்க்கையை விரும்பிய புத்தர்:

புத்தருக்கு பிறந்ததிலிருந்து அவர் நினைத்த அனைத்து விஷயங்களும் அவருக்கு எளிமையாக கிடைப்பதினால் வாழ்க்கையின் அர்த்தத்தினை புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தார். இதனாலேயே புத்தருக்கு இல்லற வாழ்க்கையும், அரண்மனை வாழ்க்கையும் சலிப்பாக மாறிவிட்டது.

ஒரு நாள் புத்தர் தனது அரண்மனை உதவியாளரிடம் அரண்மனைக்கு வெளியே சுற்றி பார்க்க வேண்டும் என்று கேட்டார். புத்தர் வெளியில் சுற்றி பார்க்கும் போது சில நிகழ்வுகளை கண்டார். அந்த நிகழ்வுகளில் ஒரு வயதான முதியவர், நோயுற்ற மனிதன், பிணம் ஒன்று, துறவி ஒருத்தரை பார்த்தார்.

ஏ.பி.ஜே.அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு

 

இவற்றையெல்லாம் பார்த்து வாழ்க்கையின் துன்பத்தினையும் மக்கள் படும் கஷ்டத்தினையும் கண்டு அறிந்தார். வயதான முதியவர், நோயுற்ற மனிதன், பிணம் இவற்றையெல்லாம் கண்டு அழகு மற்றும் வாழ்க்கை எப்போதும் நிரந்தரம் இல்லை என்று உணர்ந்தார். இறுதியாக அந்த துறவியை பார்த்ததும் அவருடைய அமைதியை ரசித்து மனதில் எப்போதும் அமைதி நிலவ வேண்டும் என்று நினைத்தார்.

புத்தர் இல்லற வாழ்க்கையிலிருந்து துறவற வாழ்க்கையை வாழ ஆசைப்பட்டார். இதனால் புத்தர் அவருடைய மனைவி, குழந்தை, அரண்மனை வாழ்க்கையை விட்டு வெளியேறினார்.

துறவரத்திற்கு சென்ற புத்தர்:

இல்லற வாழ்க்கையை விட்டு துறவற வாழ்க்கைக்கு சென்றார் புத்தர். புத்தர் தலையில் மொட்டை அடித்து, மஞ்சள் நிறத்தில் உடை அணிந்து அரண்மனையை விட்டு வெளியேறிய பிறகு மகதாவின் தலைநகரான ராஜ்க்ரஹா என்ற இடத்திற்கு பயணம் சென்றார்.

பின்னர், அந்த ராஜ்யத்திற்கு அருகே அமைந்துள்ள மலைகளில் துறவிகள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். துறவிகள் வாழ்ந்த குகைகளை நோக்கி புத்தர் சென்றார். அங்கு அவர், அலாமா கலாமோ என்ற ஒரு துறவியாரிடம், தனக்கு வழிகாட்ட வேண்டுமென்று கேட்டார். சிறிது காலத்திற்குப் பின்னர், அவர் ஆன்மீகப் பின்தொடர்தலுக்காக மற்றொரு துறவியிடம் செல்ல முடிவு செய்தார்.

மேலும், புத்தர் உள்ளார்ந்த பேரின்பத்தை அடைய யோகா கலை மற்றும் சந்நியாசத்தை அடைய கடுமையான பயிற்சிகளை எடுத்து வந்தார். தொடர் அவஸ்தையால் உணவு எடுத்துக்கொள்ளுவதில் ஆர்வம் காட்டாததால் அவர் மிகவும் பலவீனம் ஆகிவிட்டார்.

புத்தர் ஒரு நாள் தியான பயிற்சியை மேற்கொள்ளும்போது, சில நடனமாடும் பெண்கள் புத்தர் அமர்ந்த இடத்தை பார்ப்பதற்க்கு சென்றனர். திடீரென்று அவர்கள் பாடிய பாடல் சித்தார்த்தருக்கு, ‘உண்மையான மகிழ்ச்சி அடைவதற்கு, உணவு உண்ணாமலிருப்பது போன்ற சுய சித்திரவதைகள் உதவப் போவது இல்லை’ என்று அவருக்குப் புரியவைத்தது.

இதனால், புத்தர் தீவிர தியான பயிற்சி மற்றும் பிற நடைமுறைகளைக் விட்டுவிட்டு, மீண்டும் உணவு சாப்பிடத் தொடங்கினார். அவர் அமைதி நிலையை அடைவதற்கு உடலில் எந்த வலியும் இல்லாமல் சந்தோசமாக இருந்தால் மட்டுமே உள்ளார்ந்த அமைதியை அடைய முடியும் என்று உணர்ந்தார்.

புத்தருக்கு ஞானம் கிடைத்த போதி மரம்:

கடுமையான தவம் எடுத்தால் ஞானம் கிடைக்காது, நாம் இறக்கவே நேரிடும் என்பதை புத்தர் உணர்ந்தார். ஞானம் கிடைக்க சிறந்த வழி தியானம் தான் என்று தியானத்தில் தன்னுடைய முழு கவனத்தினையும் செலுத்தினார். பிறகு பல மயில் தூரம் நடந்து சென்று பல்வேறு இடங்களில் தியானத்தினை தொடர்ந்து செய்து வந்தார்.

புத்தர் பிஹார் மாநிலத்தில் உள்ள “கயை” எனும் இடத்தில் “போதி” மரத்தின் அடியில் அமர்ந்து பலநாட்கள் தியானம் செய்தார். அப்போது அவர் தேடுதலுக்கான பதில் கிடைத்தது. புத்தர் தியானத்தில் அமர்ந்திருந்த போது முதன் முறையாக தான் மகிழ்ச்சியாக இருப்பதாக உணர்ந்தார். மேலும் தனக்கு ஞானம் கிடைத்ததையும் அவர் உணர்ந்தார். “அளவிற்கு அதிகமான ஆசையே துன்பத்திற்கு காரணம்” என்பதை நன்கு மனதில் உணர்ந்துக்கொண்டார்.

புத்தரின் புத்த மதம்:

புத்தரின் போதனைகள் அனைத்தும் மனிதர்களின் வாழ்வில் இருக்கும் அனைத்து துன்பங்களையும் நீக்க வேண்டும் என்பதே. மக்களிடம் சென்று தனது போதனைகளை போதித்தார். புத்தர் போதித்த போதனையால் ஈர்க்கப்பட்ட மக்கள் ஒரு சமூகத்தை கூட்டி புத்தமதம் என்று அதற்கு பெயர் வைத்து அவரின் கொள்கை வழி வாழ்க்கை நடைமுறையினை அமைக்க வேண்டும் என்று நினைத்தனர். அன்று உருவானது தான் இந்த புத்தமதம். இன்று வரை புத்தர் போதித்த புத்த மதத்தினை உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள மக்கள் பின்பற்றி வருகின்றனர்.

கௌதம புத்தரின் இறப்பு:

புத்தருடைய சீடர் ஒருவரின் அழைப்பை ஏற்று அவரது வீட்டிற்கு உணவு உண்ணச் சென்றார். அந்த உணவில் புத்தருடைய சீடர் விஷம் கலக்கப்பட்ட உணவினை புத்தர் சாப்பிட்டார். அதன் பின், புத்தர் தள்ளாடி குஷிநாகா என்ற இடத்திற்கு வந்தடைந்தார். அவர், தனது இறுதி குளியலை காகுத்தா ஆற்றில் குளித்தார். குளித்து சில நேரத்திலே புத்தர் உயிர் துறந்தார்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today useful information in tamil