Purampokku Nilam in Tamil | புறம்போக்கு நிலம் என்றால் என்ன
வணக்கம் நண்பர்களே. நாம் அனைவருமே புறம்போக்கு நிலம் பற்றி கேட்டு இருப்போம். ஆனால் அதனை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால் இன்றைய பதிவில் புறம்போக்கு நிலம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள போகிறோம். சொந்தமாக நிலம் வாங்குவது என்பது அனைவரின் கனவாகவே இருக்கிறது. சொந்தமாக நிலம் வாங்குவது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் கிடையாது. அதுபோல இன்று நாம் புறம்போக்கு நிலம் என்றால் என்ன..? நிலம் எப்படி புறம்போக்கு நிலமாக மாற்றப்பட்டது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
இதையும் கிளிக் செய்து பாருங்கள் ⇒ அனாதீனம் நிலம் என்றால் என்ன..?
புறம்போக்கு நிலம் என்றால் என்ன..?
புறம்போக்கு நிலம் என்பதை அரசின் சொத்து என்று கூறலாம். பொது பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் நிலங்களை புறம்போக்கு நிலம் என்று கூறுகின்றனர். அதாவது நம் நாட்டில் வேளாண்மை செய்யமுடியாத நிலங்களை புறம்போக்கு நிலம் என்று கூறுகின்றனர்.
சாலைகள், மேய்ச்சல் நிலங்கள், தரிசு நிலங்கள், கடற்கரை, ஆறு, ஓடை, வாய்க்கால், போன்ற நீர்நிலைகள், மற்றும் சுடுகாடு போன்ற பொது பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் நிலங்களை புறம்போக்கு நிலம் என்று கூறுகின்றன.
இந்த புறம்போக்கு நிலங்களை தனியார் இல்லாத மாநில அரசு, நடுவண் அரசு மற்றும் உள்ளாட்சி போன்ற அமைப்புகளால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
சோழர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்தே புறம்போக்கு என்ற சொல் பயன்பாட்டில் இருந்து வந்தது என்று கூறப்படுகிறது. இந்த நிலங்கள் வருவாய் ஆவணங்களுக்கு வெளியே இருப்பதால் இது புறம்போக்கு நிலம் என்று அழைக்கப்படுகின்றன.
புறம்போக்கு நிலம் பற்றிய தகவல்கள்:
அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை மக்கள் பயன்பாட்டு நிலங்கள் என்றும் அரசினுடைய நிலங்கள் என்றும் கூறப்படுகின்றன. இந்த புறம்போக்குப் பகுதிகளில் இருந்து எந்த வரியையும் அரசு எதிர்பார்க்க முடியாது.
இதுபோன்ற புறம்போக்கு நிலங்களில் கல்வி நிலையங்கள் கட்டுவதற்கும், அரசு தொடர்பான பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் கட்டுவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. அதுமட்டுமில்லாமல், அரசு இந்த புறம்போக்கு நிலத்தில் நிலமற்ற ஏழைகளுக்கு வீடும் கட்டி தருகின்றது.
இதுபோன்ற பயன்பாடுகளுக்காக அரசு இந்த நிலங்களுக்கு இலவச பட்டா வழங்குகின்றது. ஏரி, குளம், கால்வாய், ஓடை மற்றும் குட்டை போன்ற நீர் நிலைகளையும் புறம்போக்கு நிலம் என்று கூறுகின்றனர்.
நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்யக் கூடாது என்று அரசு கூறியுள்ளது. அதனால் அது போன்ற புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வழங்க கூடாது என்று கூறியுள்ளது. அதேபோல நிலம் இல்லாத மக்களுக்கு இந்த நிலத்திற்காக பட்டா வழங்கலாம் என்றும் அரசு ஆணையிட்டுள்ளது.
புறம்போக்கு நிலத்தில் ஒருவர் 5 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வந்தார் என்றால் அவருக்கு அந்த புறம்போக்கு நிலத்தை வீட்டு மனை பட்டாவாக வழங்கவேண்டும் என்று அரசு கூறியுள்ளது.
குடியிருப்பு பகுதியில் இருக்கும் புறம்போக்கு நிலத்தை நத்தம் புறம்போக்கு நிலம் என்று கூறுகின்றனர்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |