பெண்ணியம் என்றால் என்ன தெரியுமா..?

Advertisement

Feminism Meaning in Tamil 

வாசகர்களே அனைவருக்கும் வணக்கம்..! இன்றைய பதிவின் வாயிலாக பெண்ணியம் என்றால் என்ன..? என்பதை பற்றியும் மற்றும் பெண்ணியம் பற்றிய முழு தகவல்களையும் தான் தெரிந்து கொள்ளப்போகின்றோம். பொதுவாக பெண்ணியம் என்பது என்ன என்று நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் பலரும் பெண்ணியம் என்றால் என்ன என்று தேடிக்கொண்டிருப்பீர்கள். அப்படி பெண்ணியம் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ள நினைப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். ஓகே வாங்க பிரண்ட்ஸ் பெண்ணியம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளலாம்..!

பெண்மை அழகு கவிதை

பெண்ணியம் என்றால் என்ன..? 

பெண்ணியம் என்றால் என்ன

பெண்ணியம் என்பது ஒரு சமூக-அரசியல் இயக்கம் மற்றும் கருத்தியல் ஆகும். இது அனைத்து பாலினங்களுக்கும் சம உரிமைகள் மற்றும் வாய்ப்புகளுக்காக வாதிடுகிறது.

அதாவது பெண்ணியம் (Feminism) என்பது பெண்களை தாழ்வுபடுத்தும் சமூகம், அரசியல், பொருளாதார நடைமுறைகள், கட்டமைப்புக்கள் மற்றும் சமத்துவமின்மையை எதிர்த்து  கவனப்படுத்தும் சமூகம், கலாச்சாரம், அரசியல் இயக்கங்கள், செயற்பாடுகள் போன்ற  கோட்பாடுகளின் தொகுப்பாகும். ஆண் பெண் சமத்துவத்தில் கவனம் செலுத்தும் கோட்பாடாகவும் இது வரையறுக்கப்படுவதுண்டு.

பெண் எழுச்சி கவிதைகள்

பெண்ணியம் பொருள் விளக்கம்: 

பெண்ணியம் பொருள் விளக்கம்

இந்த பெண்ணியம் என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் Feminism என்று அழைப்பார்கள். இந்த Feminism என்னும் ஆங்கிலச் சொல் Femina என்னும் இலத்தீன் மொழியிலிருந்து உருவானது ஆகும்.

இந்த பெண்ணியம் என்ற சொல்லுக்கு பொருள், பெண்மைக்குரிய இயல்புகளை உடையவள் என்பதாகும்.

பெண்ணியம் என்ற சொல் நடப்பில் நிலைபெற்று விட்டது. ஆகையால், கருத்துக் குழப்பத்திற்கு இடம் தராமல் தெளிவாக உள்ளதாலும் பெமினிசம் என்கிற ஆங்கிலச் சொல்லின் தமிழ் இணைச் சொல்லாக பெண்ணியம் வழங்கப்பட்டு வருகிறது. பெமினிசம் என்பதற்கு பெண்ணியம் என்பதே பொருத்தமான கலைச் சொல்லாக இருக்கிறது.

பெண்மையை போற்றும் திருக்குறள்

பெண்ணியம் என்ற சொல்லை முதலில் உருவாக்கியவர்:

பெண்ணியம் என்பது பெண்களின் எல்லாச் சிக்கல்களையும் புரிந்துகொண்டு அவற்றைக் களைய முற்படும் இயக்கமாகும். அதன் மூலம் உலகளவில் அரசியல், பண்பாடு, பொருளாதாரம், ஆன்மீகம் ஆகியவற்றில் நல்ல மாற்றத்தை உருவாக்கிட முடியும் என்று சொல்லப்படுகிறது.

பிரான்சு நாட்டைச் சேர்ந்த சிமோன் டி பேவர் என்பவர் இரண்டாவது பாலினம் (The Second Sex:1949) என்ற நூலை எழுதினார். இந்த நூலை முன்னோடியாகக் கொண்டு, பெண்ணியம் ஓர் அறிவார்ந்த கொள்கையாகவும் போராட்டக் கருவியாகவும் முன்வைக்கப்பட்டது. 1871 ஆம் ஆண்டு பிரான்சில் பெமினிசம் என்ற சொல் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதன் பிறகு 1872 ஆம் ஆண்டில் அலெக்சாண்டர் டூமஸ் பில்ஸ் என்ற பிரெஞ்சு எழுத்தாளர், பெண்கள் ஆண்களால் வழிநடத்தப்படுகிறார்கள் என்று கருத்துத் தெரிவித்துள்ளார். இதன் பின்னர் 1840 ஆம் ஆண்டில் பெண்களின் உரிமைக்கான இயக்கம் தொடங்கப்பட்டது.

இருந்தாலும், 19 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தான் பெண்ணின் இருப்பு நிலை குறித்த அடைமொழி, சமூக பொருளாதார நிலை குறித்த கேள்விகள் தொடர்ந்து தீவிரமாகச் சிந்திக்கப்பட்டன. அதன் பிறகு இந்தியாவில் “பெண்ணியம்” என்ற சொல் 1960 ஆம் ஆண்டுக்குப் பிறகே அதிகமாகப் பேசப்பட்டது.

பெண்ணியம் வேறு பெயர்கள்: 

  • பெண்ணியம்
  • பெண்ணிலைவாதம்
  • பெண் நிலை ஏற்பு
  • மகளிரியல்
  • பெண் நலக்கொள்கை
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் => Today Useful Information in Tamil
Advertisement