Disaster Management in Tamil
தேசிய பேரிடர் மேலாண்மை என்றால் என்ன? என்பது இன்றைய நம் மனதில் எழும் பெரும் கேள்வியாக இருந்து வருகிறது.. அதேபோல் இயற்கை சீற்றம் ஏற்படக்கூடிய இடத்திற்கு ஏன் தேசிய பேரிடராக அறிவிக்கப்படுகிறது. இது போன்று பேரிடர் மேலாண்மை ஆணையம் பற்றிய தகவல்களை இந்த பதிவில் நாம் படித்தறியலாம்.
பேரிடர் மேலாண்மை என்றால் என்ன?
தேசிய பேரிடர் மேலாண்மை என்பது இந்தியாவில் ஏற்படக் கூடிய இயற்கைப் பேரழிவுகள் முதல், உயிரியல், ரசாயன, அணுக் கதிரியக்கம் முதலான அனைத்து வகைப் பேரழிவுகளையும் சமாளிக்கும் வழிமுறைகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உருவாக்கபட்ட ஆணையம் தான் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகும். இந்த தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் இந்திய அரசாங்கம் முன்னுரிமையாக அங்கீகரித்து ஆகஸ்ட் 1999-யில் ஓர் உயர் ஆற்றல்மிக்க குழுவை (High-Powered Committee) அமைத்தது. 2001 குஜராத் பூகம்பத்திற்கு பிறகு பேரிடர் மேலாண்மை திட்டமிடல் குறித்தும் தடுப்பு வழிமுறைகள் குறித்தும் பரிந்துரைகளை செய்ய ஒரு தேசிய குழு அமைக்கப்பட்டது. இருப்பினும் 23 டிசம்பர் 2005-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமில் பல உயிர்களை இழந்த பின்பு தான் இந்திய அரசால் பேரிடர் மேலாண்மை சட்டம் இயற்றப்பட்டது.
தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் பணிகள்:
திடீர் என்று ஏற்படும் இயறக்கை அழிவுகளை சமாளிக்கும் வழிமுறைகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையதின் கீழ் தேசியப் பேரழிவு மீட்புப் படை அமைக்கப்பட்டுள்ளது. அதாவது உடனடி மீட்பு நடவடிக்கைக்காக நாடு முழுவதும் 10 பட்டாலியன் படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு பட்டாலியன் தமிழகத்தில் அரக்கோணத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தேசிய அமைப்பின் கீழ் ஒவ்வொரு மாநிலங்களிலும் பேரிடர் மேலாண்மை ஆணையம் ஏற்படுத்த வேண்டும் என்ற சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் பீகார், குஜராத், ஒடிசா, தமிழ்நாடு உட்பட 7 மாநிலங்கள் தவிர வேறு எந்த மாநிலங்களிலும் இந்த ஆணையம் அமைக்கப்படவில்லை. ஒரு இயறக்கை பேரழிவை தேசிய பேரிடர் என்று தீர்மானம் செய்வதற்கு குறிப்பிட்ட வரையறைகள் மற்றும் விதிமுறைகள் எதுவும் இல்லை. அதை மத்திய அரசாங்கமே முடிவு செய்கிறது. எதற்காக தேசிய பேரிடர் என்று அறிவிக்க வேண்டும் என்றால் தேசிய பேரிடர் நிவாரண தொகை என்று ஒன்று இருக்கிறது, அதனை உடனடியாக பெறுவதற்குத்தான் தேசிய பேரிடர் என்று அறிவியுங்கள் என்று பாதிக்கப்பட்டவர்கள் முறையிடுகின்றன. இருப்பினும் இது மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டிய ஒரு விஷயம் ஆகும்.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு நிதி எங்கு இருந்து பெறப்படுகிறது?
பான்மசாலா, மெல்லும் புகையிலை, பீடி, சிகிரெட் போன்றவைகள் மூலம் வசூலிக்கப்படும் வரியில் இருந்து இந்த ஆணையத்திற்கு ஒரு பகுதி வழங்கப்படுகிறது. மேலும் எந்த ஒரு தனி நபரோ, நிறுவனமோ இந்த ஆணையத்திற்கு பணம் வழங்கலாம். மேலும் ஒவ்வொரு நிதியாண்டும் ஒரு பெரும் நிதி தொகை இந்த ஆணையத்திற்கு ஒதுக்கப்படுகிறது.
ஆனால் சமீபத்தில் ஏற்படும் இயற்கை அழிவுகளை தேசிய பேரிடர் என்று அறிவிக்காமல் கடுமையான இயற்கை பேரழிவு என்று அறிவிக்கிறது. இதற்கு என்ன காரணம் தேசிய பேரிடர் என்று அறிவிக்கும் போது பாதிக்கப்பட்ட மாநில அரசு கேட்க்கும் முழு தொகையையும், மத்திய அரசு கொடுக்க நேரிடும். இதனை தடுக்கவே கடுமையான இயற்கை பேரழிவு என்று அறிவிக்கப்படுகிறது. இப்படி அறிவிப்பதன் மூலம் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திடம் இருந்து குறிப்பிட்ட தொகையையும், மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்திடம் இருந்து குறிப்பிட்ட தொகையையே பெறமுடியும். ஆகவே தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் என்பது ஒரு நிவாரண தொகையை பெறுவதற்கு மட்டுமே.
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |