பொங்கல் விளையாட்டு போட்டிகள் பெயர்கள்..! Pongal Vilayattu Pottigal List..!
நண்பர்களுக்கு வணக்கம்.. இன்னும் சில தினங்களில் பொங்கல் பண்டிகை வரவிருக்கிறது. பெண்கள் வீட்டை இப்போதிலிருந்தே சுத்தம் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். சந்தைக்களில் இப்போதிருந்தே கரும்புகள், வாழைத்தாரு விற்க ஆரம்பித்துவிடுவார்கள். இதனுடன் பொங்கல் வந்தாலே விளையாட்டுப் போட்டிகள் களைகட்டும் கிராமங்களில் உள்ள இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் பொங்கல் பண்டிகை அன்று என்னென்ன போட்டிகள் வைக்கலாம் என்று யோசிக்க ஆரம்பித்துவிடுவார்கள். இந்த விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு கொடுப்பதற்காக ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே வசூல் செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.
சரி இந்த ஆண்டு உங்கள் ஊரில் பொங்கல் பண்டிகைக்கு விளையாட்டு போட்டிகள் வைக்க திட்டமிட்டுள்ளீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கானது தான். ஆம் பொங்கல் பண்டிகை அன்று கொண்டாடப்படும் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளின் பெயர்களை தான் இங்கு பட்டியல் செய்துள்ளோம். அதனை இப்பொழுது நாம் ஒவ்வொன்றாக படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.
பொங்கல் விளையாட்டு போட்டிகள் பெயர்கள்..!
பொழுதுபோக்கு என்றால் ‘டிவி’ விளையாட்டு என்றால் கிரிக்கெட் எனச் சொல்லும் அளவிற்கு இன்றைய சிறுவர்களின் உலகம் இருக்கிறது. வாழ்க்கையின் முக்கியத்துவத்தை விவரிக்கும் விளையாட்டுகளை சொல்லிக் கொடுக்க பெரியோர்களுக்கு நேரமில்லை. உடலுக்கு வலுவூட்டல் வளைந்து கொடுக்கும் தன்மை தைரியம் விரைவாக செயலாற்றல் மனசக்தி அறிவுத்திறன் மேம்பாடு, மனக்கூர்மை என எல்லா அம்சங்களையும் கொண்டது நமது பாரம்பரிய விளையாட்டுக்கள்.
- கோலப்போட்டி,
- ஓட்டப்பந்தயம்,
- சாக்குபோட்டி,
- ஸ்லோ சைக்கிள்,
- லெமன் ஸ்பூன்,
- ஓவியப்போட்டி,
- சோடா பாட்டில் தண்ணீர் நிரப்புதல்,
- கயிறு இழுத்தல், ,
- தண்ணீர் குடம் சுமத்தல்
- ஸ்லோ சைக்கிள் ரேஸ்,
- பானை உடைத்தல்
- மியூசிக் சேர்,
- ஜல்லிக்கட்டு,
- முறுக்கு சாப்பிடும் போட்டி
- பலூன் உடைத்தல்
- பலூன் ஊதும் போட்டி
- வேகமாக நடக்கும் போட்டி
- கண்ணை கட்டி கொண்டு கல் உடைத்தல்
- வாட்டர் கேன் மூலம் பந்து கடத்துதல்
- இரண்டு கையில் செங்கல் பிடித்து தூக்கி கொண்டு நிர்தல்
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஜல்லிக்கட்டின் விதிமுறைகள் இதுதானா?
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |