பொருளாதார வளர்ச்சி
ஒரு நாட்டின் பொருளாதாரம் என்பது அந்த நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமாக உள்ளது. குடிமக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவது மட்டும் அல்லாமல் மற்டுத்துவம், பாதுகாப்பு மற்றும் கல்வியில் அவர்களின் முன்னேற்றத்திற்கு பொருளாதாரம் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஒரு நாட்டின் பொருளாதாரம் என்பது அந்த நாட்டின் இயற்கை வளம், மனித வளம் ஆகியவற்றை சேர்த்தே கணக்கிடப்படுகிறது. நாட்டில் உள்ள வளங்களை கொண்டு நாட்டின் உற்பத்தி திறணை அதிகரிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். இன்றைய பதிவில் பொருளாதர வளர்ச்சி என்றால் என்ன என்பதனை பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
பொருளாதார வளர்ச்சி என்றால் என்ன?
பொருளாதார வளர்ச்சி என்பது நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தனது வாழ்க்கையை எந்த ஒரு இடையூறும் இல்லாமல் நடத்தத் தேவையான ஊதியம் பெறும் நிலைக்கு முன்னேறுவது பொருளாதார வளர்ச்சி எனப்படும்.
பொருளாதார வளர்ச்சி என்பது முந்தைய காலகட்டத்துடன் இன்றைய காலகட்டத்தை ஒப்பிடும் போது, அந்த காலகட்டத்தில் பொருளாதார பொருட்கள் விலை மற்றும் சேவைகளின் உற்பத்தி அதிகரிப்பு ஆகும்.
பொருளாதார வளர்ச்சி என்பது பெயரளவு அல்லது உண்மையான (பணவீக்கத்தை குறைக்க ) விதிமுறைகளில் படி அளவிடப்படும்.
பாரம்பரியமாக, மொத்த பொருளாதார வளர்ச்சியானது மொத்த தேசிய உற்பத்தி (GNP) அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) அடிப்படையில் அளவிடப்படுகிறது.
பொருளாதார வளர்ச்சியை புரிந்து கொள்ள:
உற்பத்தி அதிகரிப்பு :
மக்களின் தேவைக்கு ஏற்ப பொருட்களை அதிகமாக உற்பத்தி செய்வது, புதிய பொருட்களை அறிமுகப்படுத்துவது அல்லது இருக்கும் பொருட்களை மேம்படுத்துவது ஆகியவை அடங்கும்.
அளவீடு:
பொருளாதார வளர்ச்சியை பொதுவாக மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) ள் மூலம் அளவிடுகிறது. இது ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பைக் குறிக்கிறது.
நன்மைகள்:
பொருளாதார வளர்ச்சி பெரும்பாலும் உயர்ந்த வாழ்க்கைத் தரம், குறைந்த வறுமை மற்றும் மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு போன்ற நேர்மறை விளைவுகளுடன் தொடர்புடையது.
சவால்கள்:
வளர்ச்சி எப்போதும் நல்லது அல்ல என்பதை உணர்வது அவசியம். சுற்றுச்சூழல் தாக்கம், வருமான ஏற்றத்தாழ்வு மற்றும் வள ஆதார குறைவு ஆகியவை கட்டுப்படுத்தப்படாத வளர்ச்சியின் எதிர்மறை விளைவுகளாக இருக்கலாம்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |