பொருள் வேற்றுமை அணி..! Porul Vetrumai Ani in Tamil With Example
தமிழ் இலக்கணத்தில் வேற்றுமை அணி என்பது இரு பொருள்களுக்கு இடையேயுள்ள ஒற்றுமையைக் கூறி, பின் அவற்றை வேறுபடுத்திக் காட்டுவது ஆகும். சரி இந்த பதிவில் பொருள் வேற்றுமை அணி பற்றி படித்தறியலாம். இதுபோன்ற இலக்கணம் குறிப்புகளை தெரிந்து கொள்வதன் மூலம் பொது தேர்வுகளில் கலந்துகொள்ளும் போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க பொருள் வேற்றுமை அணி பற்றி இப்பொழுது படித்தறியலாம்.
பொருள் வேற்றுமை அணி சான்று விளக்குக – Porul Vetrumai Ani Ilakkanam in Tamil
அணி விளக்கம்:
செய்யுளில் கவிஞர் இருவேறு பொருள்களுக்கிடையே ஒற்றுமையை முதலில் கூறிப்பின் ஒன்றிலிருந்து மற்றொன்றை வேறுபடுத்திக் காட்டுவது பொருள் வேற்றுமை அணி ஆகும்.
சான்று:
” ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத்து) இருளகற்றும் – ஆங்கவற்றுள். மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது தன்னே ரிலாத தமிழ்.
சான்று விளக்கம்:
கதிரவன் | தமிழ் |
உயர்ந்த மலைகளுக்கிடையே தோன்றுகிறது | பொதிகை மலையிலிருந்து தோன்றுகிறது |
கடலால் சூழப்பட்ட உலகத்தின் புற இருளைப் போக்குகிறது | உலகில் வாழும் மக்களின் அறியாமை என்னும் இருளைப் போக்குகிறது. |
ஒளிர்கின்ற கதிரவனாக இருக்கிறது. | தனக்கு நிகரில்லாத தமிழக இருக்கிறது |
அணிப்பொருத்தம்:
தமிழுக்கும் கதிரவனுக்கும் இடையேயான பயன்சார்நத ஒற்றுமையை முதலில் கூறி . அவற்றுள் தமிழ் தன்னேரில்லாதது என்ற தன்மையைப் பின்னர் வேறுபடுத்திக் காட்டுவதால் இது பொருள் வேற்றுமை அணி ஆயிற்று.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |