மகிழ்ச்சி வேறு சொல் | Magilchchi Veru Sol in Tamil
நாம் அனைவருக்குமே பொதுவாக ஒரு ஆசை இருக்கும். அது என்னவென்றால் இந்த உலகில் உள்ள அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள வேண்டும் என்பது தான். அதற்காக நம்மில் பலரும் முயற்சி செய்வோம் ஆனால் அது முழுமை அடைந்துள்ளது என்றால் இல்லை என்பதே உண்மை. இவ்வளவு ஏன் நமது தாய்மொழியான தமிழ் மொழியில் உள்ள அனைத்து சொல்லுக்குமான அர்த்தம் நமக்கு தெரியுமா என்றால் இல்லை என்பதே உண்மை.
அதிலும் குறிப்பாக நாம் அன்றாடம் பேசும் பல வார்த்தைகள் ஒரு வார்த்தையால் மட்டும் நமது தமிழ் மொழியில் பயன்படுத்தப்படுவதில்லை. ஏனென்றால் நமது தமிழ் மொழியில் ஒரே பொருளுடைய பல வார்த்தைகள் உள்ளது. அதனால் இன்றைய பதிவில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் மகிழ்ச்சி என்ற சொல்லுக்கான வேறு சொல் என்னென்ன என்பதை அறிந்து கொள்ள இருக்கின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
மகிழ்ச்சி என்றால் என்ன..?
மனதிற்கு இதமான உணர்வாக சந்தோசத்தை கொடுப்பதாகவும் மகிழ்ச்சி காணப்படுகின்றது. அதாவது மனம் திருப்தி அடையும் போது மகிழ்ச்சி எனும் உணர்வானது உண்டாகின்றது. அனைவரும் விரும்பும் உணர்வாக மகிழ்ச்சி காணப்படுகின்றது.
போதும் என்ற மனமே மகிழ்வான வாழ்விற்கு அடித்தளமாகும். இருப்பதை வைத்து திருப்தி அடையும் மனநிலை இருந்தால் மகிழ்வான வாழ்வை இலகுவாக அடைந்து கொள்ளலாம்.
இப்படி நமது வாழ்க்கையின் முக்கியமான அடையாளமாக திகழும் மகிழ்ச்சி என்ற சொல்லுக்கான வேறு சொற்கள் என்னென்ன என்பதை பற்றி இங்கு காணலாம் வாங்க.
மகிழ்ச்சி வேறு சொல்:
- சந்தோசம்
- களிப்பு
- ஆனந்தம்
- இன்பம்
- குதூகலம்
- உவகை
- எக்களிப்பு
- புளகம்
- புளகிதம்
மேகம் வேறு சொல் |
உதவி வேறு சொல் |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |