மனித எலும்புகளின் பட்டியல் | Human Bones in Tamil

Advertisement

மனித எலும்புகளின் எண்ணிக்கை | Human Body Bones List Names in Tamil

skeletal system in tamil: சாதாரண வளர்ந்த மனிதனுடைய எலும்புக்கூடு 206 (மார்பெலும்பு மூன்று பகுதிகளாகக் கருதப்பட்டால் 208) எண்ணிக்கையான எலும்புகளைக் கொண்டிருக்கும். இந்த எண்ணிக்கை உடற்கூட்டியல் வேறுபாடுகளைப் பொறுத்து மாறுபடக்கூடும். வயது வந்தவரின் மனித எலும்புக்கூடு சுமார் 207 முதல் 213 எலும்புகளைக் (மனித உடலில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை) கொண்டுள்ளது. குழந்தைகளுக்கு 300 எலும்புகள் உள்ளது. சரி இந்த பதிவில் மனித உடலில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கையை படித்து தெரிந்துக்கொள்ளலாம்..

மனித உடல் உறுப்பு பெயர்கள் தமிழ்

மண்டையறை எலும்புகள் (8):

  • நுதல் எலும்பு
  • சுவர் எலும்பு (2)
  • கடைநுதலெலும்பு (2)
  • பிடர் எலும்பு
  • ஆப்புரு எலும்பு
  • நெய்யரியெலும்பு

முக எலும்புகள்(14):

  • கீழ்த்தாடை எலும்பு (1)
  • மேல்தாடை எலும்பு (2)
  • அண்ணவெலும்பு (2)
  • கன்ன எலும்பு (2)
  • மூக்கெலும்பு (2)
  • கண்ணீர்க் குழாய் எலும்பு (2)
  • மூக்குச்சுவர் எலும்பு (1)
  • கீழ்மூக்கு சங்கெலும்பு (2)

நடுக்காதுகளில் செவிப்புலச்சிற்றெலும்புகள் (6):

  • சம்மட்டியுரு (2)
  • பட்டையுரு (2)
  • ஏந்தியுரு (2)

தொண்டை பகுதி (1):

  • தொண்டை எலும்பு

தோள் பட்டை:

  • காறை எலும்பு
  • தோள் எலும்பு
மனித உடல் பொது அறிவு வினா விடை?

மார்புக்கூடு:

  • மார்பெலும்பு
  • பிடியுரு (manubrium),
  • உடல் மார்பெலும்பு (body of sternum),
  • வாள்வடிவ நீட்டம் (xiphoid process)
  • விலா எலும்புகள் (rib)

முள்ளந்தண்டு நிரல்:

  • கழுத்து முள்ளந்தண்டெலும்புகள்
  • நெஞ்சு முள்ளந்தண்டெலும்புகள்
  • நாரி முள்ளந்தெண்டெலும்புகள்
  • திருவெலும்பு
  • வாலெலும்பு

மேற்கைகளில்:

  • புய எலும்பு
  • புய எலும்பு புடைப்பு

முழங்கை:

  • அரந்தி
  • ஆரை எலும்பு

கை பகுதி:

  • மணிக்கட்டு எலும்புகள்
  • படகெலும்பு
  • பிறைக்குழி எலும்பு
  • முப்பட்டை எலும்பு
  • பட்டாணி எலும்பு
  • சரிவக எலும்பு
  • நாற்புறவுரு எலும்பு
  • தலையுரு எலும்பு
  • கொக்கி எலும்பு
  • அங்கை முன்னெலும்புகள்
  • விரலெலும்புகள்
  • அண்மை விரலெலும்புகள்
  • நடு விரலெலும்புகள்
  • தொலை விரலெலும்புகள்
மனித மூளை பற்றிய தகவல்கள்

இடுப்பு வளையம்:

  • இடுப்பெலும்பு
  • கீழ் இடுப்பெலும்பு

கால்கள்:

  • தொடையெலும்பு
  • இடுப்பு மூட் (மூட்டு, எலும்பல்ல)
  • பெரிய தொடையெலும்புக் கொண்டை
  • தொடையெலும்புப் புடைப்பு
  • முழங்காற்சில்ல
  • கால் முன்னெலும்பு (கீழ்க்கால் உள்ளெலும்பு)
  • சிம்பு எலும்பு (கீழ்க்கால் வெளியெலும்பு)

காலடிகளில்:

  • கணுக்கால் எலும்புகள்
  • குதிகால்
  • முட்டி
  • படகுரு எலும்பு
  • உள் ஆப்புவடிவ எலும்பு
  • இடை ஆப்புவடிவ எலும்பு
  • வெளி ஆப்புவடிவ எலும்பு
  • கனசதுர எலும்பு
  • அனுகணுக்காலெலும்புகள்
  • விரலெலும்புகள்
  • அண்மை விரலெலும்புகள்
  • நடு விரலெலும்புகள்
  • தொலை விரலெலும்புகள்
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement