Manmadhan Kaiyil Irupathu in Tamil | மன்மதன் கையில் இருப்பது
தினமும் ஏதாவது ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவரா நீங்கள்..? அப்போ உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். சரி உங்களுக்கு இந்த கேள்விக்கான பதில் தெரியுமா..? அதாவது மன்மதனின் கையில் இருப்பது என்ன என்று உங்களுக்கு தெரியுமா..? தெரியவில்லை என்றால், அதை பற்றி இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ள போகின்றோம். எனவே மன்மதனின் கையில் இருப்பது என்ன என்பதை படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
மன்மதன் கையில் இருப்பது என்ன என்று நாம் அனைவருமே தெரிந்துகொள்ள விரும்புவோம். ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையும்.
கம்பர் தன் நூலுக்கு இட்ட பெயர்
மன்மதன் கையில் இருப்பது என்ன..?
பொதுவாக மன்மதன் கையில் இருப்பது என்ன என்று நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகவே மன்மதன் கையில் இருப்பது கரும்பு வில் ஆகும். ஆனால் கரும்பு வில் ஏன் மன்மதனின் கையில் இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா..? அதை பற்றி பார்க்கலாம் வாங்க.
மன்மதன் கையில் கரும்பு வில் ஏன்..?
பொதுவாக மன்மதன் கையில் கரும்பு வில் இருப்பதை நம்மில் பலரும் பார்த்திருப்பீர்கள். அதில் ஒரு மறைமுகமான உண்மை இருக்கிறது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
அதாவது காதல் தேவதைகளாக வர்ணிக்கப்படும் ரதியும், மன்மதனும் தம்பதியர்களுக்கு அறிவுரை சொல்லும் விதத்திலேயே கரும்பு வில் உள்ளதாக கூறப்படுகிறது.
காரணம், கரும்பு உயிரணுக்களை உற்பத்தி செய்யும் ஆற்றல் பெற்றது. எனவே ஆண்களுக்கு ஆண்மை பெருகவும், வாரிசுகள் பிறக்கவும் இந்தக் கரும்பு ஒரு மருத்துவப் பொருளாகவும், மகிழ்ச்சி தரும் இனிப்புப் பொருளாகவும் இருக்கிறது.
இதை மற்ற தம்பதியர்களுக்கு உணர்த்தும் விதமாக தான் கரும்பு வில் மன்மதன் கையில் இருக்கிறது.
மன்மதன் என்பவர் யார்..?
மன்மதன் என்பவர் முல்லை நிலத்தின் கடவுளான திருமால் மற்றும் திருமகளின் மகன் ஆவார். மன்மதன் காதலர்களின் காமத்திற்கு தலைவனாக இருப்பவர் என்று சொல்லப்படுகிறது. காமன் என்ற மன்மதனின் மனைவியின் பெயர் தான் இரதி.
அதனால் அனைவரும் இவரை காமன் என்று தான் அழைப்பர். அதுமட்டுமில்லாமல், காம தேவன் என்பது காமத்தின் அதிபதியாக விளங்கும் ஓர் தமிழரின் கடவுள் ஆவார். அப்படி இவருக்கு .வேறு பெயர்களும் இருக்கின்றன. அதை பற்றி தற்போது காண்போம்.
- ராகவிருந்தன்
- அனங்கன்
- அந்தகன்
- கந்தர்வன்
- மன்மதன்
- மன்ராயன்
- மனோசித்தன்
- மனோகரன்
- மதனன்
- சேகரன்
- மதனசேகரன்
- சுந்தரன்
- ரதிமணாளன்
- வில்லாலன்
- புஷ்பவனன்
- மாறன்
- ஆனந்தன்
- வசந்த புஷ்பதானுவன்
| இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |









