மயங்கொலிச் சொற்கள் | Mayangoli Words in Tamil

Advertisement

மயங்கொலிச் சொற்கள் தமிழ் | Mayangoli Sorkal Tamil

சொற்கள் என்பது ஒரு எழுத்து தனித்து நின்றோ அல்லது பல எழுத்துக்கள் சேர்ந்து பொருள் தருவது ஆகும். சொற்களில் கலை சொற்கள், தொகை சொற்கள், அகர வரிசை சொற்கள், மயங்கொலி சொற்கள் என பல உண்டு. ஒவ்வொரு சொற்களுமே வெவ்வேறு விதமான பொருளை தரக்கூடியதாக இருக்கும். சொற்களை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கும் மாணவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். அந்த வகையில் நாம் இந்த பதிவில் மயங்கொலி சொற்கள் என்றால் என்ன மற்றும் ஒரு சில மயங்கொலி சொற்களை படித்தறிவோம் வாங்க.

மயங்கொலிச் சொற்கள் யாவை?

  • தமிழில் உள்ள சொற்களில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான ஒலிப்பை உடைய, ஆனால் வேறுபட்ட பொருளை உடைய சொற்களை மயங்கொலி சொற்கள் என்கிறோம். உச்சரிப்பில் சிறிதளவு வேறுபாடு உள்ள ஒலிகளை மயங்கொலிகள் என்கிறோம்.
  • இந்த சொற்களில் உள்ள எழுத்துக்கள் எது சரி, எது தவறு என்று கண்டுப்பிடிக்க முடியாத அளவிற்கு மயங்க வைப்பதால் இதனை மயங்கொலி சொற்கள் என்று அழைக்கப்படுகிறது.

மயங்கொலிச் சொற்கள் எடுத்துக்காட்டு:

இலை – இழை 

மேலே உள்ள சொற்களை உச்சரிக்கும் போது அவற்றின் ஒலியில் சிறிதளவு மாற்றம் தான் தெரிகிறது, ஆனால் இவை இரண்டின் சொற்களின் பொருள் முற்றிலும் வேறுபட்டது.

மயங்கொலி எழுத்துக்கள் எத்தனை:

Mayangoli Eluthukkal: இந்த எழுத்துக்கள் மொத்தம் எட்டு வகை அவை ண, ன, ந, ல, ழ, ள, ர, ற ஆகிய எட்டும் மயங்கொலி எழுத்துக்கள் ஆகும்.

  • ண – டண்ணகரம் (டகரமும், ணகரமும் ஒரே இடத்தில் நாக்கை தொட்டு உச்சரிப்பதால் உருவாகிறது)
  • ன – றன்னகரம் (‘றகரமும்’ ‘னகரமும்’ ஒரே இடத்தில் நாக்கைத் தொட்டு உச்சரிப்பதால் பிறக்கிறது)
  • ந – தந்நகரம் (‘தகரமும்’ ‘நகரமும்’ ஒரே இடத்தில் நாக்கைத் தொட்டு உச்சரிப்பதால் உருவாகிறது)
  • ல – லகரம் (மேல் பற்களின் அடியை தொடுவதால் பிறக்கிறது)
  • ழ – மகர ழகரம் (நாவின் நுனி மேல்நோக்கி வளைந்து வருவதால் தோன்றும்)
  • ள –  ளகரம் (பொது) (மேல் அன்னத்தின் நடுப்பகுதியை தொடுவதால் தோன்றும்)
  • ர – இடையின ரகரம் (நாக்கு மேல் அன்னத்தை தொட்டு வருவதால் தோன்றும்)
  • ற – வல்லின றகரம் (மேல் அன்னத்தின் மையப்பகுதியை உரசுவதால் தோன்றும்)

மயங்கொலிச் சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக:

  1. இரண்டாவது தளத்தில் பள்ளிக்கூடம் உள்ளது. அறிவை கற்றுத்தரும் பள்ளிக்கூடம் வழிபாட்டு தலமாகும்.

(தளம்/ தலம்)

2. சூடு தாங்க முடியாமல் சுமித்ரா பாலை கொட்டினாள் பால் பாழானதை எண்ணி சுமித்ரா வருந்தினாள்.

(பால்/ பாழ்)

3. பூமியின் கோள வடிவத்தை அடிப்படையாக கொண்டு சங்கீதா கோலமிட்டாள்

(கோளம்/ கோலம்)

4. அணையில் வெள்ளம் வந்தது, உழவர்களுக்கு மனம் வெல்லக்கட்டியாய் இனித்தது

(வெள்ளம்/ வெல்லம்)

5. கோவிலை வலப்பக்கமாக சுற்றி வந்தால் வளமாக வாழலாம் என்று தாத்தா கூறினார்

(வலம்/ வளம்)

தமிழ் கலைச்சொற்கள்

மயங்கொலிச் சொற்கள்:

Mayangoli Sorkal Tamil (ண, ன, ந வேறுபாடு)
அணல் தாடி, கழுத்து
அனல் நெருப்பு
அணி அழகு
அனி நெற்பொறி
அங்கண் அவ்விடம்
அங்கன் மகன்
நாணம் வெட்கம்
நானம் புனுகு, கவரிமான்
பண் இசை
பன்  அரிவாள், பல
பாணம் நீருணவு
பானம்  அம்பு
புண் காயம்
புன் கீழான
மணம் வாசனை, திருமணம்
மனம் உள்ளம்
முணை வெறுப்பு, மிகுதி
முனை முன்பகுதி, துணிவு, முதன்மை

தமிழ் மயங்கொலி எழுத்துக்கள்:

மயங்கொலிச் சொற்கள் பொருள் (ல, ழ, ள பொருள் வேறுபாடு)
அலத்தல் அலட்டல், அலைதல்
அளத்தல் அளவிடுதல், மதித்தல்
அலை  கடல், நீரலை, அலைதல்
அழை கூப்பிடு
உலவு நட
உளவு ஒற்று
உழு நிலத்தை உழு
உளு உளுத்துப் போதல்
ஒலி சப்தம், நாதம், காற்று
ஒழி அழி, தவிர், கொல், துற
கலகம் போர், அமளி, இரைச்சல்
கழகம் சங்கம், கூட்டமைப்பு
வலி நோய், வலிமை, துன்பம்
வழி நெறி, பாதை, தடம், உபாயம்
வளி காற்று

தமிழ் மயங்கொலிச் சொற்கள்:

மயங்கொலிச் சொற்கள் ர ற பொருள் (ர, ற வேறுபாடு)
அரவு பாம்பு
அறவு அறுதல், தொலைதல்
அரம் ஒரு கருவி
அறம் தர்மம், நீதி, கற்பு, புண்ணியம், கடமை, அறநூல், துறவறம்
அக்கரை அந்தக் கரை
அக்கறை ஈடுபாடு
அரை பாதி, மேகலை, வயிறு, ஒரு மரம்
அறை வீட்டின் பகுதி, அடி, பாத்தி, ஒலி, பாசறை, சொல், குகை, வஞ்சனை, மாளிகை
அருமை சிறப்பு, அன்பு, இன்மை, சுலபத்தில் கிடைக்காதது
அறுமை நிலையின்மை, ஆறு
ஆரல் ஒரு வகை மீன்
ஆறல் சூடு குறைதல்
இரத்தல் யாசித்தல்
இறத்தல் இறந்துபோதல், சாதல்
இரவு இரவு நேரம், யாசித்தல்
இறவு மிகுதி, இறால்மீன், இறுதி, தேன்கூடு, சாவு, முடிவு, நீக்கம்

 

ஒரு சொல் பல பொருள் தரும் சொற்கள்

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement