மாமல்லபுரம் சிற்பங்களின் பட்டியல் | Mamallapuram Sirpangal

Mamallapuram Sirpangal

மாமல்லபுரத்தின் சிறப்புகள் | Mamallapuram Sirpangal in Tamil

இந்த உலகத்தில் எத்தனையோ இடங்கள் சுற்றி பார்ப்பதற்கு என்று பல சுற்றுலா தலங்கள் உள்ளன. தமிழகத்தில் சுற்றி பார்ப்பதற்கும், ரசிப்பதற்கும் முக்கிய இடங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது மாமல்லபுரத்தில் இருக்கும் சிற்பங்கள் தான். மாமல்லபுரத்திற்கு மகாபலிபுரம் என்ற வேறு பெயறும் உண்டு. இந்த கோவிலை கட்டியவர் இராஜசிம்ம பல்லவர் ஆவார். இந்த கோவிலில் 440 புராதன சின்னங்களையும் 45 அடி உயரத்தையும் கொண்டுள்ளது. மாமல்லபுர சிற்பங்களின் மேலும் பல சுவாரசியமான தகவல்களை கீழே விரிவாக இந்த தொகுப்பில் படித்து அறிந்து கொள்ளலாம் வாங்க.

மாமல்லபுரம் பெயர் காரணம்:

Mamallapuram Sirpangal

நரசிம்ம மாமல்ல அரசர் தனது தந்தையுடன் சுற்றுலா செல்லும்பொழுது அவர் ஒரு பாறையின் மீது படம் வரைந்தார், அதை பார்த்த அவர் தந்தைக்கு பாறைகளில் அழியா கோவில்கள் கட்டலாம் என்ற யோசனை தோன்றியது. அதனால் அவர் தந்தை தனது மகன் பெயரை அந்த கோவிலுக்கு சூட்டினார்.

மாமல்லபுரத்தில் எத்தனை வகை சிற்பங்கள் உள்ளன:

இந்த மாமல்லபுரத்தில் நான்கு வகை கல் சிற்பங்கள் உள்ளன அவை

 1. குடைவரை கோவில் அல்லது மண்டபங்கள்
 2. ஒற்றைக்கல் கோயில்கள் அல்லது இரதங்கள்
 3. கட்டுமான கோவில்
 4. படைப்பு சிற்பங்கள்

சிறப்புகள் – மாமல்லபுரம் சிற்பங்கள்:

 • இந்த குடைவரை கோவில் மலையை குடைந்து கட்டப்பட்ட குகை கோவில் ஆகும். ஒரே பாறையில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் இவையெல்லாம் மாமல்லபுரத்தில் சிறப்பு வாய்ந்தவை.
 • எலிகள் விளையாடுவது போன்ற சிற்பங்கள், பூனை தவம் செய்வது போன்ற சிற்பங்கள், யானை கூட்டங்கள், பெண் பார்க்கும் குரங்கு, இயற்கை காட்சிகள், பின் காலால் ஒரு ஆண் மான் அதன் மூக்கை தொடுவதும் அதை பார்த்து ரசிக்கும் பெண் மான் போன்ற சிற்பங்கள் அவ்வளவு அழகாக செதுக்கப்பட்டுள்ளன. மேற் கூறப்பட்ட சிற்பங்கள் அனைத்தும் கல்லில் செதுக்கப்பட்டுள்ளன.
 • முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி மாமல்லபுரத்தை சுற்றிப்பார்க்க வந்த போது அருச்சுனன் தபசு என்ற புடைப்பு சிற்ப தொகுதியில் உள்ள மான்களின் அழகை ரசித்து உள்ளார். இந்த மான்களின் சிற்பம் நாம் பயன்படுத்தும் 10 ரூபாய் நோட்டுகளிலும் அச்சிட்டுள்ளனர்.
 • புடைப்பு சிற்பங்கள் என்பது நாம் நான்கு பக்கத்தில் இருந்து பார்த்தாலும் முப்பரிமாண அமைப்பை கொண்டுள்ளது. இந்த சிற்பங்கள் சுவரில் ஒட்டி இருப்பது போலவும், வெளியில் தள்ளி கொண்டிருப்பது போலவும் காட்சி அளிக்கின்றன.

மண்டபங்கள் – Mamallapuram Sirpangal:

 • வராக அவதாரம், வராக மண்டபம்
 • மகிடாசுரமர்த்தினி மண்டபம்
 • இராமானுச மண்டபம்
 • மும்மூர்த்திகள் மண்டபம்
 • கோடிக்கல் மண்டபம்
 • கோனேரி மண்டபம்
 • அதிரணசண்ட மண்டபம்

இரதங்கள் – Mamallapuram Sirpangal in Tamil

 • ஐந்து இரதங்கள்
 • வலையன்குட்டை இரதம்
 • பிடாரி இரதங்கள் எனப்படும் இரு இரதங்கள்
 • கணேச இரதம்

ஐந்து இரதங்கள் – மாமல்லபுரம் சிற்பங்கள்:

 • தர்மராஜ ரதம்
 • பீம ரதம்
 • அருச்சுன ரதம்
 • திரௌபதை ரதம்
 • நகுல சகாதேவ இரதம்

கட்டுமான கோவில் – மாமல்லபுரம் சிற்பங்கள்:

 • முகுந்தநாயனார் கோயில் இந்த கோயில் தரையில் கட்டப்பட்டு உள்ளது.
 • உழக்கெண்ணெய் ஈசுவரர் கோயில் இந்த கோயில் மலைமீது கட்டப்பட்டு உள்ளது
 • கடற்கரைக் கோயில்கள் இந்த கோயில் கடலோரத்தில் கட்டப்பட்டு உள்ளது.

மாமல்லபுரம் புடைப்புச் சிற்பங்கள்:

 • அருச்சுனன் தபசு
 • வராகமூர்த்தி சிற்பம்
 • மகிடாசுரமர்த்தினி சிற்பம்
 • கோவர்த்தன மலை சிற்பம்
தமிழ்நாட்டில் உள்ள சிறப்பு வாய்ந்த 28 சிவ தலங்களின் விவரங்கள்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார் திருக்கோயிலின் சிறப்பு

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil